எனக்கு பெரிய காதுகள் உள்ளன;கண்டிப்பாக உங்கள் குறைகளை நான் கேட்பேன்!!
-இப்படி சொன்னவர்தான் கடந்த 16ஆம் தேதி அன்று கோரிக்கை வைக்க மலர் தாங்கி வந்த மழலைகளைக் கூட இரசாயன கலவை நீர் கொண்டும்,கண்ணீர் புகைக்கொண்டும் தாக்கிய மலேசிய காவல் துறைக்கு பொறுப்பான உள்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சருமான மாண்புமிகு மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அப்துல்லா படாவி(இந்த பெயரை எழுதும் பொழுது கூட எனக்கு இரத்தம் தலைக்கேறுகிறது).
பிப்ரவரி 16ஆம் தேதி காலை மணி 8 இருக்கும்,வீட்டிலிருந்து கிளம்பி மலர் வழங்கும் நிகழ்வு நடைபெறப்போகும் மலேசிய நாடாளுமன்றத்திற்கு விரைந்து சென்றேன்.ஜாலான் பார்லிமெனில் என்றும் இல்லா நெரிசல் தெரிந்தாலும்,தொடர்ந்து சென்றேன்.நாடாளுமன்ற வாயிலுக்கு செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டிருந்தது.நாடாளுமன்றத்திற்குள் நுழைய பல்வேறு வழிகளிலும் முயன்றுக்கொண்டிருக்கையில்,ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததையடுத்து,நிகழ்வு கோலாலம்பூர் சுதந்திர வளாகத்தில் நடைபெறுவதை அறிந்து அங்கு விரைந்தேன்.நான் கோலாலம்பூரின் மையப்பகுதியை அடைந்த பொழுது,ரசாயன நெடி அடிக்க தொடங்கி விட்டது.
அங்கும் இங்கும் அலைந்து ஒரு வழியாய் மோட்டார் வண்டியை ஓரிடத்தில் நிறுத்திவிட்டு நடக்கத் தொடங்கையிலே,அங்கு கூடியிருந்த தமிழர்கள் அங்குமிங்குமாய் கலைந்து கொண்டிரூந்ததை காண முடிந்தது,மேலும் நடந்த பொழுதுதான் அங்கே போலிசாரின் கடுமையான நடவடிக்கைகளை கண்ணாறக் கண்டேன்.அந்த இடத்தில் அவர்களிடம் அகப்பட விரும்பாமல் மெர்டேக்கா சதுக்கத்திற்கு சென்றேன்.அங்கு வரிசையாய் நின்றிருந்த FRU வாகனங்களை கடந்து சென்ற போது அங்கு நின்றிருந்த யாரும் கவனிக்கவில்லை.மெர்டேக்கா சதுக்கம் எங்கும் ஒரே போலிசாரின் நடமாட்டம்தான் தென்பட்டது,ரசாயன கலவை எங்கும் ஊற்ற பட்டிருப்பதை காண முடிந்தது.
இப்பொதெல்லாம் மக்கள் கூட்டம் ப்போலீசாரின் வன்முறையால் கலைக்கப்பட்டிருந்தது.அங்குமிங்கும் சில செய்தியாளர்களை காண முடிந்தது.அப்பொழுதுதான் என்னை அனுகிய ஒரு செய்தியாளரிடம் நநன் பேசிக்கொண்டிருந்தேன்.அங்கும் வந்துவிட்ட போலிசார் அனனவரையும் விரட்டியடித்தனர்.ஆகவே நடையைத் தொடர்ந்தேன்.பேரணி கலைக்கப்பட்டதை அடுத்து வீட்டுக்கு திரும்பும் எண்ணத்தோடு நடந்தேன்,தேசிய பள்ளிவாசலை அடைந்த பொழுது,ஓர் நபர் பின்னாளிருந்து என் பிடரியை அழுத்தி,
"நான் போலிஸ்,மல்லுக்கட்டாமல் என்னோடு வா" என்றான்.
"எதற்கு?"நான் கேட்டேன்.
"உன்னை கைது செய்கிறேன்."
"எதற்கு?"
"சட்டவிரோதமாக ஒன்று கூடியதால்."
"இங்கு இருப்பது நான் ஒரே தமிழன்,யாரோடு ஒன்று கூடினேன்??"
எது காதல்? -அத்தியாயம் 2
4 years ago
No comments:
Post a Comment