31.7.08

இந்த்ராஃபின் விலை வெறும் 5 இலட்சம்தானா??

சில மணி நேரங்களுக்கு முன் எனக்கு கிடைத்த ஒரு குறுந்தகவல்,இப்படி சொல்கிறது.......

இந்தியர்களின் சாபக்கேடு மீண்டும் தலைத்தூக்கியுள்ளது.இந்த்ராஃபின் தேசிய ஒருங்கிணைப்பாளர் என்று கூறிக்கொள்ளும் RS.தனேந்திரன், இந்திய சமுதாயத்திற்கு துரோகம் இழைத்துள்ளார்.இந்த்ராஃப் ஆதரவாளர்களை மஇகாவில் இணைப்பதற்கு 500,000(5 இலட்சம்) ரிங்கிட்டை மலேசிய இந்தியர்களின் சாபக்கேடான S.சாமிவேலு விடமிருந்து பெற்றுள்ளார்.5 வீரர்கள் சிறையில் வாடிக்கொண்டிருக்கும் போது,இந்த புல்லுருவி சொந்த இனத்தை விலைபேசியுள்ளான். பட்டவொர்த் மகாமரியம்மன் ஆலய வெள்ளி இரத நன்கொடையை கையாடல் செய்த இந்த பச்சோந்தி இப்போது,ஈப்போவில் தஞ்சமடைந்துள்ளதாக தெரிகிறது.தனேந்திரனோடு சேர்ந்து இந்த துரோகத்தை இழைத்துள்ள இன்னும் சிலர்,பின்வருமாறு, G.அசோகன்,G.முகுந்தன் மற்றும் மலேசியாக்கினி நிருபர் ஆதி.வீரங்கன் ஆகியோர்.இந்திய சமுதாயத்தின் துரோகிகளே,அம்மன் உங்களை நரகத்துக்கு அனுப்புவாளாக.

ஆங்கிலத்தில்,

The Indian dillema lurks it ugly head again.National Coordinator of HINDRAF, RS.Thanendran has betrayed d Indians by accepting 500,000 bribe fr d Great Indian Robber,S.Samy Vellu,to get HINDRAF supporters to join d rest of d thieves in MIC.What a shame?5 heroes languishing in jail & dis scumbag sells out his race.Having cheated silver chariot fund of d Mahamariamman Temple Butterworth,Thanenthiran is in hiding in Ipoh.His chronies who hv also recieved money fr Samy vellu include G.Asokhan,G.Mukunthan & Malaysiakini reporter Athi.Veeranggan.Taritors of d Indian comnty,may Amman Shakthi burn u to hell.

இதனால்தான் இவ்வளவு நாளும்,மக்கள் கூட்டணி அரசாங்கத்தை தொடர்ந்து தாக்கி வந்துள்ளனர் இந்த நன்றி மறந்த நரிக்கூட்டத்தினர்.

தனேந்திரன் இதையெல்லாம் செய்யக்கூடிய ஆள்தான் என்று முன்பிலிருந்து ஒரு பேச்சு இருந்த போதிலும்,உதயா அண்ணனுக்காக பல ஆதரவாளர்கள், அடக்கி வாசித்தனர்.இனிமேலும் அமைதியாய் இருந்தால்,நாளைக்கே உள்ளே உள்ள 5 பேரும் பணம் வாங்கி விட்டன்ர் என்பார் தனேந்திரன்.

தாங்கள் கேட்ட பதவியை மக்கள் கூட்டணி அரசு தரவில்லை என்றதும், கொள்கை என்பதையே விற்றுவிட்ட இவர்களெல்லாம்,பணத்துக்காக் சொந்த ம....... , தரக்குறைவான வார்த்தைகள் வேண்டாம் என்று பார்க்கிறேன்.

இனிமேலும் இந்திய சமுதாயம் பொறுத்தல் கூடாது.
இந்திய சமுதாயத்துக்கு துரோகம் இழைப்பவன் எவனாக இருந்தாலும் தண்டிக்கப்படவேண்டும்.சாமிவேலுவுக்கே பாடம் கற்பித்துள்ளோம் நாம்.
இவர்களெல்லாம் என்ன,வெறும் காளான்கள்.

பொறுத்தது போதும்,பொங்கியெலுவோம் தமிழர்களே,
பாடம் கற்பிப்போம் இந்த தனெந்திரனுக்கும்,அவர்தன் கைக்கூலிகளுக்கும்.

போராட்டம் ஓயாது,
வாழ்க மக்கள் சக்தி,ஓங்குக மக்கள் குரல்.

28.7.08

வேண்டாம் தனேந்திரன்

உரிமைப்படைகளின் அணிவகுப்பு

இந்த்ராஃப்....

இந்நாட்டு இந்தியர்களின் அடிப்படை உரிமைகளை மீட்டெடுப்பதற்காக புறப்பட்ட புயல்.
உரிமைக்காக போராடும் தைரியத்தை ஒவ்வொரு மலேசிய தமிழனுக்கும் தந்த மாபெரும் இயக்கம்.
இந்நாட்டு இந்தியர்களின் தலைவிதியை மாற்ற வந்த தன்னலமற்ற 5 தலைவர்களின் பாசறை.
மலேசிய அரசியலேயே புறட்டிப்போட்ட சரித்திர இயக்கம்.

இந்நாட்டில் உள்ள ஒவ்வொரு இந்தியனும் தலை நிமிர்ந்து நடக்கவேண்டும் என்ற வேட்கையோடு புறப்பட்ட 5 தலைவர்கள் சிறைக்கம்பிகளுக்குப் பின்னாலும்,1 தலைவர் அந்நிய தேசத்தில் அரசியல் தஞ்சமடைந்திருக்கும் இவ்வேளையில் இந்த்ராஃபின் பெயரை பயன்படுத்தி சில நயவஞ்சக சுயநலவாதிகள் தங்களின் சுயநலங்களை நிவர்த்தி செய்துக்கொள்வதை காண்கையில் மனம் வெம்புகிறது.

தூய்மையான போராட்டம்,சிதைந்து விடுமோ என்ற தவிப்பு நவம்பர் 25 பேரணியில் கலந்துக்கொண்ட எந்த தமிழனுக்கும் வருவது இயல்புதான்.
அந்த வகையில் எனக்கும் அந்த தவிப்பு மேலோங்கியே உள்ளது.
யார் உண்மையில் இந்த்ராஃப் தலைவர்??
நவம்பர் 25 பேரணியில் யார் இந்த்ராஃப் தலைவர் என்று பார்க்காமல் கலந்துக்கொண்டனர் இந்நாட்டு இந்தியர்கள்.இந்த்ராஃப் பேரணியை ஏற்பாடு செய்தார்கள் என்ற குற்றத்திற்காக ஐந்து தலைவர்கள் கைது செய்யப்பட்டப் பொழுது,இந்நாட்டு இந்தியர்கள் இந்த ஐவரையே தங்கள் மானசீக தலைவர்களாக ஏற்றுக்கொண்டனர்.தானைத்தலைவன்,தானே தலைவன் என்று பிதற்றிக்கொண்ட மூத்த அரசியல்வாதியை சென்ற இடத்திலெல்லாம் அடிக்காத குறையாக விரட்டினர் எம்மக்கள்.தாம் கைது செய்யப்படுவோம் என்ற அச்சம் சிறிதுமில்லாமல்,ஒரு நாட்டின் அமைச்சர் என்றும் பாராமல் எங்கு சென்றாலும் விரட்டியடித்தனர் எம்மக்கள்.அதற்கு ஒரே காரணம்,ஐந்து உரிமைப்போராளிகளின் மீது கொண்ட பற்றுதான்.

ஒட்டு மொத்த இந்திய சமுதாயமும் ஒரே குரலில் கொடுங்கோல் பாரிசான்(பாசிஸான்) ஆட்சியையும்,ஒத்தூதும் மஇகாவையும் மலேசியாவின் 12வது பொதுத்தேர்தலில் எதிர்த்து நின்றது.நமது சகோதர இனங்களான மலாய்,சீன சமூகங்களின் ஆதரவோடும் பாரிசானின் மூன்றில் இரண்டு பெரும்பானமையை முறித்தோம்.அப்பொழுதும் யார் இந்த்ராஃப் தலைவர்கள் என்று பார்க்கவில்லை இந்த சமூகம்.உரிமைக்காக சிறைவாசம் ஏற்றிருக்கும் ஐவரைத்தான் நினைத்தது இந்த சமூகம்.

பதவி பித்து
ஐந்து மாநிலங்களை மக்கள் கூட்டணி பிடித்த பிறகு,தங்களை இந்த்ராஃப் ஒருங்கிணைப்பாளர்கள் என்று கூறிக்கொண்டு பலர்,மாநில அரசாங்கம் வழங்கும் நகராட்சி மன்றங்களின் உறுப்பினர் பதவிக்கு அடிப்போட்டனர்.சிலர் வெற்றி பெற்றனர்,சிலருக்கு ஏமாற்றம் மட்டுமே.
சிலர் பதவி கிடைக்கவில்லை என்றதும் மகஜரெல்லாம் கூட கொடுத்தனர். எம்மக்களின் உரிமையைக்கொடு என்று கேட்ட இந்த்ராஃப்-தான் பதவியைக் கொடு என்று கையேந்தி நிற்குமா??நீ தரும் விடுதலை வெறும் பிச்சையைப் போன்றது என்று விடுதலைக்கு கெஞ்சாமல்,போராட்டத்தின் கொள்கையில் உறுதியோடு இருந்து, உள்துறை அமைச்சரை சந்திக்க மறுத்த உதயாவின் வழிவந்ததுதான் இந்த இந்த்ராஃபா??
வழிமாற வேண்டாம் தோழர்களே.....
கொடுங்கோன்மையை எதிர்த்து விட்டு,அந்த கொடுங்கோலை புரிந்தவர்களிடமே பல்லிழித்து தஞ்சமடைவதை என்னவென்று சொல்வது?
எங்கள் 5 உரிமைப்போராளிகளை விடுவிக்கும் வரை உன்னோடு சமரசம் இல்லை!! இப்படித்தான் கூறுவான் எந்தவொரு சமுதாயப்பற்றுள்ள தமிழனும்.

இந்தியர்களின் தலைவிதியை மாற்ற வந்த இந்த்ராஃபை ஏமாற்று வேலைக்காரர்கள் என்பான் குடிபோதைக்கு (விஸ்கி) பெயர்போன அரசியல்வாதி,அவனை எதிர்த்து பேசிய நமது சகாவைத் தட்டிக்கொடுக்காமல், அந்த மானம் கெட்ட அரசியல்வாதியிடம் மன்னிப்பு கேட்பதுதான் தேசிய ஒருணைப்பாளரின் வேலையா??என்ன கொடுமை இது...???
கொடுங்கோல் பாரிசானை நாடு முழுவதும் எதிர்ப்போம் என்பதுதான் இந்த்ராஃபின் பொதுத்தேர்தலின் முடிவு,ஆனால் தேசிய ஒருங்கிணைப்பாளருக்கு வேண்டியவர் பாகான் டாலாம் தொகுதியில் நிறுத்தப்பட்டால் மட்டும்,அந்த தொகுதியில் மஇகாவிற்கு ஆதரவாம்.இதுதான் கொள்கைப்பிடிப்பா??
தங்களுக்கு பதவி கிடைக்கவில்லை என்பதால்,மக்கள் சக்தியின் பெயரை உபயோகித்து கூட்டம் போடுவார்களாம்,அதில் நாமெல்லாம் போய் அமர்ந்து, ஆமாம்,ஆமாம்,நீங்கள் சொல்வதுதான் சரி என்று தலையாட்டி வர வேண்டுமாம்.தன்னலம் கருதாமல்,சமுதாயத்திற்காக சிறை சென்ற ஐவரின் விடுதலை வேண்டி எற்பட்டதுதான் மக்கள் சக்தி."மக்கள் சக்தி" என்ற சொல்லைக்கூட தங்களுடைய சுயநலத்திற்காக யாரும் உபயோகிக்கக்கூடாது என்பதுதான் எம்முடைய கொள்கை.அவ்வாறு யார் உபயோகித்தாலும் எதிர்ப்போம்.அவ்வாறு நாம் எதிர்க்கையில்,"இவன் இந்த்ராஃப் இல்லை" என்று சொல்வாராம் தனேந்திரன்,அதை சொல்ல யார் இவர்??
(தனேந்திரனின் அறிக்கை --> www.malaysiakini.com/news/86506 )
"மக்கள் சக்தி வேறு முக்கியமான வேலையே இல்லையா??
யாருக்கு எந்த கோவில் தலைவர் பதவி தருகிறார்கள் என்பதுதான் முக்கியமா?
இப்பொழுது 1905 இந்து அறவாரிய சட்டத்தை எதிர்ப்பது மிக முக்கியமா?1948 உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தை எதிர்ப்பது முக்கியமா??
ஐந்து தலைவர்களை பற்றி பேசுங்கள்,அவர்களை பிரிந்து தவிக்கும் அவர்களது குடும்பத்திற்கு உதவப்பாருங்கள்!!
அதைவிடுத்து பதவியில்லை என்றதும்,மக்கள் சக்தியின் பெயரையும், இந்த்ராஃப் பெயரையும் இழுக்காதீர்கள்.இந்த்ராஃப் என்பதும்,மக்கள் சக்தி என்பதும் ஒரு இயக்கம் என்பதைவிட ஓர் உணர்ச்சி!!
உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும் என்று ஒவ்வொரு தமிழனுக்குள்ளும் தோன்றிய உணர்ச்சி,அவ்வுணர்ச்சிதான் நவம்பர் 25ஆம் தேதி,கோலாலம்பூர் தெருக்களில் தென்பட்டது.மற்றவரை குறை கூறுவதல்ல இந்த்ராஃப்; உண்மைக்காகவும்,உரிமைக்காகவும் குரல் கொடுப்பதுதான் இந்த்ராஃப்."

இவ்வாறுதான் பினாங்கில் நடந்த ஒரு கருத்தரங்கில்,ஏற்பாட்டளர்களை பார்த்துக் கூறினேன் நான்.
கோபம் வந்துவிட்டது தனேந்திரனுக்கு.....
மலேசியகினியில் அறிக்கை விடுத்திருக்கிறார்,நான் இந்த்ராஃப் ஆதரவாளர் இல்லையாம்!!
நவம்பர் 25 பேரணியில்,கோலாலம்பூர் தெருக்களில் குவிந்த இலட்சக்கண்க்கான இந்த்ராஃப் ஆதரவாளர்கள் ஒவ்வொருவரையும் தனேந்திரனுக்கு தெரியுமோ??
இவர் எதற்காக பினாங்கில் உள்ள கோம்தாருக்கு ஏறி,ஏறி இறங்கினார் என்று எனக்கு தெரியும்,ஊருக்கும் தெரிவிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார் போலும்.

இவர்தான் இந்த்ராஃபின் தலைமைத்துவம் என்பது போல் செயல்படும் தனேந்திரனும் அவரது ஆதரவாளர்களும் நிபோங் திபால் ஆலயம் ஒன்றில் புரிந்த ஆர்ப்பாட்டங்கள் மலேசிய தமிழ் பத்திரிக்கையில் பக்கம்,பக்கமாய் வெளிவந்ததே.

இவருடைய செயல்பாடுகள் ஒட்டுமொத்தமாக இந்தராஃபின் நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்கின்றது என்பதே உண்மை.சுயநலம் தலைத்தூக்கி, இந்தியர்களுக்கு துரோகம் இழைத்த காரணத்தினால்தான் தோற்றது மஇகா.ஒரு மனிதனின் சுயநலப்போக்கால்,ஒட்டுமொத்த சமுதாயத்தின் குரலான் இந்த்ராஃப் தோற்றுவிடக் கூடதென்பதுதான் எமது எதிர்பார்ப்பு

சுயநலம் தலைதூக்கி,கொள்கை மறந்துவிட்டவெரெல்லாம் தன்னை இந்தராஃபின் ஒருங்கிணைப்பாளர் என்று கூறிக்கொள்ளும் தகுதியை இழந்து விட்டனர்.அதிலும் மிக முக்கியமாக,நேரத்திற்கேட்ப கூற்றை மாற்றிக்கொள்ளும் தனேந்திரனுக்கு இந்த்ராஃபை உரிமைக்கொண்டாட எந்த ஒரு தகுதியுமில்லை.

இந்த்ராஃப் ஆதரவாளர்கள் பலரின் மத்தியில் நிலவும் கருத்து இது.இப்படி கூறாதவர்கள்,இந்த்ராஃப் ஆதரவாளர்கள் என்பதி விட தனேந்திரன் ஆதரவாளர்கள் என்பதுதான் உண்மை.

நமக்கு தெரிந்த உண்மைகள்,திரு.வேதமூர்த்தி அவர்களுக்கும் விரைவில் தெரியவரும் என்று நம்புகிறோம்,அவரும் இவ்விடயத்தில் தீர்க்கமான் முடிவொன்றை எடுப்பார் என்றே நம்புவோமாக.

வேண்டாம் சுயநலம்,வேண்டாம் தனேந்திரன்....

போராட்டம் ஓயாது.......
வாழ்க மக்கள் சக்தி,ஓங்குக் மக்கள் குரல்....

7.7.08

அமைச்சரை சந்திக்க மறுத்தார் உதயா.....


கடந்த சனிக்கிழமை கமுண்டிங் தடுப்பு முகாமுக்கு இந்த்ராஃப் தலைவர்களை சந்திக்க வந்த உள்துறை அமைச்சர் சையட் அமீட் அல்பாரை சந்திக்க மறுத்துள்ளார் உதயக்குமார் அவர்கள்.

உதயா அவர்கள்,தனது குடும்ப உறுப்பினர்களின் வழி தெரிவித்த செய்தியில் கூறியிருப்பதாவது :

"எனது போராட்டத்தின் நோக்கம் மிக தெளிவாக இருக்கிறது;எந்த காரணத்தை கொண்டும்,யாரிடமும் என்னை விரைவில் சிறையிலிருந்து விடுவிக்க சொல்லி கெஞ்ச நான் தயாராக இல்லை."

நாடுகடந்து வாழும் உதயக்குமாரின் சகோதரர் வேதமூர்த்தி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது,

"மக்களுக்கு நான் ஏன் அமைச்சரை சந்திக்க மறுத்தேன் என்பது தெரிய வேண்டும்.அவற்றுள் மிக முக்கிய காரணங்கள்,பின்வருமாறு :
  1. அமைச்சரின் நோக்கம் ஒன்றுதான்,இந்த்ராஃப் தலைவர்கள் தாங்கள் மாறிவிட்டதாக கூறி விரைவில் விடுதலை செய்ய வேண்டும் என் கோரினர் என்ற பரப்புரை செய்யலாம்.

  2. இந்த்ராஃப்-இன் போராட்டத்தில் இருக்கும் உண்மையை நான் அறிவேன்,ஒரு போதும் இந்த போராட்டத்தில் என்னை இணைத்துக் கொண்டதற்கு நான் வருந்தியதில்லை.

  3. இதற்கு முன்னர்,இதே அமைச்சர் இந்த்ராஃப் மீது பொய்களை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்.மக்கள் மத்தியில் இந்த்ராஃப் ஒரு தேசவிரோத அமைப்பு என்ற தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.

  4. எனது இந்த போராட்டமானது,கடந்த 51 வருடங்களாக இனவாத அம்னோ அரசாங்கத்தால் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு,தொடர்ச்சியாக காலனித்துவப்படுத்தப்பட்ட இந்திய சமுதாயத்தின் உரிமைகளை மீட்டெடுக்க நடத்தப்படும் நீதி போராட்டம்.இதற்காக அனைத்து தியாகங்களையும் செய்ய நான் தயார்.

இந்த்ராஃபின் ஆதராவாளர்கள் அனைவரும் தங்களது போராட்ட கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும்.மலேசிய இந்திய சமுதாயத்திற்கு நாம் செய்யும் இந்த சேவையை எண்ணி நாம் பெருமைக்கொள்ள வேண்டும்.

எங்களுக்கெதிராக பாவிக்கப்பட்டிருக்கும் கொடுங்கோல் இசா சட்டம், எவ்வாறெல்லாம் இந்த நாட்டு இந்தியர்களை அம்னோ அரசாங்கம் தொடர்ந்து நசுக்குகிறது என்பதை வெளி உலகத்திற்கு படம் பிடித்து காட்ட வேண்டும். போராட்டம் ஒயாது."

இவ்வாறு அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வருடம் நீதி கேட்டு மலேசியாவின் கோலாலம்பூர் சாலைகளில் குவிந்த இந்தியர்களின் பேரணியை ஏற்பாடு செய்ததன் வழி,நாட்டின் அமைதிக்கு குந்தகம் விளைவித்தனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் இந்த்ராஃப் தலைவர்கள் ஐவர்,உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் எந்த்வொரு விசாரணையுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த்ராஃப் அமைப்பையும்,அதன் தலைவர்களையும் நாட்டிற்கு அச்சுறுத்தல் என்று அம்னோ அரசாங்கம் அறிவித்திருந்தது.உரிமைப்போராளிகளை சிறையில் அடைத்ததால் வெகுண்ட இந்திய சமுதாயம்,இம்முறை தேர்தலில் எதிர்கட்சிகளின் பக்கம் சாய்ந்ததால்,அம்னோ அரசாங்கம் 6 மாநிலங்களையும், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையையும் இழக்க நேரிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய பதிவில்,இரங்கராஜ நம்பியின் கொள்கை பிடிப்பைக் கண்டு வியந்தேன்.தற்காலத்தில் நம்பியைப் போல் பிடிப்புள்ள மனிதர்கள் இருப்பார்களா என்று வியந்தேன்.

இருக்கவே,இருக்கிறார் எங்கள் உரிமைப்போராளி உதயக்குமார்.

அவரின் போராட்டம் ஒயாது,அவரை விடுவிக்க சொல்லி நாங்கள் நடத்தும் போராட்டமும் ஒயாது.எங்கள் இலக்கெல்லாம் ஒன்றுதான்,மலேசிய திருநாட்டில் இந்திய சமுதாயம் மற்ற இனங்களுக்கு நிகராக தலைநிமிர வேண்டுமென்பதே.உதயாவைப் போல் கொள்கை பிடிப்புள்ள தலைவன் எங்களை வழிநடத்தும் வரை எங்கள் போராட்டம் தோற்காது!!

வாழ்க மக்கள் சக்தி,ஓங்குக மக்கள் குரல்!!

6.7.08

இரங்கராஜன் நம்பி.......ஓர் உரிமைப்போராளி!!


எனது உரிமைப்போர் வலைப்பதிவில் பொதுவாக நான் சினிமாவைப் பற்றி எழுதுவதில்லை!!

சினிமாவை வெறும் பொழுதுபோக்கு அங்கமாக பார்ப்பவன் நான்;ரசனையின் உச்சநிலையை அடைவதின் மூலமே,ஒரு திரைப்படத்தை விமர்சிக்கமுடியும் என்பது எனது கருத்து.

மிக அண்மையில் நான் ரசித்த தமிழ் திரைப்படம், தசாவதாரம்.

வைணவக்கொள்கைகளை அறவே ஏற்றுக்கொள்ள மறுக்கும் என்னைப்போன்றவர்களையும் வைணவத்தலைப்புடைய இப்படம் ஈர்த்து விட்டிருந்தது என்பதுதான் உண்மை.

கலைஞானி என்ற அடைமொழி தனக்கு சாலப்பொறுந்தும் என்பதை கமல் மீண்டும் நிருபித்துள்ளார்.தமிழ் திரைப்படத்துறையை உலக அளவுக்கு கொண்டுசென்றுள்ளார் கமல்.பத்து வேடங்களில்,பத்து வித்தியாசமான பரிணாமங்களை திரையில் காட்டியிருக்கிறார்.

உரிமைப்போர் என்ற இந்த வலைப்பதிவில் நான் சம்பந்தமில்லாமல் சினிமாவை இழுக்கவில்லை!!

தமிழ் திரையுலகை உலக் பரிணாமத்திற்குக் கொண்டுச்சென்ற உலகநாயகன், தசாவதாரத்தில் எடுத்திருக்கும் பத்து அவதாரங்களில் என்னை மிகவும் கவர்ந்த கதாபாத்திரமானது,முதன்முதலில் தோன்றும் இரங்கராஜ நம்பியின் கதாபாத்திரம்தான்.

தனதுரிமையை எந்த சூழ்நிலையிலும் விட்டுக்கொடுக்காதவன் இந்த இரங்கராஜ நம்பி!!

சிதம்பரத்தில் இருந்து கோவிந்தராஜ பெருமாளின் மூலவர் சிலையை பெயர்த்தெடுக்க ஆணையிடுகிறான் இரண்டாம் குலோத்துங்க சோழன்.தன் உயிரினும் மேலாக தாம் நேசிக்கும் இறைவனை யாரும் நெருங்காமல் தடுக்கிறான் இரங்கராஜ நம்பி.

"சுங்கம் தவிர்த்த சோழன் பேரனிடம்,கர்வம் தவிர்க்க சொல்" என்று மன்னனின் மதவெறியையும்,சைவ கர்வத்தையும் இடித்துரைக்கிறான். படைகளை வரதராஜ பெருமாளின் சன்னிதானத்திற்குள் ஏவி இரங்கராஜ நம்பியை கைது செய்கிறான் மன்னன்.வரதராஜ பெருமாளின் சிலயையும் பெயர்த்தெடுக்கிறான் மன்னன்!!இறுதிவரை அதை எதிர்த்து போராடி தோற்றும் போகிறான் இரங்கராஜ நம்பி.

கட்டுண்டு கிடக்கும் நம்பிக்கு மன்னன் இறுதி வாய்ப்பொன்றும் அளிக்கிறான். ஓம் நமசிவாய என்று கூறி உனது பாவங்களை போக்கிக்கொள் என்று உயிர்பிச்சையிடுகிறான்.தன் உயிரினும் மேலாக நேசிக்கும் இறைவனை,கண்ணீர் ததும்ப தொட்டு கும்பிட்டு;

"ஓம் நமோ நாரயணா"

என்று கதறுகிறான் இரங்கராஜ நம்பி!! வைணவர்களை அடக்கி ஒடுக்க நினைத்த மன்னனுக்கு சவால் விடும் நம்பியையும்,அவனுயிர் வரதராஜ பெருமானையும் கடலில் இறக்கிவிட ஆணையிடுகிறான் இரண்டாம் குலோத்துங்கன்.தில்லையிலிருந்து சமுத்திரம் வரையிலும் நம்பியை சிதையிலிட்டு இழுத்து வருகிறார்கள்.நம்பி அப்பொழுது உதிர்க்கும் சொற்கள்...

கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது; கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது!!

இல்லை என்று சொன்ன பின்பும்-இன்றி அமையாது!!

தொல்லை தந்தபோதும் எங்கள்-தில்லை மாறாது!!
வீர சைவர்கள் முன்னாள்-எங்கள் வீர வைணவம் தோற்காது!!
மன்னன் சொல்லுக்கு அஞ்சி என்றும்,மேற்கில் சூரியன் உதிக்காது!!
ராஜலஷ்மி நாயகன் சீனிவாசன்தான்;
சீனிவாசன் சேய் இந்த விஷ்ணுதாசன்தான்!!
நாட்டில் உண்டு ஆயிரம் ராஜ,ராஜர்தான்;
ராஜனுக்கே ராஜன் எங்கள் ரங்கராஜன்தான்!!

என்று தில்லையிலிருந்து பெயர்த்தெடுக்கப்பட்ட வரதராஜனை கிஞ்சித்தும் விட்டுக்கொடுக்காமல் கதறுகிறான் நம்பி!! தொடர்ந்து.......
நீருக்குள்ளே மூழ்கினாலும் நீதி சாகாது!!
நெஞ்சுக்குள்ளே வாழும் எங்கள் ஜோதி சாகாது!!
வீசும் காற்று வந்து விளக்கணைக்கும்;
வெண்ணிலாவை அது அனைத்திடுமா?!
கொட்டும் வான்மழை நிலம் நனைக்கும்;
அந்த வானம்தன்னை அது நனைத்திடுமா?!
சைவம் என்று பார்த்தால் தெய்வம் தெரியாது;
தெய்வம் என்று பார்த்தால் சமயம் கிடையாது!!!

என்றுமே தாம் கொண்ட கொள்கை மாறாது என்று மன்னனுக்கு இடித்துரைக்கிறான்.மேலும் உன்னால் இந்த சிலையைத்தான் பெயர்க்க முடியும் எங்கள் நெஞ்சுக்குள் வாழும் எங்கள் தெய்வத்தை அல்ல என்பதையும் கூறுகிறான் நம்பி!! "அரியும்,சிவமும் ஒன்னு,அறியாதவன் வாயில் மண்ணு" என்பதை போல்,தெய்வத்திற்கு சமயம் தெரியாது என்பதையும் இடித்துரைக்கிறான்.

இறுதியில் தனதுயிரும் மேலான வரதராஜனோடு கடலில் கலக்கிறான் நம்பி!!

இந்த நம்பியை நான் உரிமைப்போராளியாகத்தான் பார்க்கிறேன்.
தனதுரிமையை என்றுமே இழக்க விரும்பாத ஒருவன்!!
தனது ஆசாபாசங்களை கொண்ட கொள்கைக்காக விட்டுக்கொடுப்பவன்!!
உயிரே போனாலும்,மாற்றுக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாதவன்!!

இந்த நம்பியின் படைப்பு வெறும் கற்பனை என்று சிலர் சொல்கிறார்கள்;ஒரு முருகன் பாடல் நினவுக்கு வருகிறது,
"கற்பனை என்றாலும்,கற்சிலை என்றாலும்,கந்தனே உனை மறவேன்"

எனது ஆய்வுகளின்படி நம்பி,உண்மை சரித்திர பாத்திரம்!!
கமலை பிடிக்காத சிலர்,சரித்திரத்தை மற்றிக் கூறுகிறார்கள்!!(இந்த விடயத்தில் யாரோடும் நான் விவாதத்துக்கு தயார்)

நம்பியை ஒரு வைணவன் என்று மட்டும் என்னால் பார்க்க முடியவில்லை!!

வைணவ சமயத்தை ஆரிய திணிப்பு என்று இதுவரை ஏற்றுக்கொள்ளாத என்னைப்போன்றோர் பலரும்,நம்பிக்கு நடந்த சம்பவம்,சைவ மன்னனின் தவறான அணுகுமுறையென்றே கூறுவர் என்று நம்புகிறேன்.

மன்னனின் தவறான சமய அனுகுமுறையே சோழப்பேரரசை மூழ்கடித்திருக்கும் என்பது எனது கருத்து!!
சோழக்குலத்தோன்றல்கள் யாரும் செய்யத்துணியாத கொடிய செயலை இரண்டாம் குலோத்துங்கன் செய்துள்ளான்!!

சோழர்கள்,இயல்பில் சைவ மத சார்புடையவர்கள் என்ற போதிலும்,ஒரு போதும் வைணவத்திற்கு எதிராக அவர்கள் நடந்தது இல்லை என்றே கூற வேண்டும்.பல சமய மக்களையும் சரிசமமாக ஆண்டவர்கள் சோழர்கள்.சைவத்திருத்தலங்களுக்கும்,வைணவத்திருத்தலங்களுக்கும்,புத்த விகாரங்களுக்கும் சரிசமமாக திருப்பணிகள் செய்துள்ளதை சோழ வரலாறு நெடுகிலும் காணலாம்.சோழர்களின் சமயசார்பற்ற ஆட்சியை குறிப்பிட்டு சொல்வதற்கு உதாரணமாக வீராணம் ஏரியைக் கூறலாம்.ஆரம்பக்காலத்தில் இவ்வேரியை வெட்டிய சோழன்,ஏரியை சுற்றி 108 விஷ்ணு ஆலயங்களை எழுப்பியதாக படித்த நினைவு.இவ்வேரியின் இயற்பெயரே "வீர நாரயண ஏரி" என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான குடும்ப பின்னணியைக் கொண்ட இரண்டாம் குலோத்தூங்கன் செய்த கொடிய காரியம் சோழ ஆட்சியில் ஓர் இருண்ட பாகம் என்றே நான் கருதுகிறேன்.

சமய அநீதியை எதிர்த்து போராடும் எந்த போராளியின் போராட்டமும் தோற்றதில்லை எனலாம்.மன்னனின் அராஜகத்தை எதிர்த்து போராடிய இரங்கராஜ நம்பி இறந்துதான் போனான்.ஆனால்,அவன் போராட்டத்தின் வழி தெய்வம் கண் திறந்ததோ என்னவோ,கொடுங்கோல் குலோத்தூங்கனுக்கு பிறகு சோழ சம்ராச்சியம் சரிந்தது.

இந்த நம்பியின் சரித்திரம் போல்தான் நம் கண் முன்னே இப்பொழுது நிகழ்வதும்.

எங்கள் ஆலயங்களை உடைத்தான்.......
எங்கள் தெய்வ விக்கிரகங்களை சிதைத்தான்........
தட்டிக்கேட்ட எங்கள் மக்களை இரத்தம் சொட்ட உதைத்தான்........
நியாயம் கேட்டோரை சிறையில் அடைத்தான்......

முடிவு.....

இறைவன் கற்பித்தான் பாடம்!!

6 மாநிலங்களை இழந்தான்,நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையையும் இழந்தான்.

அரசாங்கத்தின் அராஜகத்துக்கு தெய்வம் க்ற்ப்பித்த பாடம்!!

இது தொடக்கம்தான்.....

அரசன் அன்று கொள்வான்,தெய்வம் நின்று கொள்ளும்!!!

இரங்கராஜ நம்பி கொலை சம்பவத்திற்கு பிறகு,ஏறக்குறைய 100 ஆண்டுகளுக்கு பிறகு சோழ சம்ராச்சியம் தனது முழு கீர்த்தியையும் இழந்தது!!

இங்கே 100 ஆண்டுகள் எல்லாம் ஆகாது;இன்னும் 1 மாதமோ,2 மாதமோ!!

எனது பார்வையில்......

இரங்கராஜ நம்பி,
உரிமைப்போராளிகளுக்கு முன்னோடி!!!