பிரபல வலைப்பதிவாளர் ராஜா பெட்ரா,சின் சியு டேய்லி நிருபர்,செபுத்தே நாடாளுமன்ற உறுப்பினரும்,கின்ராரா சட்டமன்ற உறுப்பினரும்,சிலாங்கூர் மாநில அரசின் ஆட்சிக்குழு உறுப்பினருமான தெரெசா கோக் ஆகியோர் உள்நாட்டு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்
செபூத்தே எம்.பி தெரேசா கோக்
ஏறக்குறைய 21 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட ஒப்பராசி லாலாங் இசா கைது படலத்தை தேசிய முன்னணி அரசாங்கம் கையில் எடுத்துள்ளது.
ஏறக்குறைய 21 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட ஒப்பராசி லாலாங் இசா கைது படலத்தை தேசிய முன்னணி அரசாங்கம் கையில் எடுத்துள்ளது.
அன்வார் தலைமையிலான மக்கள் கூட்டணி எவ்வேளையிலும் ஆட்சியை கைப்பற்றலாம் என்பதால்,மக்கள் மத்தியில் பதற்றத்தை உருவாக்கி ஆட்சியில் நீடிக்க துடிக்கிறது,முட்டாள் தேசிய முன்னணி தலைமைத்துவம்.
21 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலை வேறு,இப்பொழுது இருக்கும் நிலை வேறு என்பதை மறந்து இவர்கள் செயல்படுகிறார்கள் என்றே தோன்றுகிறது.
இனங்களுக்கிடையே ஒற்றுமையை வளர்க்க வேண்டும் என்று கபட நாடகம் ஆடும் தேசிய முன்னணி,இனவாதத்தை ஆதரிக்கின்றது,இன மோதல்களை உருவாக்க அடி போடுகிறது என்ற கூற்று நிருபணமாகியுள்ளது.
அம்னோவின் தலை முதல் கால் வரை இனவாத விஷம் உள்ளது.
அந்த விஷத்தை பல வேலைகளில் அம்னோவின் தலைவர்கள் கக்கி வந்துள்ளதை நாம் அறிவோம்.இந்த விஷ கக்கல்களுக்கெல்லாம் ஆரம்பமாக அமைந்தது 1969 மே 13 இனக்கலவரம்.
சுவாராம் இயக்குனர் இருவர் எழுதியுள்ள மே 13 என்ற புத்தகத்தில் மறைக்கப்பட்டுள்ள பல உணமைகள் வெளிச்சம்போட்டுக் காட்டப்பட்டுள்ளது.
மே 13 இனக்கலவரத்துக்கு முழுக்காரணம் ராசாக் மற்றும் மாகதீர் போன்ற ராசாக் ஆதரவாளர்கள் என்பதை இப்புத்த்கம் விவரிக்கின்றது.
துங்குவை பதவியில் இருந்து விலக்குவதற்காக ராசாக & மகாதீர் கூட்டணி நடத்தியதுதான் மே 13 இரத்தக் கலவரம்.
துங்குவிடமிருந்து ஆட்சியை பறிப்பதற்கு அப்பாவி மக்களைக் கொன்றது அம்னோவின் இரண்டாம் தலைமுறை தலைமைத்துவம்.
அதன் பிறகு,கலவரத்தை காட்டியே மக்களை ஏமாற்றி வந்தது அம்னோ.
1987, அம்னோவிற்குள் மீண்டும் பதவி போராட்டம்......
துங்கு ராசாலி மகாதீர் தலைமைத்துவத்திற்கு எதிராக கொடி பிடிக்கிறார்.
மகாதீர், சீனர்களுக்கும்,மலாய்க்காரர்களுக்குமிடையில் பதற்றத்தை ஏற்படுத்தி அப்பொழுது கடவிழ்த்து விட்டதுதான் ஒப்பராசி லாலாங்.
இப்பொழுது 2008 இல், அம்னோ தலைமைத்துவத்தை மட்டுமல்ல, நாட்டின் தலையெழுத்தே மாற்றப்படப்போவதை தடுப்பதற்காக அம்னோ ஏற்படுத்தப் பார்க்கும் பதற்றம்,இந்த இசா கைதுகளின் மூலம் வெளிப்பட்டுள்ளது.
சீனர்கள் இந்த நாட்டில் வெறும் குடியேறிகள் என்று சொல்லிவிட்டு அதற்காக வருத்தம் கூட தெரிவிக்காத அம்னோவின் டத்தோ அகமாட்டுக்கு வெறும் 3 ஆண்டுகள் அம்னோவிலிருந்து இடைநீக்கம்.
அந்த இனவெறியனின் இனவாதத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டிய பத்திரிக்கை நிருபருக்கு இசா சட்டம்.
என்ன நியாயம் இது??
சகோதர இனத்தை கீழ் தரமாக விமர்சிக்கும் ஒருவனுக்கு எந்த தண்டனையும் இல்லை.
அவனின் இனவாத முகத்திரையைக் கிழித்த நிருபருக்கு இசா சட்டம்.
உண்மைகளை அம்பலபடுத்தும் வலைப்பதிவாளருக்கு இசா சட்டம்.
அம்னோவின் அடக்குமுறைகளை எதிர்க்கும் எதிர்கட்சி தலைவர் ஒருவருக்கு இசா சட்டம்.
எங்கள் இனத்தின் உரிமையைக் கேட்டதற்காக எங்கள் உரிமைப் போராளிகளுக்கு இசா கைது.
இதுதான் அம்னோவின் தத்துவம்.
உண்மையை கூறுபவர்கள்,எழுதுபவர்கள்,அம்னோவின் அராஜாகத்தை எதிர்ப்பவர்கள்தான் தேசத்தின் அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள், அவர்களுக்கு கிடைப்பது விசாரணை இல்லா தடுப்புக்காவல்!!
இனவாதத்தை உதிர்ப்பவன்,கிரிஸ் கத்திக்கு முத்தமிடுபவன்,சகோதர இனத்தை அவமதிப்பவன்,இவர்களுக்கெல்லாம் பதவியும் பட்டமும்!!
அம்னோவின் அராஜகம் மீண்டும் தலைத்தூக்கியுள்ளது....
இசா கைதுகள் மேலும் தொடரலாம்.....
மக்களின் உரிமைக்குரலவளையை நெறிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர் அம்னோ மூடர்கள்.
அராஜகத்துக்கு அஞ்சாமல்,உரிமைக்காக இந்நாட்டின் மக்கள் வெகுண்டெழுந்து அம்னோவின் இனவாதத்தை விரட்டியடிக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை.
மக்கள் குரல் நிச்சயம் வெல்லும்!!!!
No comments:
Post a Comment