எனது உரிமைப்போர் வலைப்பதிவில் பொதுவாக நான் சினிமாவைப் பற்றி எழுதுவதில்லை!!
சினிமாவை வெறும் பொழுதுபோக்கு அங்கமாக பார்ப்பவன் நான்;ரசனையின் உச்சநிலையை அடைவதின் மூலமே,ஒரு திரைப்படத்தை விமர்சிக்கமுடியும் என்பது எனது கருத்து.
மிக அண்மையில் நான் ரசித்த தமிழ் திரைப்படம், தசாவதாரம்.
வைணவக்கொள்கைகளை அறவே ஏற்றுக்கொள்ள மறுக்கும் என்னைப்போன்றவர்களையும் வைணவத்தலைப்புடைய இப்படம் ஈர்த்து விட்டிருந்தது என்பதுதான் உண்மை.
கலைஞானி என்ற அடைமொழி தனக்கு சாலப்பொறுந்தும் என்பதை கமல் மீண்டும் நிருபித்துள்ளார்.தமிழ் திரைப்படத்துறையை உலக அளவுக்கு கொண்டுசென்றுள்ளார் கமல்.பத்து வேடங்களில்,பத்து வித்தியாசமான பரிணாமங்களை திரையில் காட்டியிருக்கிறார்.
உரிமைப்போர் என்ற இந்த வலைப்பதிவில் நான் சம்பந்தமில்லாமல் சினிமாவை இழுக்கவில்லை!!
தமிழ் திரையுலகை உலக் பரிணாமத்திற்குக் கொண்டுச்சென்ற உலகநாயகன், தசாவதாரத்தில் எடுத்திருக்கும் பத்து அவதாரங்களில் என்னை மிகவும் கவர்ந்த கதாபாத்திரமானது,முதன்முதலில் தோன்றும் இரங்கராஜ நம்பியின் கதாபாத்திரம்தான்.
தனதுரிமையை எந்த சூழ்நிலையிலும் விட்டுக்கொடுக்காதவன் இந்த இரங்கராஜ நம்பி!!
சிதம்பரத்தில் இருந்து கோவிந்தராஜ பெருமாளின் மூலவர் சிலையை பெயர்த்தெடுக்க ஆணையிடுகிறான் இரண்டாம் குலோத்துங்க சோழன்.தன் உயிரினும் மேலாக தாம் நேசிக்கும் இறைவனை யாரும் நெருங்காமல் தடுக்கிறான் இரங்கராஜ நம்பி.
"சுங்கம் தவிர்த்த சோழன் பேரனிடம்,கர்வம் தவிர்க்க சொல்" என்று மன்னனின் மதவெறியையும்,சைவ கர்வத்தையும் இடித்துரைக்கிறான். படைகளை வரதராஜ பெருமாளின் சன்னிதானத்திற்குள் ஏவி இரங்கராஜ நம்பியை கைது செய்கிறான் மன்னன்.வரதராஜ பெருமாளின் சிலயையும் பெயர்த்தெடுக்கிறான் மன்னன்!!இறுதிவரை அதை எதிர்த்து போராடி தோற்றும் போகிறான் இரங்கராஜ நம்பி.
கட்டுண்டு கிடக்கும் நம்பிக்கு மன்னன் இறுதி வாய்ப்பொன்றும் அளிக்கிறான். ஓம் நமசிவாய என்று கூறி உனது பாவங்களை போக்கிக்கொள் என்று உயிர்பிச்சையிடுகிறான்.தன் உயிரினும் மேலாக நேசிக்கும் இறைவனை,கண்ணீர் ததும்ப தொட்டு கும்பிட்டு;
"ஓம் நமோ நாரயணா"
என்று கதறுகிறான் இரங்கராஜ நம்பி!! வைணவர்களை அடக்கி ஒடுக்க நினைத்த மன்னனுக்கு சவால் விடும் நம்பியையும்,அவனுயிர் வரதராஜ பெருமானையும் கடலில் இறக்கிவிட ஆணையிடுகிறான் இரண்டாம் குலோத்துங்கன்.தில்லையிலிருந்து சமுத்திரம் வரையிலும் நம்பியை சிதையிலிட்டு இழுத்து வருகிறார்கள்.நம்பி அப்பொழுது உதிர்க்கும் சொற்கள்...
கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது; கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது!!
இல்லை என்று சொன்ன பின்பும்-இன்றி அமையாது!!
தொல்லை தந்தபோதும் எங்கள்-தில்லை மாறாது!!
வீர சைவர்கள் முன்னாள்-எங்கள் வீர வைணவம் தோற்காது!!
மன்னன் சொல்லுக்கு அஞ்சி என்றும்,மேற்கில் சூரியன் உதிக்காது!!
ராஜலஷ்மி நாயகன் சீனிவாசன்தான்;
சீனிவாசன் சேய் இந்த விஷ்ணுதாசன்தான்!!
நாட்டில் உண்டு ஆயிரம் ராஜ,ராஜர்தான்;
ராஜனுக்கே ராஜன் எங்கள் ரங்கராஜன்தான்!!
என்று தில்லையிலிருந்து பெயர்த்தெடுக்கப்பட்ட வரதராஜனை கிஞ்சித்தும் விட்டுக்கொடுக்காமல் கதறுகிறான் நம்பி!! தொடர்ந்து.......
நீருக்குள்ளே மூழ்கினாலும் நீதி சாகாது!!
நெஞ்சுக்குள்ளே வாழும் எங்கள் ஜோதி சாகாது!!
வீசும் காற்று வந்து விளக்கணைக்கும்;
வெண்ணிலாவை அது அனைத்திடுமா?!
கொட்டும் வான்மழை நிலம் நனைக்கும்;
அந்த வானம்தன்னை அது நனைத்திடுமா?!
சைவம் என்று பார்த்தால் தெய்வம் தெரியாது;
தெய்வம் என்று பார்த்தால் சமயம் கிடையாது!!!
என்றுமே தாம் கொண்ட கொள்கை மாறாது என்று மன்னனுக்கு இடித்துரைக்கிறான்.மேலும் உன்னால் இந்த சிலையைத்தான் பெயர்க்க முடியும் எங்கள் நெஞ்சுக்குள் வாழும் எங்கள் தெய்வத்தை அல்ல என்பதையும் கூறுகிறான் நம்பி!! "அரியும்,சிவமும் ஒன்னு,அறியாதவன் வாயில் மண்ணு" என்பதை போல்,தெய்வத்திற்கு சமயம் தெரியாது என்பதையும் இடித்துரைக்கிறான்.
இறுதியில் தனதுயிரும் மேலான வரதராஜனோடு கடலில் கலக்கிறான் நம்பி!!
இந்த நம்பியை நான் உரிமைப்போராளியாகத்தான் பார்க்கிறேன்.
தனதுரிமையை என்றுமே இழக்க விரும்பாத ஒருவன்!!
தனது ஆசாபாசங்களை கொண்ட கொள்கைக்காக விட்டுக்கொடுப்பவன்!!
உயிரே போனாலும்,மாற்றுக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாதவன்!!
இந்த நம்பியின் படைப்பு வெறும் கற்பனை என்று சிலர் சொல்கிறார்கள்;ஒரு முருகன் பாடல் நினவுக்கு வருகிறது,
"கற்பனை என்றாலும்,கற்சிலை என்றாலும்,கந்தனே உனை மறவேன்"
எனது ஆய்வுகளின்படி நம்பி,உண்மை சரித்திர பாத்திரம்!!
கமலை பிடிக்காத சிலர்,சரித்திரத்தை மற்றிக் கூறுகிறார்கள்!!(இந்த விடயத்தில் யாரோடும் நான் விவாதத்துக்கு தயார்)
நம்பியை ஒரு வைணவன் என்று மட்டும் என்னால் பார்க்க முடியவில்லை!!
வைணவ சமயத்தை ஆரிய திணிப்பு என்று இதுவரை ஏற்றுக்கொள்ளாத என்னைப்போன்றோர் பலரும்,நம்பிக்கு நடந்த சம்பவம்,சைவ மன்னனின் தவறான அணுகுமுறையென்றே கூறுவர் என்று நம்புகிறேன்.
மன்னனின் தவறான சமய அனுகுமுறையே சோழப்பேரரசை மூழ்கடித்திருக்கும் என்பது எனது கருத்து!!
சோழக்குலத்தோன்றல்கள் யாரும் செய்யத்துணியாத கொடிய செயலை இரண்டாம் குலோத்துங்கன் செய்துள்ளான்!!
சோழர்கள்,இயல்பில் சைவ மத சார்புடையவர்கள் என்ற போதிலும்,ஒரு போதும் வைணவத்திற்கு எதிராக அவர்கள் நடந்தது இல்லை என்றே கூற வேண்டும்.பல சமய மக்களையும் சரிசமமாக ஆண்டவர்கள் சோழர்கள்.சைவத்திருத்தலங்களுக்கும்,வைணவத்திருத்தலங்களுக்கும்,புத்த விகாரங்களுக்கும் சரிசமமாக திருப்பணிகள் செய்துள்ளதை சோழ வரலாறு நெடுகிலும் காணலாம்.சோழர்களின் சமயசார்பற்ற ஆட்சியை குறிப்பிட்டு சொல்வதற்கு உதாரணமாக வீராணம் ஏரியைக் கூறலாம்.ஆரம்பக்காலத்தில் இவ்வேரியை வெட்டிய சோழன்,ஏரியை சுற்றி 108 விஷ்ணு ஆலயங்களை எழுப்பியதாக படித்த நினைவு.இவ்வேரியின் இயற்பெயரே "வீர நாரயண ஏரி" என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான குடும்ப பின்னணியைக் கொண்ட இரண்டாம் குலோத்தூங்கன் செய்த கொடிய காரியம் சோழ ஆட்சியில் ஓர் இருண்ட பாகம் என்றே நான் கருதுகிறேன்.
சமய அநீதியை எதிர்த்து போராடும் எந்த போராளியின் போராட்டமும் தோற்றதில்லை எனலாம்.மன்னனின் அராஜகத்தை எதிர்த்து போராடிய இரங்கராஜ நம்பி இறந்துதான் போனான்.ஆனால்,அவன் போராட்டத்தின் வழி தெய்வம் கண் திறந்ததோ என்னவோ,கொடுங்கோல் குலோத்தூங்கனுக்கு பிறகு சோழ சம்ராச்சியம் சரிந்தது.
இந்த நம்பியின் சரித்திரம் போல்தான் நம் கண் முன்னே இப்பொழுது நிகழ்வதும்.
எங்கள் ஆலயங்களை உடைத்தான்.......
எங்கள் தெய்வ விக்கிரகங்களை சிதைத்தான்........
தட்டிக்கேட்ட எங்கள் மக்களை இரத்தம் சொட்ட உதைத்தான்........
நியாயம் கேட்டோரை சிறையில் அடைத்தான்......
முடிவு.....
இறைவன் கற்பித்தான் பாடம்!!
6 மாநிலங்களை இழந்தான்,நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையையும் இழந்தான்.
அரசாங்கத்தின் அராஜகத்துக்கு தெய்வம் க்ற்ப்பித்த பாடம்!!
இது தொடக்கம்தான்.....
அரசன் அன்று கொள்வான்,தெய்வம் நின்று கொள்ளும்!!!
இரங்கராஜ நம்பி கொலை சம்பவத்திற்கு பிறகு,ஏறக்குறைய 100 ஆண்டுகளுக்கு பிறகு சோழ சம்ராச்சியம் தனது முழு கீர்த்தியையும் இழந்தது!!
இங்கே 100 ஆண்டுகள் எல்லாம் ஆகாது;இன்னும் 1 மாதமோ,2 மாதமோ!!
எனது பார்வையில்......
இரங்கராஜ நம்பி,
உரிமைப்போராளிகளுக்கு முன்னோடி!!!
1 comment:
Hari Om.
Vainavaithai paddri unmaigalai sonnathirku nandri.
Arangan-in arul ungaluku seraddum
Post a Comment