31.1.08

ஹிண்ட்ராஃப் முடிந்து விட்டதா??


ஹிண்ட்ராஃப் எப்போதோ ஆரம்பித்து,எப்போதோ முடிந்து விட்டது;ஹிண்ட்ராஃப் என்ற போர்வையில் மெழுகு வர்த்தியை ஏந்திகிட்டு போறாங்க,இது நமது கலாச்சாரம் அல்ல!!இதெல்லாம் அரசியல் கபட நாடகம்!!கோவில்களில் பிரார்த்தனைக் கூட்டம் என்ற போர்வையில் பிரச்சாரம் பண்றாங்க,இதெல்லாம் முறையில்லை!!

- திருவாய் மலர்ந்து இருக்கிறார் மாண்புமிகு அமைச்சர் டத்தோஸ்ரீ ச.சாமிவேலு.

ஹிண்ட்ராஃப் எப்போது ஆரம்பித்தது என்பது மாண்புமிகு அமைச்சருக்கு தெரியுமா என்று தெரியவில்லை!!

இருந்தாலும் கூறுகின்றேன்.......

ஏறக்குறைய 5 ஆண்டுகளுக்கு முன்பு,மூர்த்தி என்ற ராணுவ வீரர் ஒருவர்(1998 எவரெஸ்ட் மலையேறும் திட்டத்திலும் இவர் கலந்து கொண்டவர் ஆவார்) மரணமடைந்த பின் ஒரு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.மூர்த்தி என்பவர் சில வருடங்களுக்கு முன்பு இஸ்லாத்தை தழுவி விட்டதாகவும்,ஆகவே மூர்த்தியின் சடலம் இஸ்லாத் முறைப்படித்தான் அடக்கம் செய்யப்பட வேண்டும் என,திடிரென்று அறிவிப்பு வந்தது மூர்த்தியின் ம்னைவிக்கு.அவர் அந்த நொடியில் எப்படி உடைந்து போயிருப்பார்??!

அப்பொழுது வழக்கறிஞர் சிவநேசன் அவர்கள் மூர்த்தியின் மனைவிக்கு உதவிக்கரம் நீட்டினார்.இந்த விஷயத்தை சட்டப்படி கையாள முடிவு செய்து கோலாலம்பூரில் உள்ள உயர் நீதிமன்றத்தை நாடினார்கள்.ஆனால்,உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்த அன்றைய தினமே,சிலாங்கூர் மாநில இஸ்லாமிய இலாகா மூர்த்தியின் சடலத்தை கோரி மருத்துவமனையில் மனுக்களை தாக்கல் செய்தது.அதற்கு மூர்த்தியின் குடும்பத்தாரும்,வழக்கறிஞர் சிவநேசனும் கடும் எதிர்ப்பு தெரிவித்த பொழுதிலும்,மருத்துவமனை அதிகாரிகள் சடலத்தை இஸ்லாமிய இலாகாவிடம் ஒப்படைக்க தயாரானர்கள்.

அங்கு ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தை அடுத்து ஏற்க்குறைய 2000(குல்லா அணிந்த) இஸ்லாமியர்களை மருத்துவமனைக்கு வெளியில் குவித்தது சிலாங்கூர் இஸ்லாமிய இலாகா!!!

அப்போது இந்த செய்தியை அறிந்து நம்மவர்கள் ஏற்க்குறைய 400 பேர் வழக்கறிஞர் வேதமூர்த்தி அவர்களின் தலைமையில் ஒன்று கூடினர்.அதுதான் ஹிண்ட்ராஃப்-இன் பிற்ப்பு.அவர்கள் 2000 பேர்,நம்மவர்களோ வெறும் 400 பேர்.அப்படி இருந்தும் அன்று அந்த சடலத்தை அவர்கள் கைப்பற்றி விடாமல் காத்தனர்.(அதன் பிறகு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில்தான் மூர்த்தியின் சடலம் இஸ்லாமிய இலாகாவிடம் ஒப்படைக்க பட்டது என்பது குறிப்பிட தக்கது.)

இது மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு தெரியுமா என்று தெரியவில்லை!!
எப்பவோ ஆரம்பித்ததாம்!!மன்னாங்கட்டி!!
எப்பவோ முடிந்து விட்டதாமே??உண்மையா??

மாண்புமிகு அமைச்சர் அவர்கள் கனவு லோகத்தில் இருக்கிறாரோ??(இந்திர லோகத்தில் நா.அழகப்பன்,என்பதைப் போல் கனவு லோகத்தில் ச.சாமிவேலு என்று திரைப்படம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை)

அமைச்சரே,வருகின்ற 16-02-2008 அன்று தெரியும் உங்களுக்கு முடிந்தது ஹிண்ட்ராஃபா அல்லது மஇகாவா என்று!!

எங்கள் தங்கமான் சிங்கங்களை சிறையில் அடைத்து விட்டு நீங்கள் விடும் வாய்ச்சவடால் இருக்கிறதே,தாங்க முடியலப்பா.ஹிண்ட்ராஃப் என்ற ஒன்று முடிந்து விட்டது என்பதை அதை வைத்து நீங்கள் கூறுகிறீர்கள்??

அந்த ஐவரையும் சிறையில்தான் உங்களால் அடைக்க முடிந்தது,அவர்கள் எங்களுக்குள் விதைத்த எழுச்சியை உங்களால் ஒன்றும் செய்து விட முடியாது!!

அதன் வெளிப்பாடுதான் நாடளாவிய நிலையில் நடக்கும் பிரார்த்தனைக் கூட்டங்கள்!!

அதைக் கண்டும் வயிற்றெரிச்சல் உங்களுக்கு!!
எத்தனை இடங்களில் பிரார்த்தனை கூட்டங்களை தடுத்து நிறுத்த உங்களின் அடிவருடிகள் முயன்றனர்,முடிந்ததா உங்களால்??
முடியவில்லையே!! ஏன்??

ஏனென்றால்,இந்த எழுச்சிக்குப் பெயர் மக்கள் சக்தி!!
மக்கள் சக்தி,மகேசன் சக்திக்கு சமம்!!!

பிறகு,மெழுகுவர்த்தி ஊர்வலத்தை பற்றி கூறியிருக்கிறீர்கள்!!
மெழுகுவர்த்தி ஏந்தி நடப்பது அமைதியின் அடையாள்ம் என்பது உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளும் ஏற்றுக் கொண்ட ஒன்று என்பது உமக்கு தெரியாதோ??

அது நமது க்லாச்சாரம் இல்லை என்றும் கூறியிருக்கிறீர்கள்,பொய் சொல்வது மட்டும் நமது கலாச்சாராமோ??(பத்துமலையில் 9,50,000 பேர் என்றீர்களே!!)

கோவில்களில் அரசியல் பிரச்சாரம் நடக்கிறது என்று கொதித்திருக்கிறீர்,இவ்வளவு நாள் நீங்களும் உங்கள் பட்டாளமும் கோவில்களில் அடித்த் கொட்டங்களை மறந்து விட்டீரோ??

நீங்கள் கோவில்களில் அரசியலை மட்டுமா நுழைத்தீர்,ஊழலையும் சேர்த்தல்லவா நுழைத்தீர்கள்!!(மிக சிறந்த உதாரணம்,கோலாலம்பூர் மகா மாரியம்மன் தேவஸ்தானம்).
இன்று ஆலயங்கள் சமுதாய விழிப்புண்ர்வை ஏற்படுத்துவது உங்களுக்கு பொறுக்கவில்லை!!உடனே தாண்டவம் ஆடுகின்றீர்கள்!!

ஐயா,சாமிவேலரே,
போதுமய்யா,போதும்!!!
இதோடு நிறுத்தி விடுங்கள்!!
மீண்டும்,மீண்டும் ஏதாவது உள்றிக் கொண்டிருக்காதீர்கள்!!

உங்கள் உளறல்கள் இனியும் எடுபடாது!!

ஏனென்றால்,
அரசாங்கம்தான் உங்கள் பக்கம்,ஆண்டவன் எங்கள் பக்கம்!!

மக்கள் சக்தி வெல்லும்!!

No comments: