14.5.08

இந்தராஃப் தலைவர்களின் மேல்முறையீடு (மீண்டும்)நிராகரிப்பு!!


தெரிந்த கதைதான் என்கிறீர்களா??
இருந்தாலும் இதை சொல்ல வேண்டியது எனது பொறுப்பு!!

எனது இனத்திற்கு சமஉரிமை கேட்டு போரடிய குற்றத்திற்காக தடுப்பு காவல் முகாமில்,அடிப்படை மருத்துவ வசதியைக் கூட பெற முடியாத நிலையில் வாடிக்கொண்டிருக்கும் எங்கள் உரிமைப்போராளி சிங்கங்களை நினைத்து மனம் கனக்கிறது.

அதிலும் இந்த போரட்டத்தின் உந்துதல் சக்தியான அண்ணன் உதயக்குமார்,நீரிழவு நோயால் கடும் பாதிப்புக்குள்ளாகி,இருதய பலவீனம் அடைந்திருப்பதாக வரும் செய்தியைக் கேட்டு,உரிமைக்குரல்வளை இதுநாள் வரையிலும் நெரிக்கப்பட்டு வந்த தமிழன்;நவம்பர் 25ஆம் தேதி மாநகரின் சாலைகளில் குவிந்த லட்ச தமிழர்களில் ஒருவர் கூட வருத்தமடையாமல் இருக்க மாட்டார்கள்!!

குட்ட,குட்ட குனியும் இனமாக இருந்த மலேசிய தமிழினத்திற்கு குட்டவும் தெரியும்,என்று உணர்த்திய இந்த மறத்தமிழனின் நிலைமையை நினைக்கும்போது கண்கள் கலங்குகிறது,இதயம் இன்னும் கனக்கிறது!!

ஒவ்வொரு தாயுக்கும்,அன்னையர் தினத்தன்று பரிசு பொருட்கள் கிடைக்கும்.ஆனால்,இந்த தவப்புதல்வனை பெற்ற தாயோ,மகஜரோடு பிரதமர் அலுவலகம்,நாடாளுமன்றம் என்று ஏறி,இறங்கி கொண்டிருக்கிறார். மகன்களிடமிருந்து பரிசுகளை எதிர்பார்க்காமல், மகன்களுக்கு விடுதலை பரிசு அளிக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டிருக்கிறார்.கேட்குமா பிரதமரின் "பெரிய காதுகளுக்கு"??

கண்டிப்பாய் கேட்காது!!

பிப்ரவரி 16,பச்சிளம் குழந்தைகள் என்று கூட பாராமல்,கண்ணீர் புகை குண்டுகளையும்,இரசாயன கலவை நீரையும் அடித்த அரசாங்கத்தின் தலைவர்தானே அவர்!!பாவம் அவர்தான் என்ன செய்வார்,மாபெரும் அலையால் பாதிக்கப்பட்ட தனது கூட்டணி கப்பலை சரிபார்க்கவே நேரம் இல்லை!!ஆண்வம் அழிந்தது என்ற்ய் நினைத்தோம்.சில உடனடி நடவடிக்கைகள் அப்படிதான் காட்டின!!

அதிலும் புதிதாக பதவியேற்ற தே.மு அரசு,நீதித்துறையில் தலையிடா கொள்கையை கடைப்பிட்டிக்கப்போவதாகவும் அறிவித்தது!!ஆனால்,இசா,ஒசா போன்ற தேவையில்லா சட்டங்களை அகற்ற முன்வராதது,இவர்களின் உண்மை போக்கு எப்படியிருக்கும் என்பது புரியாமல் வைத்திருந்தது!!

மே மாதம் 15ஆம் தேதி,அதுவும் புலப்பட்டது!!
நாடாளுமன்றத்தில் அரச உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை சமர்ப்பித்த உள்துறை அமைச்சர்,டத்தோஸ்ரீ சைய்ட் அமீட் அல்பார்,இசா சட்டம் அகற்றப்படாது என்பதை உறுதியாக எடுத்துக்கூறினார்.

இதே தினத்தில்,புத்ராஜெயாவில் உள்ள நீதி மாளிகையும்,இந்த்ராஃப் தலைவர்களின் மேல்முறையீடும் நிராகரிக்கப்பட்டது!!

வெளிப்படையான(transperancy) கொள்கையை கடைப்பிடிக்கப் போவதாக கூறிய தே.மு அரசு,அதெல்லாம் வெறும் வார்த்தை ஜாலம் என்பதை நிருபித்துள்ளது!!அப்படி இல்லையென்றால்......

கொடுங்கோல் இசா சட்டம் இன்னும் எதற்கு??
இந்த்ராஃப் தலைவர்களை விடுவிக்காதது ஏன்??

பதில்.......

கொடுங்கோல் இசா சட்டத்தை உபயோகித்து அரசியல் எதிரிகளின் குரல்வளையை நெரிக்கலாம்!!

12வது பொதுத்தேர்தலில் அம்னோ வாங்கிய அடிக்கு,இந்த்ராஃபின் எழுச்சியும் ஒரு காரணம் என்பதால்தான் இன்னும் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்!!இப்பொழுது விட்டுவிட்டால்,இன்னும் 5-6 மாதங்களில் ஆட்சி மாறும்போது இவர்கள் வெளிய வந்த பின் ஒன்றும் செய்ய முடியாது!!இப்பொழுதே இவர்களுக்கு "ஆஜார்" பண்ணிவிடலாம் என்பதுதான் தே.முவின் தீய நோக்கமாகும்!!

வாய்ஜாலம் காட்டுவதில் ஒன்னும் குறைவில்லை!!

செயல்களில்தான் எல்லா குறைகளுமே!!

பலிவாங்கும் படலத்தை முதலில் நிறுத்தட்டும்;பிறகு பார்க்கலாம்,நீதித்துறை சீரமைப்பு மன்னாங்கட்டி எல்லாம்!!!


No comments: