என்னுடைய தந்தை தான்ஸ்ரீ ஆதி.நாகப்பன் அவர்கள் 32 ஆண்டுகளுக்கு முன்பு இறைவனடி சேர்ந்தார்.அவர் இறைவனடி சேர்வதற்கு ஏறக்குறைய 1 மாதத்திற்கு முன்பு,பினாங்கு மஇகாவினர் அவருக்கு பாராட்டு விருந்து அளித்த போது,அவர் ஆற்றிய உரையின் சாரம்சம்,பின்வருகிறது :
அரசாங்கம் தற்பொழுது நாட்டு மக்களிடையே நிழவும் ஏழ்மையை துடைத்தொழிக்க நடவடிக்கைத் திட்டங்களை வரும் முன்றாவது மலேசியத் திட்டத்தில் முன்னெடுக்க உள்ளது.இதில் இனவாரியாக ஏழ்மை ஒழிப்பை மேற்கொள்ளாமல்,அனைத்து இனத்தினரும் பயனடைவர்!
ஏழ்மை அனைத்து இனங்களிலும் உள்ளது.ஏழ்மை ஒழிப்பு என்று வந்துவிட்ட பிறகு,மலாய் ஏழைகள்,சீன ஏழைகள்,இந்திய எழைகள் என்று பார்க்கக்கூடாது.எழ்மை என்று வந்துவிட்டால் அது அனைவருக்கும் சமமே.நாட்டின் பொதுவான ஏழ்மை என்று கருதி அதனை துடைத்தொழிக்க முற்பட வேண்டும்.வாய்ப்புகளையும்,வசதிகளையும் சரிசமமாக பங்கிட்டுக் கொள்வதன் மூலமே,இந்த இலக்கை நாம் அடைய முடியும்.பிரதமர்(துன் ஹூசேன் ஓன்) அவர்கள் எழ்மை ஒழிப்பில் மிக மும்முரமாக இருக்கிறார் என்பதை நானறிவேன்.மஇகா அரசாங்கத்தின் இம்முயற்சிக்கு முழு ஆதரவை தெரிவிப்பதோடு, அனைத்து விதமான ஒத்துழைப்பையும் வழங்கும்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிரதமர் அப்துல்லா படாவியும் இதைப்போன்ற கருத்து ஒன்றை வெளிப்படுத்தியுள்ளார்.
"இந்தியர்கள் மட்டும் ஏழைகளாக இல்லை,ஏழை சீனர்கள் உள்ளனர்,எழை மலாய்க்காரர்கள் உள்ளனர்,மற்ற பூமிபுத்ராக்களும் எழைகளாக உள்ளனர்.ஏழ்மை ஒழிப்பு என்பது,"அனைத்து இனங்களையும்" உட்படுத்தியதாக இருக்கும்.மீண்டும் சொல்கிறேன்,அனைத்து இனங்களையும் உட்படுத்தியதாக இருக்கும்,இதுதான் நமது ஏழ்மை ஒழிப்பு கொள்கையாக இருந்து வந்துள்ளது,இனிமேலும் இருக்கும்."இவ்வாறு அம்னோ தலைவரான அப்துல்லா படாவி கூறியுள்ளார்.
நண்பர்களே,பிரதமர் இப்பொழுது கூறியுள்ள கருத்துகளை ஏறக்குறைய 32 ஆண்டுகளுக்கு முன்பே என் தந்தை கூறிவிட்டார்.ஆனால் அதன் செயல்பாடுகள்தான் இன்னும் வந்த பாடில்லை.என் தந்தை அன்று சொன்னதத,புதிதாக கூறுவது போல் கூறுவதிலிருந்தே,தேசிய முன்னணியின் நெடுங்கால தோல்விகளை நம்மால் அறிய முடிகிறது.தொடர்ந்து கடந்த 32 வருடங்களாக மக்களை,பொய் வாக்குறுதிகளை கூறி ஏமற்றி வருகிறது இந்த தே.மு அரசாங்கம்!!
கடந்த சில மாதங்களாக நிகழும் தொடர் நிகழ்வுகளிலிருந்தே,தற்போதைய மஇகா தலைமைத்துவத்தின் கீழ் இந்தியர்கள் பெரிதும் வஞ்சிக்கப்பட்டுள்ளனர் என்பதை நாம் உணர முடியும்.சரிசமமான சொத்துடமை,வாய்ப்புகள், வசதிகளை பகிர்ந்துக் கொள்வதிலிருந்து இந்திய சமூகம் பெரிதும் விடுப்பட்டுள்ளது.எனது தந்தை 1976இல் கூறியது போல் வாய்ப்புகளை பகிர்ந்து கொள்வதிலிருந்து இந்திய சமுதாயம் விடுப்பட்டதற்கு காரணமே,மஇகா தலைமைத்துவத்தின் அலட்சியம்தான்.பெருபான்மை இந்திய சமூகத்தின் அவல நிலையை முன்னிறுத்த தவறியது மஇகாவின் இயலாமையையே காட்டுகிறது.
வேலை வாய்ப்புகளோ,கல்வியோ,வீட்டுடமையோ,பொருளாதார வளர்ச்சியோ அல்லது அடிப்படை உரிமைகளோ,இவை அனைத்திலும் இந்தியர்கள் இந்நாட்டில் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டே வந்துள்ளனர்.கடந்த 28 வருடங்களாக இந்தியர்கள்,பின்னோக்கியே சென்று கொண்டுள்ளனர் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டே வருகின்றனர்.இதற்கு உதாரணமாக சில கூற்றுகள் :
- மலேசியாவில் உள்ள பொது பல்கலைக்கழகங்களில் 3-4% மாணவர்களே இந்தியர்கள்.
- மலேசியாவில் உள்ள பல அரசாங்க தாதியர் கல்லுரிகளிலும் மொத்தமே 1% இந்தியர்களுக்குதான் வாய்ப்பு வழங்கப் பட்டிருக்கிறது.
- கடந்த 15 வருடங்களில்,ஒரு வருடத்தில் 2.5%க்கும் குறைவான இந்திய மாணவர்களுக்கு மட்டும்தான் நாடளாவிய ஆசிரியர் பயிற்சிக் கல்லுரிகளில் இடம் வழங்கப்பட்டுள்ளது.
- அரசாங்க,அரசாங்க சார்புடைய அமைப்புகளின் கல்வி நிதியுதவி(Scholarships) 1%க்கும் குறைந்த அளவிலேயே இந்திய மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
- அரசாங்க ராணுவ கல்லுரிகளில்,ராணுவ பயிற்சி மேற்கொள்பவர்களில் 1% குறைவானவர்களே இந்தியர்கள்.
- கடந்த 15 வருடங்களில் காவல்துறையில் பயிற்சி பெற தேர்வு பெருபவர்களில் வருடத்திற்கு 2%க்கும் குறைவானவர்களே இந்தியர்கள்.
- அரசாங்க துறைகளில் நிலைமை படுமோசமாக உள்ளது;எதாவது அரசு அலுவலகங்களுக்கு போனால்,இந்திய,சீன அதிகாரிகளை தேடினாலும் கிடைக்க மாட்டார்கள்.உதாரணத்திற்கு கோலாலம்பூரிலுள்ள விவசாய,மீன்வளத்துறை அலுவலகத்தில் பணிபுரியும் 400 பேரில்,2 பேர் இந்தியர்கள்,3 பேர் மட்டுமே சீனர்கள்.
- KTM என்பது ஒரு காலத்தில் பெரும்பாலான இந்தியர்கள் பணிப்புரியும் துறையாக இருந்தது.ஆனால் இன்று 3% குறைவான இந்தியர்களையே வேலைக்கு சேர்த்துக்கொள்கிறது KTM.
- 6 பிப்ரவரி 2008,வரைக்கும் கோலாலம்பூரின் மொத்த பங்கு சந்தையின் மொத்த மதிப்பீடு 764 பில்லியன் வெள்ளிகள்.எனது கண்க்குபடி,இதில் இந்தியர்களின் பங்குடமை 1%க்கும் குறைவாகவே இருக்கும் என மதிப்பிடுகிறேன்.
ஏன் இத்தனை வஞ்சனைகள்?
ஏன் இத்தனை பாரபட்சம்??
இந்தியர்களின் பொருளாதாரத்தை உயர்த்த அமைக்கப்பட்ட வங்கிகளின் நிலைமை என்னவானதென்பதை கொஞ்சம் பார்ப்போம்.
-தொடரும்-
(பின்குறிப்பு : வாசகர்கள் கவனத்திற்கு,இந்த அறிக்கையை முழுமையாக மொழிபெயர்ப்பதற்கு முன்,எனது தனிப்பட்ட ஆய்வை நான் மேற்கொள்ள விரும்புகிறேன்.ஆகவே,இதன் தொடர்ச்சி வரும் நாட்களில் பிரசுரமாகும். வாசகர்களிடம் ஏதேனும் தகவல் இருப்பின் தயைக்கூர்ந்து எனக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.மின்னஞ்சல் முகவரி satees_m@yahoo.com )
No comments:
Post a Comment