27.10.08

எதற்கய்யா தீபாவாளி கொண்டாடனும்??மானமுள்ள தமிழர்களிடத்தில் ஒரு கேள்வி.

ம்
எதற்காக தீபாவளியை நாம் கொண்டாட வேண்டும்??

ஈழத்தில் எமது மக்கள் சொல்லிலடங்கா துயரங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் பொழுது தீபாவாளி என்ற பெயரில் ஓர் அனாவாசிய ஆர்ப்பாட்டங்கள் நமக்கு தேவைதானா??
ஒரு வேளை உணவு கூட இன்றி பசியிலே நமது குழந்தைகள் அங்கே வாடிக்கொண்டிருக்கும் போது,நாம் மட்டும் இங்கே கோழி,ஆடு என்று விழுங்குவதற்காகத்தான் இந்த தீபாவாளி ஒரு சாக்கா??
மழைக்குக்கூட ஒதுங்க இடமில்லாமல், மர நிழலிலும்,சாலை ஓரங்களிலும் பொழுதுகளை கழித்து,பாம்பு கடிக்கு ஆளாகி எமது தமிழன் அங்கே செத்துக் கொண்டிருக்கும் போது,நமது வீடுகளை சுற்றியும் வண்ண விளக்குகள் பொருத்தி ஒரு கொண்டாட்டம் தேவைதானா??

அங்கே எமது குழந்தைகள் விமான குண்டு வீச்சுக்கு அஞ்சி, பள்ளிக்கு செல்லாமல் பதுங்குக்குழிகளில் ஒழிந்துக் கொண்டிருக்கும் பொழுது,நாம் இங்கே வானவெடிகளையும் மத்தாப்புகளையும் சுழற்றி விளையாடுவது நியாயமா??

நமது தமிழர் மரபுப்படி,குடும்பத்தில் மரணம் சம்பவித்து விட்டால்,அடுத்த ஒரு வருடத்திற்கு எந்தவொரு பெருநாள்களையும் கொண்டாடாமல் துக்கம் அனுசரிப்பது முறை. ஈழத்தில் நமது சகோதரனும்,சகோதரியும், நமது தாய்மார்களும், நமது குழந்தைகளும் நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கில் செத்துகொண்டிருக்கும் பொழுது இங்கே எந்தவொரு சலனமுமில்லாமல் தீபாவாளி என்ற பெயரில் கண்டதையும் தின்று, கண்டபடி உடை அணிந்து, மது மயக்கத்தில் திளைத்திருக்கும் நாம் தமிழர் மரபுவழி வந்தவர்களா??

நாம் தீபாவளியை எப்படி கொண்டாடினாலும் சரி, ஈழத்தில் அழிந்துக்கொண்டிருக்கும் எமது தமிழர்களை இந்த வேளையில் சற்று நினைத்துப் பார்ப்போம்!!

3 comments:

Anonymous said...

Naan intha karutthai varavetkiren. Namathu Tamil inam thuyaratthil irukkum pothu naam matthum kuthuugalakondattham kolvathu mirugathanam. Intha varudam thibavalikku nan evaraiyum santhikka pogavillai. en vitthilaeye adaipatthu kidakkiren. Karanam manathil magilchium nimmathiyum illai. En inam indrum oru sila modern day naragasuran-galal kodummaikku ullavathai ninaitthu antha aandavanidamae mandradugiren.

தாய்மொழி said...

தமிழை வாழ வைத்துக்கொண்டிருக்கும் உங்களுக்கு எனது அன்பார்ந்த வணக்கங்களும் நன்றியும் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம். மேன்மேலும் உங்கள் முயற்சி தொடர இறைவனை பிரதிக்கின்றோம். மனித உரிமையை பற்றி மிகுந்த ஆவலுடன் கருத்துக்கள் வெளியிட்டிருப்பது என்னை கவர்ந்துள்ளது. மானிட பிறவிகளிடம் அன்பு செலுத்துவதை எண்ணி மகிழ்கிறேன்.

சுப.நற்குணன்,மலேசியா. said...

<"மலேசியத் தமிழ் வலைப்பதிவர்களுக்கு ஓர் அன்பு வேண்டுகை">

*நவம்பர் 25 - மலேசியத் தமிழர் (இந்தியர்) எழுச்சி நாள்

*நவம்பர் 26 - தமிழினத் தளபதி வேலிப்பிள்ளை பிரபாகரன் பிறந்தநாள்

*நவம்பர் 27 - தமிழின விடுதலைக்காகப் போராடி இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்கள் நாள்

மேற்கண்ட 3 நாள்களும் நமக்கு மிக மிக முக்கியமான நாள்கள் - நினைத்துப் பார்க்க வேண்டிய வரலாறு நாள்கள் - தமிழரின் ஒற்றுமையைப் பறைசாற்றும் நாள்கள் - தமிழரின் வீரத்தை உலகத்தின் செவிகளில் உரக்கச் சொல்லும் நாள்கள்.

இந்த 3 நாள்களையும் போற்றுகின்ற வகையில் அன்றைய நாள்களில் சிறப்புப் பதிவிடுமாறு மலேசியத் தமிழ் வலைப்பதிவர்களை அன்புடன் வேண்டுகிறேன்.

மலேசியத் தமிழ் வலைப்பதிவர் நாம் அனைவரும் ஒருமித்த உணர்வையும் - விடுதலை உணர்வையும் ஒருசேர காட்டுவோம்..! வாரீர்..!

அன்புடன்,
திருத்தமிழ் ஊழியன்
சுப.நற்குணன்