31.1.08

வெற்றியை நோக்கி நம் பயணம்.......

ஆகக் கடைசியாக எனக்கு கிடைத்த தகவல்.....
நாளை,பிப்ரவரி 1ஆம் தேதி,பிரிட்டனின் டால்ஃபாகர் ஸ்குவேர் எனுமிடத்தில்,முருகேஷ்(ஹிண்ட்ராஃப் ஆதரவாளர்) என்பவரும் மேலும் 4 பேரும் இணைந்து உண்ணாநிலை போராட்டம் மேற்கொள்ளவிருக்கின்றனர்.

அன்றைய தினம்,டவ்னிங் ஸ்ட்ரீட்டில் அமைந்திருக்கும் பிரிட்டன் பிரதமரின் அலுவலகத்திற்கு முன்பு ஏறக்குறைய 1000 பேர் கூடுவார்கள் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அன்றைய தினம் பிரிட்டன் பிரதமர் துறை அதிகாரிகள் ஹிண்ட்ராஃபின் பிரதிநிதிகளை(வேதமூர்த்தி அவர்கள்) சந்திக்க நேரம் ஒதுக்கியுள்ளனர்.பிரதமர் கோர்டன் பிரவுன் அவர்களும் இச்சந்திப்பில் கலந்து கொள்வார் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

150 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியர்களை சஞ்சிக்கூலிகளாக மலாயாவிற்கு கொண்டு வந்த பிரிட்டன்,அதன் விளைவுகளைக் கண்டு இன்று மனம் இறங்கியிருக்கிறது.அவர்களின் பிரதமர் நம்மை சந்திக்க தயார்,
ஆனால் தொடர்ந்து 50 வருடங்கள் நம்மை ஒதுக்கி,ஒடுக்கும் தேசிய முன்னணி அரசாங்கத்தின் தலைவரான பிரதமர் நம்மை சந்திக்க மறுக்கிறார்!!

நமது பயணத்தின் முதல் வெற்றி தொடங்கி விட்டது.
இனிமேல் நமக்கு வெற்றி மேல் வெற்றிதான்.

மக்கள் சக்தி வெல்லும்!!

மலேசிய அரசாங்கம் தலிபான்களுக்கு சமமானவர்கள் - HCUK
தலிபான்களை போல் நடந்து கொள்கிறது மலேசிய அரசாங்கம்.பாமியன் புத்தர் சிலையை தலிபான்கள் தகர்த்தது போல்தான் மலேசிய அரசாங்கத்தின் நடவடிக்கையும் இருக்கிறது.இந்த நடவடிக்கையை மென்-தலிபானிஸம் என்றும் வகைப்படுத்தலாம்.பல நூறு வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட கோவில்களின் வரலாற்று பின்னணியைக் கூட கருத்தில் கொள்ளாது இடித்துத் தள்ளும் மலேசிய அரசாங்கத்தின் நடவடிக்கையானது அடைப்படை மனித உரிமை மீறலாகும்.


இந்துக்கள் மட்டுமல்லாமல் மற்ற சிறுபான்மை மதத்தினரையும் அடிப்படை மனித உரிமைகளுக்கு உட்படுத்துகிறது மலேசிய அரசாங்கம்.கடந்த நவம்பர் மாதம் கோலாலம்பூரின் வீதீகளில் தங்களின் உரிமைகளைக் கேட்டு போரடிய ஆயிரக்கணக்கான தமிழர்களை காட்டுத்தனமாக தாக்கியது மலேசிய போலிஸ்.ஏறக்குறைய இரண்டு மில்லியன் தமிழர்கள் இனவாத மலேசிய அரசாங்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு பிரிட்டன் பிரதமர் கோர்டன் பிரவுன் அவர்களின் உடனடி தலையீடு அவசியமாகும்.அனைத்துலக சமூகமும் இந்த விவகாரத்தில் தலையிட்டு,சுமுக தீர்வு காணவேண்டும்.

மேல் காணப்படும் செய்தியானது எனது தனிப்பட்ட கருத்து இல்லை.இந்த புகாரை கூறியிருப்பது ஐக்கிய ராச்சிய இந்து பேரவை(The Hindu Council of United Kingdom).கடந்த வெள்ளிக்கிழமை பத்திரைகளுக்கு வெளியிட்ட ஓர் அறிக்கையில் அப்பேரவையின் செயலாளர் திரு.அனில் பானோட் அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எனது கருத்தும் இதுதான்!!பாமியான் புத்தர் சிலையை வரலாற்று சின்னம் என்று கூட பாராமல் வெடி வைத்து தகர்த்த தலிபான்களுக்கும்,பல நூறு கோவில்களையும்,அதற்குள் குடிக்கொண்டிருக்கும் ஆயிரமாயிரம் சிலைகளையும் உடைத்து தள்ளிய மலேசிய அரசாங்கத்திற்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை.

தலிபான்களின் அட்டகாசம் அடங்கி விட்டது,மென்-தலிபானிஸத்தை நடைமுறைப்படுத்தும் மலேசிய அரசாங்கத்தின் அட்டகாசமும் கூடிய சீக்கிரத்தில் அடங்கும்.

மக்கள் சக்தி வெல்லும்!!

ஹிண்ட்ராஃப் முடிந்து விட்டதா??


ஹிண்ட்ராஃப் எப்போதோ ஆரம்பித்து,எப்போதோ முடிந்து விட்டது;ஹிண்ட்ராஃப் என்ற போர்வையில் மெழுகு வர்த்தியை ஏந்திகிட்டு போறாங்க,இது நமது கலாச்சாரம் அல்ல!!இதெல்லாம் அரசியல் கபட நாடகம்!!கோவில்களில் பிரார்த்தனைக் கூட்டம் என்ற போர்வையில் பிரச்சாரம் பண்றாங்க,இதெல்லாம் முறையில்லை!!

- திருவாய் மலர்ந்து இருக்கிறார் மாண்புமிகு அமைச்சர் டத்தோஸ்ரீ ச.சாமிவேலு.

ஹிண்ட்ராஃப் எப்போது ஆரம்பித்தது என்பது மாண்புமிகு அமைச்சருக்கு தெரியுமா என்று தெரியவில்லை!!

இருந்தாலும் கூறுகின்றேன்.......

ஏறக்குறைய 5 ஆண்டுகளுக்கு முன்பு,மூர்த்தி என்ற ராணுவ வீரர் ஒருவர்(1998 எவரெஸ்ட் மலையேறும் திட்டத்திலும் இவர் கலந்து கொண்டவர் ஆவார்) மரணமடைந்த பின் ஒரு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.மூர்த்தி என்பவர் சில வருடங்களுக்கு முன்பு இஸ்லாத்தை தழுவி விட்டதாகவும்,ஆகவே மூர்த்தியின் சடலம் இஸ்லாத் முறைப்படித்தான் அடக்கம் செய்யப்பட வேண்டும் என,திடிரென்று அறிவிப்பு வந்தது மூர்த்தியின் ம்னைவிக்கு.அவர் அந்த நொடியில் எப்படி உடைந்து போயிருப்பார்??!

அப்பொழுது வழக்கறிஞர் சிவநேசன் அவர்கள் மூர்த்தியின் மனைவிக்கு உதவிக்கரம் நீட்டினார்.இந்த விஷயத்தை சட்டப்படி கையாள முடிவு செய்து கோலாலம்பூரில் உள்ள உயர் நீதிமன்றத்தை நாடினார்கள்.ஆனால்,உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்த அன்றைய தினமே,சிலாங்கூர் மாநில இஸ்லாமிய இலாகா மூர்த்தியின் சடலத்தை கோரி மருத்துவமனையில் மனுக்களை தாக்கல் செய்தது.அதற்கு மூர்த்தியின் குடும்பத்தாரும்,வழக்கறிஞர் சிவநேசனும் கடும் எதிர்ப்பு தெரிவித்த பொழுதிலும்,மருத்துவமனை அதிகாரிகள் சடலத்தை இஸ்லாமிய இலாகாவிடம் ஒப்படைக்க தயாரானர்கள்.

அங்கு ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தை அடுத்து ஏற்க்குறைய 2000(குல்லா அணிந்த) இஸ்லாமியர்களை மருத்துவமனைக்கு வெளியில் குவித்தது சிலாங்கூர் இஸ்லாமிய இலாகா!!!

அப்போது இந்த செய்தியை அறிந்து நம்மவர்கள் ஏற்க்குறைய 400 பேர் வழக்கறிஞர் வேதமூர்த்தி அவர்களின் தலைமையில் ஒன்று கூடினர்.அதுதான் ஹிண்ட்ராஃப்-இன் பிற்ப்பு.அவர்கள் 2000 பேர்,நம்மவர்களோ வெறும் 400 பேர்.அப்படி இருந்தும் அன்று அந்த சடலத்தை அவர்கள் கைப்பற்றி விடாமல் காத்தனர்.(அதன் பிறகு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில்தான் மூர்த்தியின் சடலம் இஸ்லாமிய இலாகாவிடம் ஒப்படைக்க பட்டது என்பது குறிப்பிட தக்கது.)

இது மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு தெரியுமா என்று தெரியவில்லை!!
எப்பவோ ஆரம்பித்ததாம்!!மன்னாங்கட்டி!!
எப்பவோ முடிந்து விட்டதாமே??உண்மையா??

மாண்புமிகு அமைச்சர் அவர்கள் கனவு லோகத்தில் இருக்கிறாரோ??(இந்திர லோகத்தில் நா.அழகப்பன்,என்பதைப் போல் கனவு லோகத்தில் ச.சாமிவேலு என்று திரைப்படம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை)

அமைச்சரே,வருகின்ற 16-02-2008 அன்று தெரியும் உங்களுக்கு முடிந்தது ஹிண்ட்ராஃபா அல்லது மஇகாவா என்று!!

எங்கள் தங்கமான் சிங்கங்களை சிறையில் அடைத்து விட்டு நீங்கள் விடும் வாய்ச்சவடால் இருக்கிறதே,தாங்க முடியலப்பா.ஹிண்ட்ராஃப் என்ற ஒன்று முடிந்து விட்டது என்பதை அதை வைத்து நீங்கள் கூறுகிறீர்கள்??

அந்த ஐவரையும் சிறையில்தான் உங்களால் அடைக்க முடிந்தது,அவர்கள் எங்களுக்குள் விதைத்த எழுச்சியை உங்களால் ஒன்றும் செய்து விட முடியாது!!

அதன் வெளிப்பாடுதான் நாடளாவிய நிலையில் நடக்கும் பிரார்த்தனைக் கூட்டங்கள்!!

அதைக் கண்டும் வயிற்றெரிச்சல் உங்களுக்கு!!
எத்தனை இடங்களில் பிரார்த்தனை கூட்டங்களை தடுத்து நிறுத்த உங்களின் அடிவருடிகள் முயன்றனர்,முடிந்ததா உங்களால்??
முடியவில்லையே!! ஏன்??

ஏனென்றால்,இந்த எழுச்சிக்குப் பெயர் மக்கள் சக்தி!!
மக்கள் சக்தி,மகேசன் சக்திக்கு சமம்!!!

பிறகு,மெழுகுவர்த்தி ஊர்வலத்தை பற்றி கூறியிருக்கிறீர்கள்!!
மெழுகுவர்த்தி ஏந்தி நடப்பது அமைதியின் அடையாள்ம் என்பது உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளும் ஏற்றுக் கொண்ட ஒன்று என்பது உமக்கு தெரியாதோ??

அது நமது க்லாச்சாரம் இல்லை என்றும் கூறியிருக்கிறீர்கள்,பொய் சொல்வது மட்டும் நமது கலாச்சாராமோ??(பத்துமலையில் 9,50,000 பேர் என்றீர்களே!!)

கோவில்களில் அரசியல் பிரச்சாரம் நடக்கிறது என்று கொதித்திருக்கிறீர்,இவ்வளவு நாள் நீங்களும் உங்கள் பட்டாளமும் கோவில்களில் அடித்த் கொட்டங்களை மறந்து விட்டீரோ??

நீங்கள் கோவில்களில் அரசியலை மட்டுமா நுழைத்தீர்,ஊழலையும் சேர்த்தல்லவா நுழைத்தீர்கள்!!(மிக சிறந்த உதாரணம்,கோலாலம்பூர் மகா மாரியம்மன் தேவஸ்தானம்).
இன்று ஆலயங்கள் சமுதாய விழிப்புண்ர்வை ஏற்படுத்துவது உங்களுக்கு பொறுக்கவில்லை!!உடனே தாண்டவம் ஆடுகின்றீர்கள்!!

ஐயா,சாமிவேலரே,
போதுமய்யா,போதும்!!!
இதோடு நிறுத்தி விடுங்கள்!!
மீண்டும்,மீண்டும் ஏதாவது உள்றிக் கொண்டிருக்காதீர்கள்!!

உங்கள் உளறல்கள் இனியும் எடுபடாது!!

ஏனென்றால்,
அரசாங்கம்தான் உங்கள் பக்கம்,ஆண்டவன் எங்கள் பக்கம்!!

மக்கள் சக்தி வெல்லும்!!

அன்பர் தின பேரணி- இரண்டாம் படையெடுப்பு.


நண்பர்களே,

எதிர்வரும் 16-02-2008 அன்று நாம் மீண்டும் படையெடுக்கப் போகின்றோம்.
ஆம்,படைதான் எடுக்கப்போகின்றோம்.

நாம் இப்பொழுது நடத்திக் கொண்டிருப்பது உரிமைக்கான அகிம்சைப் போர்;ஆகையால் நமது இரண்டாம் பேரணியை இரண்டாம் படையெடுப்பென்பது எந்த வகையிலும் தவறாகாது!!!
இந்த முறை நமது பேரணியின் கருப்பொருள்,அன்பர் தினம் என்பதாகும்!!
இந்த அன்பர் தின பேரணியின் முக்கிய நோக்கமே,இந்த மலையகத்தின் மீது நாம் வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்துவதுதான்!!
நம்மை தீவிரவாதிகள் என்றும்,தேசத்துரோகிகள் என்றும் பழிப்பேசிய மூடர்களுக்கு நமது தேசப்பற்றை உணர்த்துவோம்.

இம்முறை பேரணிக்கு நாம் கொண்டு வர வேண்டியவை சிவப்பு நிற ரோஜாவும்,மஞ்சள் நிற ரோஜாவும் ஆகும்.
சிவப்பு நிற ரோஜாவானது இந்த தேசத்தின் மீது நாம் வைத்திருக்கும் நேசத்தின் வெளிப்பாடாகும்.மஞ்சள் நிற ரோஜாவானது நமது 5 சிங்கங்களை விரைவில் வெளியேற்றுமாறு கோரிக்கையை வலியுறுத்துவதாகும்.

ஆகவே,தோழர்களே,மீண்டும் ஒரு முறை தலைநகரில் கூடி நமது ஒற்றுமையை மீண்டும் வெளிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல்,நமக்காக போராடி இன்று சிறைச்சாலையிலும்,மருத்துவமனையிலும் வாடிக்கொண்டிருக்கும் அந்த 5 உன்னத மனிதர்களுக்கு நமது தார்மீக ஆதரவையும் புலப்படுத்துவோமாக!!

மக்கள் சக்தி வெல்லும்!!

தைப்பூசத்திற்கு பொது விடுமுறையாம்,கோலாலம்பூரிலும், புத்ராஜெயாவிலும் மட்டும்தான்!!!

தைப்பூசத்திற்கு பொது விடுமுறை அறிவிப்பதைப் பற்றி கண்டிப்பாக நான் பரிசீலிப்பேன்!!!

இதுதான் மலேசிய பிரதமரின் பொங்கல் விழா உறையின் முக்கிய சமாச்சாரம்.இந்த அறிவிப்பானது மலேசிய தமிழர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது என்பதுதான் உண்மை.மலேசியத் திருநாடு எஙகும் பெரும் விமரிசையாகக் கொண்டாடப் படும் தைப்பூசத் திருநாளுக்கு தேசிய பொது விடுமுறை என்பது புத்தாண்டின் மிகச் சிறந்த பரிசாக அமைந்திருக்கும்.

ஆனால்,கிடைத்ததோ தேசிய பொது விடுமுறை அல்ல!!!!தைப்பூச விடுமுறை,கூட்டரசு பிரதேசங்களான கோலாலம்பூருக்கும்,புத்ரா ஜெயாவுக்கும் மட்டும்தான்!!!அதற்கு பிரதமர் கொடுத்திருந்த காரணம்,மிகச் சிறந்த காரணம் எனக் கூறலாம்.

தைப்பூச தினத்தன்று மாநகரின் சாலைகள் எல்லாம் மிக நெரிசலாக உள்ளதாம்,அதனால் தைப்பூச விடுமுறை என்பது அவசியமாம்.
அது சரி,கோலாலம்பூரில் சாலைகள் எல்லாம் நெரிசலாகி விடுகின்றது,புத்ரா ஜெயாவிலும் நெரிசல் மிக மோசமோ???
அல்லது புத்ரா ஜெயாவில் அதிகமான தமிழர்கள் வாழ்கின்றார்களா??
அல்லது புத்ரா ஜெயாவில் ஏதாவது முருகன் கோவில் உள்ளதா??
அல்லது புத்ரா ஜெயாவில் தைப்பூசம் என்பது மிகப் பெரிய விழவா???

அப்பொழுது கெடா,பெர்லிஸ்,மலாக்கா,பஹாங்,கிளாந்தான்,திரங்கானு,சபா,மற்றும் சரவாக்கில் எல்லம் தமிழர்கள் இல்லையா???
அங்குள்ளவர்கள் எல்லாம் மலேசியர்கள் அல்லவோ???
ஒரு வேளை தேசிய முன்னனி அரசாங்கத்திற்கு அங்குள்ளவர்கள் தமிழர்கள் என்பது மறந்து விட்டதோ???

தைப்பூசத்திற்கு பொது விடுமுறை என்று சாமிவேலு என்ற மாமேதையின் ஆலோசனையின் பேரில்,ஆளும் தேசிய முன்னனி இனவாத அரசு,இந்த கண் துடைப்பு நாடகத்தை அரங்கேற்றியுள்ளது!!!

சாமிவேலுவை நம்பி நாங்கள் ஏமாந்த காலம் போயே,போய் விட்டது என்பதை மாண்புமிகு பிரதமர் இன்னும் உணரவில்லைப் போளூம்!!!
எங்கள் சிங்கங்கள் எங்களை கடந்த 25 நவம்பர் அன்றே எழுப்பி விட்டு விட்டார்கள்,இனியும் நாங்கள் ஏமாற போவதில்லை!!

மக்கள் சக்தி வெல்லும்!!!

27.1.08

போராடாதீர்கள்,நான் போராடுகிறேன்-சாமிவேலு!!!

நமக்கு இங்கு எல்லாம் கிடைக்கிறது!!
உடுத்த உடை இருக்கு;திண்ண திணீ இருக்கு;
மாசா மாசாம் 3000 usd வருமானம் இருக்கு,இங்கு என்ன இல்லை என்று போராடனும்???
தெருவில் இறங்கி போராடாதிர்கள்!!!
உங்களுக்காக வாரா வாரம் புதன் கிழமை,அமைச்சரவைக் கூட்டத்தில்தான் நான் போராடுகிறேனே;பிறகு நீங்கள் எதற்கு தெருவுக்கு போய் போராடனும்??

- கேட்கிறார் மாண்புமிகு அமைச்சர் டத்தோஸ்ரீ ச.சாமிவேலு