செயல்திட்ட வடிவமைப்பு
இந்திய இளைஞர்களை ஒன்றிணைத்தல்.-இந்திய இளைஞர்களை தொடர்ந்து குண்டர்கள் என்றும் செயல்திறன் அற்றவர்கள் என்று கூறி வந்த நிலை இன்றைய அளவில் பெரிதும் மாறியுள்ளது.இதனை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்வதில் நமது முழு கவனம் செலுத்தப்பட வேண்டும்.மக்கள் சக்தியின் தாக்கம் நமது இளைஞர்களின் மத்தியில் பெரிய மாற்றத்தை தருவித்துள்ளது.ஒற்றுமை நமது பலம் என்பதை இளைஞர்கள் உணர்ந்துள்ளனர்.இதனை தக்க வைக்க நாம் எடுக்க வேண்டிய சில முக்கிய நடவடிக்கைகள்.
- தொகுதி வாரியாக கலந்துரையாடல்களை ஏற்பாடு செய்தல்.
- வன்முறையை நமது சமுதாயத்தில் இருந்து விரட்டியடித்தல்.
- அரசாங்க துறைகளில்,நிறுவனங்களில் நமது இளைஞர்களுக்கு சரியான வாய்ப்புகளை உறுதி செய்தல்.
- இளைஞர்களுக்கு கல்வி,வேலை வாய்ப்புகள் பாரபட்சமின்றி கிடைப்பதை உறுதி செய்தல்.
- இளைஞர்கள் வணிகத்துறையில் ஈடுபட ஊக்குவித்தல்.
- வணிகக்கடன்கள்,ஆலோசனைகள் வழங்குதல்.
- இளைஞர்களை விளையாட்டுத்துறையில் ஊக்குவித்தல்.
- இளைஞர்களை சமூக சேவைகளில் ஈடுபடுத்துதல்.
- மாநில அளவில் உள்ள இளைஞர்களை ஒன்றிணைத்தல்.
- மாநில அளவில் இளைஞர் மாநாடு நடத்துதல்.
- இளைஞர்களிடம் தொடர்ந்து ஒற்றுமையை மேம்படுத்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்தல்.
தொகுதி வாரியாக கலந்துரையாடல்களை ஏற்பாடு செய்தல்.
பிறை தொகுதியில் தொடங்கி அங்குள்ள இளைஞர்களை ஒன்றிணைக்கும் வண்ணம் கலந்துரையாடல்களை ஏற்பாடு செய்தல்.இளைஞர்களின் ஒற்றுமையின் முக்கியத்துவத்தை குறிப்பிட்டு இதுவரை நிலவி வந்த கருத்து வேறுபாடுகளை கலைதல்.தொகுதி வாரியாக இளைஞர்களை ஒன்றிணைக்கும் முயற்சியானது இடைவிடாமல் தொடர்தல் வேண்டும்.
வன்முறையை நமது சமுதாயத்தில் இருந்து விரட்டியடித்தல்.
இளைஞர்களிடம் ஒற்றுமையை மேம்படுத்துதல் மூலம் வன்முறை கலாச்சரத்தை துடைத்தொழிக்க முடியும்.குண்டர் கும்பல் கலாச்சாரத்தின் பின் விளைவுகளை விரிவாக விவாதிப்பதன் மூலம் இளைஞர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.காவல்துறையின் உதவியுடன் குண்டர் கும்பல் நடவடிக்கைகளால் தங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை உணர்த்துதல்.
அரசாங்க துறைகளில்,நிறுவனங்களில் நமது இளைஞர்களுக்கு சரியான வாய்ப்புகளை உறுதி செய்தல்.
வேலையின்மைதான் நமது சமுதாய இளைஞர்களிடம் பல்வேறு பிரச்சனைகளுக்கு காரணம் என்பதை அறிய முடிகிறது.ஆகவே சரியான வேலை வாய்ப்புகள அமையும் பட்சத்தில் குண்டர்கும்பல்,கொள்ளை,போதைப்பொருள் போன்ற நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடுவதை குறைக்கலாம் என்று நம்புகின்றோம்.அரசாங்க துறைகளில்(MPSP,MPPP),அரசு சார்ந்த நிறுவனங்களில்(PBA,PPC,PBSB,PERDA)நமது இளைஞர்கள் வேலை வாய்ப்புகள் பெறும் பட்சத்தில் சமூக சீரழிவுகளில் இருந்து அவர்கள் விலகி நிற்பார்கள் என்பது பொதுவான கருத்தாகும்.
இளைஞர்களுக்கு கல்வி,வேலை வாய்ப்புகள் பாரபட்சமின்றி கிடைப்பதை உறுதி செய்தல்.
நமது இளைஞர்களுக்கான கல்வி,வேலை வாய்ப்புகள் கடந்த பல ஆண்டுகளில் தொடர்ந்து பாரபட்சத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம்.அந்நிலை தொடர்ந்து நீடிக்கக்கூடாதென்பது நமது எதிர்பார்ப்பாகும்.நம் இளைஞர்களுக்கு அவரவர் தகுதிக்கேற்ப கல்வி,வேலை வாய்ப்புகள் பகிர்ந்தளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்;இதில் எந்த ஒரு ஓரவஞ்சனை நிகழாமல் இருப்பதை மாநில அரசு உறுதி செய்யவேண்டும்.நமது இளைஞர்கள் இந்த வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்வதை ஊக்குவித்தல்.
இளைஞர்கள் வணிகத்துறையில் ஈடுபட ஊக்குவித்தல்.
வணிகத்துறையில் நம் இளைஞர்களை ஈடுபடுத்துதல் மூலம் நமது சமுதாயத்தின் பொருளாதரத்தை மேம்படுத்த முடியும்.ஒரு குறிப்பிட்ட தொழில்துறையில் மட்டும் அவர்கள் ஈடுபடுவதை ஊக்குவிக்காமல் அனைத்து வகையான தொழில்துறைகளிலும் அவர்கள் ஈடுபடுவதை ஊக்குவிக்கவேண்டும்.
வணிகக்கடன்கள்,ஆலோசனைகள் வழங்குதல்.
நமது இளைஞர்களும் வணிகத்தில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் வண்ணம்,ஆலோசனைகள் வழங்க ஒரு சிறப்பு குழு அமைக்கப்பட வேண்டும்.இந்த குழுவில் தொழில்துறை,வணிகத்துறையில் வெற்றி பெற்ற இந்தியர்களை இக்குழுவில் இணைத்துக் கொள்ள வேண்டும்.தற்பொழுது வங்கிகளில் வழங்கப்படும் சிறுதொழில்களுக்கான கடனுதவி பெரும்பாலான இந்திய வணிகர்களுக்கு கிடைப்பதில்லை என்பதுதான் உண்மை.இந்த விடயத்தில் மாநில அரசு தலையிடுவது கடினம் என்பதால்,மாநில அரசே இது போன்ற கடனுதவி திட்டங்களை அறிமுகப்படுத்தி நமது இளைஞர்களை ஊக்குவிக்கலாம் என்பது நமது வேண்டுகோள்.
இளைஞர்களை விளையாட்டுத்துறையில் ஊக்குவித்தல்.
விளையாட்டுத் துறையில் நமது இளைஞர்களின் ஆர்வம் அனைவரும் ஒன்று.ஆனால்,விளையாட்டு துறையிலும் இனவாதம் தலைத்தூக்கியதால்தான் நமது திறமையான இளைஞர்கள் பலர் விளையாட்டுத் துறையில் சிறப்பாக வர முடியாமல் போனது என்பது உண்மை.இந்த நிலை இனிமேலும் தொடர கூடாது என்பதுதான் நமது விருப்பமாகும்.மாநில அரசு இவ்விடயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்று நாம் எதிர்ப்பார்க்கிறோம் .இனவாதம் இல்லாமல் விளையாட்டளர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறோம்.திறமையுள்ள இந்திய இளைஞர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுவதை உறுதி செய்வதோடு,அவர்களை மேல் பயிற்சிக்கு அனுப்பிடவும் வேண்டும்.
இளைஞர்களை சமூக சேவைகளில் ஈடுபடுத்துதல்.
மாநில அளவில் உள்ள இளைஞர்களை ஒன்றிணைத்தல்.
மாநில அளவில் இளைஞர் மாநாடு நடத்துதல்.
இளைஞர்களிடம் தொடர்ந்து ஒற்றுமையை மேம்படுத்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்தல்.
1 comment:
அருமையான செயல்திட்ட வடிவமைப்பு, இத்திட்டம் செயல் வடிவம் கண்டால், இளைஞர்கள் நல்வழியில் ஈர்க்கப்பட்டு வீட்டிற்கொரு 'காந்தி' , 'சுபாஷ் சந்திரபோஸ்' போன்றவர்கள் உருவாக வாய்ப்பிருக்கின்றது.
Post a Comment