27.12.09

ஒரே மலேசியா கோட்பாடு - ஒரு அலசல் (பாகம் 2)

ஒரே மலேசியா கோட்பாடு, அமலாக்கம் சாத்தியம்தானா??
இந்த கோட்பாட்டின் அறிமுகத்திற்கு முன் நடந்தவற்றை சற்று பின்னோக்கி பார்ப்போமா??
பாகம் 2

1969க்கு பிறகு - மே 13 இனக்கலவரத்தை காரணம் காட்டி தேர்தல் வெற்றிகள் - துங்கு இராசிலியின் வீழ்ச்சி; அன்வரின் எழுச்சி!!


தங்களது அரசியல் இலாபத்திற்காக, பல வேளைகளில், ஒற்றுமையை சீர்குழைக்கும் வண்ணம் இருக்கும் நடவடிக்கைகளேயே அம்னோ மேற்கொண்டுள்ளது என்பதை பல வேளைகளிலும் நாம் கண்டுள்ளோம். அவ்வாறேல்லாம் அம்னோ செயல்படும்போதெல்லாம், மசீசவும், மஇகா மௌனமாகவே இருந்து வந்துள்ளன. 1969இல், எதிர்கட்சிகளின் திடிர் முன்னடைவுகளை எதிர்பாராத அம்னோ, ஒரு இனக்கலவரத்தை அரங்கேற்றி, ஒரு உண்மையான தேசியவாதியான துங்குவிடமிருந்து ஆட்சி பறிப்பை (Coup-De-Etat) மேற்கொண்டது. அந்த தாக்கத்தை வைத்து, அதற்கு அடுத்து வந்த பொதுத்தேர்தலிலும் தனது செல்வாக்கை நிலைநிறுத்தியது அம்னோ தலைமையிலான தேசிய முன்னணி. அதற்கும் அடுத்த பொதுத்தேர்தலை, உண்மையான தேசியவாத சிந்தனையுடைய ஓன் ஜாஃபாரின் புதல்வரான துன் உசேன் ஓன் தலைமையில் எதிர்நோக்கியதால், தேசிய முன்னணி சுலபமாகவே வென்றது. அதற்குப் பிறகு பொறுப்பேற்ற மகாதீர் காலத்தில், அம்னோவில் உட்கட்சி பூசல் உச்சிக்குப்போனது. அம்னோ தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்டு, மகாதீரின் தலைமையில் “அம்னோ பாரு” தோற்றுவிக்கப்பட்டது. துங்கு இராசாலியின் தலைமையில் “செமாங்காட் 46” தோற்றுவிக்கப்பட்டது. மலாய்க்காரர்களின் கட்சி என்பதால், மலாய்க்காரர்களை ஈர்க்க மகாதீர் உபயோகித்தது இனவாத கொள்கை. அக்காலக்கட்டத்தில், புத்துணர்ச்சி மிக்க இளைஞராக மகாதீரை மக்கள் ஏற்றுக்கொண்டாலும், கிளாந்தான் அரசக்குடும்பத்தை சேர்ந்த துங்கு இராசாலியின் புகழைக்கண்டு மகாதீர் பயந்தார் என்பதே உண்மை. மலாய்க்காரர்கள் மட்டுமின்றி மலாய்க்காரர்கள் அல்லாதோரையும் அந்த கிளாந்தான் இளவரசர் கவர்ந்திருந்தார். எக்காலக்கட்டத்திலும் இனத்துவேச கருத்துகளை வெளியிட்டிறாத ஒரே அம்னோ தலைவர் துங்கு இராசாலி. சாமான்ய மக்களோடு அன்னோன்யமாக பழகும் தனது இயல்பான குணத்தால் மக்களை பெரிதும் கவர்ந்திருந்த துங்கு இராசாலியை வெல்ல மகாதீரின் இனவாத பிராச்சாரங்கள் பெரிதும் உபயோகமானது. இனவாத பிரச்சாரங்களின் வழி, சீனர்களை அதிகமாக கொண்டுள்ள ஜசெகாவோடும், இந்தியர்களை அதிகம் கொண்டுள்ள ஐபிஎஃப்போடும் கூட்டணி வைத்துள்ள செமாங்காட் 46 வென்றால், மலாய்க்காரர்களின் சிறப்புரிமை கேள்விக்குறியாகி விடும் என்ற பிரச்சாரம் மலாய்க்காரர்களிடமும்; எதிர்க்கட்சி வென்றால், மீண்டும் “மே 13 1969” கலவரங்கள் தலைத்தூக்கும் என்றும் பிரச்சாரம் செய்யப்பட்டது. இனவாத பிராச்சாரங்களில் கூட ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்தது அம்னோ. முடிவு, 1990 தேர்தல் அம்னோ தலைமையிலான தேசிய முன்னணிக்கு அபார வெற்றி.


1990 தேர்தல் வெற்றிக்குப் பிறகு, “செமாங்காட் 46” கட்சியை உடைக்கும் பணியில் வேகமாக ஈடுபட்டார் மகாதீர். அதன் விளைவாக, அப்துல்லா படாவி, இராய்ஸ் யாத்தீம் உட்பட பல தலைவர்களும் மீண்டும் அம்னோவிற்கே திரும்பினர். 1990க்குப் பிறகு வளர்ச்சியிலும் அதிக கவனம் செலுத்தினார் மகாதீர். அந்த வளர்ச்சியின் பங்கை முடிந்த வரை தனது சுற்றியுள்ள விசுவாசிகள் பங்கிட்டுக்கொள்ளவும் அனுமதித்தார். பல அம்னோ கிளை, தொகுதி உறுப்பினர்களும் அரசாங்கத்தின் ஒதுக்கீடுகள், அரசாங்க குத்தகைகள் என்று பலவாறான வசதிகளைப் பெற்றனர். இதுப்போன்ற அனுகூலங்கள், மஇகாவிற்கும், மசீசவிற்கும் வழங்கப்பட்டன. மசீச அதனை ஏதோ தனது சமூகத்தை முன்னேற்ற உபயோகித்துக் கொண்டது. உண்மையில், எத்தனை சதவீதம் சமுதாயத்திற்கு சென்றது, எத்தனை சதவீதம் கட்சி உறுப்பினர்களுக்கு சென்றது என்பது தெரியவில்லை. மஇகாவிற்கு, TV3, Telecoms, MAS, Petronas என்று பல பங்குகள் ஒதுக்கப்பட்டாலும், அவை உறுப்பினர்களை சென்று சேர்ந்ததா, அல்லது ஒரு சில தலைவர்களை மட்டுமே சேர்ந்ததா என்பது அந்த தலைவர்களுக்குத்தான் வெளிச்சம் (மஇகாவின் முக்கிய தலைவரே, தான் பேசாமல் நாசி லெமாக் விற்கப்போகிறேன் என்று விரக்தியில் கூறியுள்ளதால், உண்மையிலேயே இந்த பங்குகள் எல்லாம் எங்குதான் போயின என்பதுதான் புரியவில்லை). இந்தியர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட பெட்ரோல் ஸ்டேசன்களைக்கூட கட்சி உறுப்பினர்களுக்குத்தான் (ஒரு சில தொகுதி தலைவர்கள்) தந்தேன் என்று சாமிவேலுவே ஒரு முறை கூறியுள்ளார். ஆகவே, ஒட்டு மொத்தத்தில், நாட்டின் துரித வளர்ச்சியின் வாயிலாக வந்த நேரடி, பொருளாதார அனுகூலங்கள் ஒரு குறிப்பிட்டத் தரப்பினரையே, அதாவது, ஆளும் கூட்டணி கட்சியின் ஊருப்பினர்களுக்கே சென்று சேர்ந்தது என்பதுதான் உண்மை. இருந்தாலும், துரித வளர்ச்சியை முன்னிறுத்தி 1995 பொதுத்தேர்தலை சந்தித்த மகாதீரின் தேசிய முன்னணி, மீண்டும் வெற்றிக்கண்டது. மகாதீரின் இராஜதந்திரத்தால், உடைக்கப்பட்ட “செமாங்காட் 46” ஏற்க்குறைய முழுமையாக இந்த 1995 தேர்தலில் காணாமல் போனது எனலாம்.

1995 தேர்தலுக்குப் பிறகு அன்வார், அம்னோவிற்குள் ஒரு மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்தார். அதற்கு முன்பு, சுதந்திர காலம் தொட்டு அம்னோவின் உறுப்பினராக இருந்து, டத்தோஸ்ரீ, தான்ஸ்ரீ என்று எந்தவொரு பட்டத்தையும் ஏற்காமல் சேவையாற்றி வந்த கபார் பாபாவை தோற்கடிக்க அன்வாரை உருவாக்கினார் மகாதீர். கபார் பாபாவும் அம்னோ பொதுப்பேரவையில் தோற்றார். அதற்குப்பிறகு, துன் பட்டத்தை அவருக்கு வழங்கி ஓய்வும் கொடுத்தார் மகாதீர். இயல்பிலேயே போராட்டக்குணத்தைக் கொண்ட அன்வார், மகாதீரோடு ஆரம்பக்காலங்களில் இணக்கமாகத்தான் பணியாற்றினார். ஆனால், கட்சி தலைவர்கள், ஒரு சில மேல்மட்ட தலைவர்கள் மட்டுமே நாட்டின் வளத்தை சுருட்டுவது சரியல்ல எனபது அன்வாரின் கருத்து. சாதரண பொது மக்களை அந்த வளங்கள் சென்றடையாவிட்டாலும், தேசிய முன்னணி அடிமட்ட தொண்டர்களுக்கும், ஆதரவாளர்களுக்குமாவது அந்த வளங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று கருதினார் அன்வார். இதன்வழி அதிகமான சாமான்யர்கள் தேசிய முன்னணி கட்சியில் இணைவார்கள்; கட்சியும் பலம்பெறும் என்பது அன்வாரின் வாதம். மகாதீர் ஏற்றுக்கொள்வதாக தெரியவில்லை. நம்மை சுற்றியுள்ள தலைவர்களுக்கு நாம் கொடுப்போம்; அவர்கள் தங்களது தொண்டர்களுக்கு கொடுப்பார்கள்; தொண்டர்கள் மக்களுக்கு தர வேண்டியதை தருவார்கள் என்பது மகாதீரின் வாதம். நாட்டின் வளம் ஒரு குறிப்பிட்ட தரப்பினரால் சுருட்டப்படுவதை அனவார் ஏற்றுக்கொள்ளவில்லை. சில காலம் மௌனமாக இருந்த அன்வார் 1998 மத்தியில் மகாதிருக்கெதிரான தனது காயை நகர்த்த தொடங்கி விட்டார். தோற்கடிக்க முடியாது என்று நினைத்த கபார் பாபாவையே தோற்கடித்த அன்வாரின் பலத்தை உணர்ந்த மகாதீர், தன்னுடைய காய்களையும் கவனமாக நகர்த்த தொடங்கினார். அதன் விளைவாக 1998இல், இடைக்கால பிரதமராக அன்வாரை அறிவித்து விட்டு ஓய்வெடுக்க சென்று விட்டார். ஓய்வென்ற சாக்கில், அன்வாருக்கெதிரான வலை பின்னப்பட்டது. அந்த திட்டங்களின் முக்கிய பங்குதாரர், இப்பொழுதைய பிரதமர். 1998இல் அம்னோ பொதுப்பேரவையில், “க்ரோனீசம்” (Cronyism) எனப்படும், சுருட்டல் முறைகேடுகள் அம்னோவிலும், பாரிசானிலும் தலைவிரித்தாடுவதை அம்பலப்படுத்தினார். மகாதீரின் ஆதரவாளர்களுக்கும், அன்வாரின் நடவடிக்கை அதிர்ச்சி வைத்தியமாக இருந்தது.
- தொடரும் -
* வரும் பாகத்தில் :
அன்வாரை வீழ்த்த புனையப்பட்ட சதி; ஊழல் தன்மையை விட்டுக்கொடுக்க முன்வராத அம்னோ; மறுமலர்ச்சி (reformasi) இயக்கம்; 1999 பொதுத்தேர்தல்

10.9.09

ஒரே மலேசியா கோட்பாடு - ஒரு அலசல்!!

ஒரே மலேசியா கோட்பாடு, அமலாக்கம் சாத்தியம்தானா??
இந்த கோட்பாட்டின் அறிமுகத்திற்கு முன் நடந்தவற்றை சற்று பின்னோக்கி பார்ப்போமா??


மலேசிய பிரதமர் நஜீப் துன் இரசாக் அறிமுகப்படுத்தியிருக்கும், ஒரு புதிய கோட்பாடு ஒரே மலேசியா கோட்பாடு. இந்த ஒரே மலேசியா கோட்பாட்டைப் பற்றிய சந்தேகங்களை பல தரப்பினரும், பல நேரங்களிலும் எழுப்பி வருகையில், உண்மையில் இந்தக் கோட்பாட்டின் அடிப்படை அம்சங்கள் என்னவென்பது இதுவரையிலும் புரியாத புதிராகவே உள்ளது. மலேசியா, மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள், சபா,சரவா பூர்வக்குடியினர், ஒராங் அஸ்லியினர், என்று பல இனங்களை தன்னகத்தேக் கொண்ட ஒரு நாடு. ஆனால், இங்கு இனவாதத்தின் அடிப்படையிலேயே அனைத்தும் நடக்கின்றன என்றால், அது மிகையாகாது. இந்த ஒரே மலேசியா கோட்பாடு உண்மையில், எதனைக் குறிக்கின்றது? இனவரையறைகளற்ற ஒரு மலேசிய தேசத்தை குறிப்பதாகவே இந்த கோட்பாடு காட்டப்படுகின்றது; உண்மையில் இன வரையறைகளைக் கடந்த ஒரு மலேசிய சமூகத்தை நாம் அடைந்து விட்டோமா என்ற கேள்விக்கு நிச்சயம் இல்லையென்பதுதான் பதிலாக இருக்கும்.

இன வேறுபாடுகளற்ற ஒரு மலேசியா, இந்த நொடி வரை ஒரு கானல் நீரைப் போன்றதாகவே உள்ளது. இந்த ஒரு மலேசியா கோட்பாடானது, புதிய பிரதமரான நஜீப்பீன் ஒரு விளம்பர சுலோகம் என்பதுதான் உண்மை. ஒரே மலேசியா கோட்பாடு, நமது நாட்டிலுள்ள இனங்களை ஒன்றினைக்கும் கோட்பாடு என்பது அரசாங்கத்தின் வாதமாக இருக்கின்றது. சுதந்திரம் பெற்று ஐம்பத்து இரண்டு ஆண்டுகள் ஆகி விட்ட பொழுதிலும், ஒற்றுமையை வலுப்படுத்துங்கள் என்று மக்களுக்கு அரசாங்கம் வலியுறுத்தத்தான் வேண்டுமா? ஒற்றுமை என்பது அவ்வாறு வலியுறுத்தினால்தான் ஏற்படுமா? பல்வேறு வளர்ச்சிகளை, மாற்றங்களை கண்ட மலேசியர்கள் ஒற்றுமை என்ற ஒரு அம்சத்தில் மட்டும் இறுக்கமாக இருந்ததற்கு காரணம் என்ன? இவ்வாறான பல கேள்விகளுக்கு பதிலை அளித்துவிட்டு, ஒரே மலேசியா கோட்பாட்டை முன்னிறுத்த அரசாங்கம் முயல வேண்டும்.

காலங்காலமாக, மலாய்க்காரர் அல்லாத சமூகத்தை மிரட்டுவதற்கு “மே 13” இனக்கலவரங்கள் சுட்டிக்காட்டப்பட்டன. மலாய்க்காரர்கள் அல்லாதோர் தங்கள் அடிப்படை உரிமைகளைக் கூட கேட்கக்கூடாது என்பது வாக்கில், இந்த “மே 13” இனக்கலவரத்தை முன்னிறுத்தி மிரட்டப்பட்டு வந்தனர். “எங்கள் பொறுமையை சோதிக்காதீர்கள்; மே 13 மீண்டும் நிகழும்” என்பது ஒரு குறிப்பிட்ட மலாய் பிரிவினரின் மிரட்டல் வாசகமாக இருந்து வந்துள்ளது. குறிப்பாக மலேசியாவை ஆளும் கூட்டணியின் முக்கிய பங்காளிக்கட்சியான அம்னோவினரே இவ்வாறான வாசகங்களை அதிகம் உபயோகித்துள்ளனர் என்பதை கடந்த கால சம்பவங்கள் நமக்கு காட்டுகின்றன. அம்னோவினர் அவ்வாறு மிரட்டும் பொழுதெல்லாம், அம்னோவின் “கங்காணிகளான” மசீசாவும், மஇகாவும், அம்னோக்காரர்களின் மிரட்டல்கள் உண்மையாகிவிடும் என்பது போலவே தத்தம் சமுதாயங்களை ஏமாற்றியுள்ளனர்.


துங்கு இரசாலியோடு தேசத்தந்தை துங்கு அப்துல் ரஹ்மான்

இதற்கு தக்க உதாரணமாக, 1989இல் “ஒப்பராசி லாலாங்”கின் போது நிகழ்ந்த சம்பவங்களைக் கூறலாம். 1989இல், சீன பள்ளிகளில் அதிகமான மலாய் ஆசிரியர்களை நியமிப்பதைக் கட்டுப்படுத்தக்கோரி சீன சமுதாயம் குரல் எழுப்பியது. மலேசிய சீன சமூகத்தினரிடம் மிகவும் செல்வாக்குப்பெற்ற சீனர் கல்வி இயக்கங்கள் இந்த கோரிக்கையை முன்வைத்தன. (சீனர்களின் இந்த கல்வி இயக்கங்களானவை, நாட்டில் சீனர்களின் அரசியலையும் முடிவு செய்யும் மிக முக்கிய இயக்கங்கள்; இந்த சீன கல்வி இயக்கங்களின் ஆதரவுப்பெற்ற வேட்பாளர்கள், சீனர் பெரும்பான்மை தொகுதிகளில் நிச்சயம் வென்றுவிடுவார்கள் என்று சூடம் ஏற்றி சத்தியம் கூட செய்யலாம். மலேசியாவில் உள்ள சீன பள்ளிகளும், அதன் அடைவுநிலைகளும் இதற்கு சான்று. சுறுக்கமாக சொன்னால், மலேசிய சீனர்களின் அரசியலைக் கூட நிர்ணயிப்பது கல்விக்குழுக்களாகவே உள்ளன; நமது சமுதாயத்திலோ, கல்வியையும், கோயிலையும் முடிவு செய்வது அரசியலாக உள்ளது). அப்பொழுது பிரதமராக இருந்த மகாதீர் முகமட், அவர்தம் அம்னோ சகாக்களுமாக சேர்ந்து, இதனை மாபெரும் இனப்பிரச்சனையாக உருவாக்கி, அரசியல் இலாபம் தேடினர். சீனர் பள்ளிகளில், சீனர் ஆசிரியர்களை அதிகம் நியமிக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் கோரிக்கை; உடனே, மலாய்க்காரர்களை நியமிப்பதை சீனர்கள் தட்டிக்கேட்டு விட்டார்களெனவும், அதனால் மலாய்க்காரர்களின் சிறப்புரிமையை கேள்விக்கேட்டு விட்டனர் எனவும் அம்னோ கூப்பாடுப்போட்டது. அக்காலத்தில், அம்னோ பல்வேறு பொதுக்கூட்டங்களைக் கூட்டியது; பல்வேறான இன துவேச வாசகங்கள் அள்ளி வீசப்பட்டன; “மலாய்க்காரர்களின் குத்துக்கத்தி (கெரிஸ்), சீனர்களின் இரத்தத்தில் நனையப்போகிறது” என்பது மிக பிரபலமான வாசகமாகும். (இந்த வாசகத்தை தனது திருவாயால் உதிர்த்தவர், இந்நாள் பிரதமர் என்று கூறப்படுகிறது, இருப்பினும் கடந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், கர்ப்பால் சிங் இது தொடர்பாக எழுப்பிய வினாவிற்கு, நஜீப் அவ்வாறு கூறவில்லை என்று விளக்கம் தெரிவிக்கப்பட்டது) இனங்களுக்கிடையான பதற்றத்தை ஏற்படுத்தியது, அம்னோவினரின் இந்த கூட்டங்கள்தான்; ஆனால், ஒப்பராசி லாலாங் நடவடிக்கையில், உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதெல்லாம பெரும்பாலும் எதிர்கட்சி தலைவர்கள். (கர்ப்பால் சிங், லிம் கிட் சியாங், லிம் குவான் எங், மக்கள் தொண்டன் வி.டேவிட், மக்கள் சேவகன் பி.பட்டு, பாஸ் கட்சியின் மாட் சாபு ஆகியோர் ஒப்பராசி லாலாங்கில் கைது செய்யப்பட்டோரில் அடங்குவர்). அதோடு மட்டுமல்லாமல், பல பத்திரிக்கைகளின் உரிமங்கள் உடனுக்குடன் பறிக்கப்பட்டு, அந்த பத்திரிக்கைகள் தடை செய்யப்பட்டன (ஸ்டார் ஆங்கில நாளேடு உட்பட). ஒரு சாதரண பள்ளி சம்பந்தப்பட்ட விசயத்தை கேள்வியெழுப்பப்பட்டதற்காக, ஒரு இன பதற்றம் உருவாக்கப்பட்டது; அந்த பதற்றைச் சுட்டிக்காட்டி, 1990இல், துங்கு இராசாலியின் செமாங்காட் 46 தலைமையிலான பலம்பொருந்திய எதிர்கட்சிக் கூட்டணியை தோற்கடித்தது அம்னோ தலைமையிலான தேசிய முன்னணி.

-தொடரும்-

26.8.09

அழிக்கப்படும் சரித்திர சுவடுகள் - ஆய்வுக்கட்டுரை!

சரித்திரத்தை மறைக்கத் (மறக்க) துடிக்கும் கூட்டம். அண்மைய காலமாக மலேசியாவில், வெகு அதிகமாக விவாதிக்கப்படும் விடயம் ஒன்று உண்டு என்றால் அது கம்போங் புவா பாலா விவகாரமாகத்தான் இருக்கும். கம்போங் புவா பாலா, எதோ ஒரு சரித்திர சுவடு என்பது போன்ற வாதங்களை முன்னிறுத்தி தங்களது காரியத்தை சாதித்துக் கொள்ள துடிக்கின்றனர் சிலர். அந்த சிலருக்கு தங்களது ஆதரவை வழங்குவது போல நடித்து தங்களது அரசியல் காய்களை நகர்த்துகின்றனர் சிலர். கம்போங் புவா பாலா உண்மையில் ஒரு சரித்திர சுவடா? பாரம்பரிய குடியிருப்பா?என்பதுதான் இப்போது பெரும்பான்மையோரின் கேள்வியாக இருக்கின்றது. கம்போங் புவா பாலாவிற்கு உண்மையில் சென்று வந்தவர்களுக்கே அது தெரியும். பாரம்பரியம், சரித்தியாம் எனப்படும் இடத்தில், பாரம்பரியத்தின் அடிப்படையான வழிப்பாட்டுத்தளம் (ஆலயம்) ஒன்று கூட இல்லையே? (இப்பொழுது கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்டப்பட்ட அந்த சிறு கோவில்தான், பாரம்பரிய சுவடு என்று சொல்லாதிர்கள்!) எண்பது வருடம் மரம் இருக்கிறதாம்; அதுதான் பாரம்பரியமாம், சரித்திரமாம்! கம்போங் புவா பாலா குடியிருப்பில் சரித்திரம், பாரம்பரியம் என்ற பேச்சுகள் எல்லாம், தங்களின் காரியத்தை சாதித்துக்கொள்ள குறிப்பிட்ட தரப்பினர் எடுத்துக்கொண்ட ஆயுதம் என்பதுதான் உண்மை. கம்போங் புவா பாலா பிரச்சனையில் முன்னிறுத்தப்படுவது "புனையப்பட்ட சரித்திரம்". இதுபோன்ற புனையப்பட்ட சரித்திரத்தை தற்காக்க நாம் எடுத்துக்கொள்ளும் சிரத்தையை, உண்மை சரித்திர சுவடுகள் அழிக்கப்படும்போதும், மறைக்கப்படும்போதும், மறக்கப்படும்போதும் நாம் வெளிப்படுத்தினால் உண்மை சரித்திரமாவது தர்க்காக்கப்படும் என்பது உண்மை.

மலாயாவின் சுதந்திரத்தில் நம் தமிழ் பிரதிநிதிகளின் பங்கு; மலேசியாவின் உருவாக்க சரித்திரத்தில் நம்மவர்களின் (இது மஇகா "நம்மவர்" களை குறிக்கவில்லைங்க!) பங்கு, மலாயாவை செல்வம் கொழிக்க செய்த நம்மினத்தானின் உழைப்பு போன்ற பல விடயங்கள், சரித்திர பாடத்திலிருந்தும், பாடப்புத்தகங்களிலிருந்தும் கொஞ்சம், கொஞ்சமாக குறைக்கப்படுவதும், பின்னொரு நாளில், இந்த நாட்டின் சுதந்திரத்திலும், வளர்ச்சியிலும் நம் இனத்திற்கு அறவே பங்கில்லை எண்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்க ஆளும் தரப்பு முனைப்பாக செயல்படுகின்றது. ஆளும் கூட்டணியில் அதிகாரப்பதுமைகளாக அமர்ந்துக்கொண்டுள்ள நமது "இனத்தின் பிரதிநிதிகளோ", தங்களின் நாற்காலி சுகத்தை பேணிக்காப்பதில் குறியாக இருப்பதால், இதையெல்லாம் அவர்கள் கண்டுக் கொள்ளப்போவதில்லை. இந்த சரித்திர "அழிப்பு/பதுக்கல்", சுதந்திர மலேசிய உருவாகத்தைத்தாண்டி, வெள்ளையர் ஆளுமைக்குட்பட்ட மலாயா சரித்திரத்தைத்தாண்டி, மலாக்கா மலாய் இராச்சியத்தின் சரித்திரத்தையும் மிஞ்சிய சரித்திரத்தை அளிக்க, மறைக்க, மறுக்க இந்த ஆளும் வர்க்கம் முனைந்து விட்டது என்பது, இந்த ஆய்வுக் கட்டுரையின் முன்னோட்டமாக இருக்கட்டும்.

இந்த சரித்திர பதுக்கல்/அழிப்பு இன எல்லை வரையறைகளைத் தாண்டி செல்கின்றதுதான் இன்னும் கொடுமையான விவரம். ஆளும் வர்க்கமானது ஒரு குறிப்பிட்ட இனத்தை மட்டும் குறிவைக்காமல், இலாபத்தை மட்டுமே முன்னிறுத்தி, இந்த மலையக மண்ணில் நிறைந்துக்கிடைக்கும் சரித்திரசுவடுகளை அளிப்பதிலும், பதுக்குவதிலும் குறியாக இருக்கின்றது என்பதுதான் வேதனையான விடயம். இதன் முதல் எடுத்துக்காட்டாக, பினாங்கு தீவிற்கு அருகில் இருக்கும் மற்றொரு குட்டித்தீவான ஜெரஜாக் தீவின் (Pulau Jerejak) சரித்திரத்தைப்பார்ப்போம்.
- தொடரும்-

8.7.09

புக்கிட் பெண்டேரா நாடாளுமன்ற உறுப்பினர் பத்திரிகை செய்தி.

கம்போங் புவா பாலா பிரச்சனையை இந்தியர் பிரச்சனையென்று எடுத்துக்கொள்ள முடியாது. இப்பிரச்சனையானது, நீதி, பொருளாதாரம், சமூகம் ஆகியவற்றை உள்ளடக்கிய பிரச்சனையாகும்.

ஆகவே, இப்பிரச்சனையில் திடீரென்று குரல் எழுப்பும் இந்த்ராப் தலைவர்களின் உண்மையான நோக்கம் என்னவென்று கேள்வி எழுப்பும் நிலையில் நாங்கள் இருக்கிறோம். இந்த இந்த்ராப் தலைவர்கள் உண்மையிலேயே எதற்காக இந்த பிரச்சனையை கையில் எடுத்துள்ளனர் என்று கேள்வியும் எழுகிறது.

பினாங்கு மாநிலத்தை கடுமையாக விமர்சித்து வரும் சில இந்த்ராப் தலைவர்கள் உண்மையான நோக்கம்தான் என்ன? இந்த கம்போங் புவா பாலா இருக்கும் இடத்திலேயே இந்தியர்களின் பாரம்பரிய கிராமமாக இருக்க வேண்டும் என்பதுதான் இவர்களின் கோரிக்கையா? அல்லது முந்தைய தேசிய முன்னணி அரசு செய்த தவறால் விலைபேசபட்டுள்ள இந்த கிராம மக்களுக்கு சரியான இழப்பீடு கிடைக்க வேண்டும் என்பது அவர்களின் நோக்கமா?

இந்த்ராப் இந்த கம்போங் புவ பாலா கிராமம் இந்த இடத்திலேயே இருக்க வேண்டும் என்று குரல் எழுப்புமானால், இந்த நில மேம்பட்டு நிறுவனம் எதுவுமே செய்யாமல் கோடிக்கணக்கில் இலாபம் அடைய வழி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார்களா என்பதுதான் இங்கெ எழும் கேள்வியாக உள்ளது.

இந்த்ராப் சட்ட ஆலோசகர் உதயக்குமார் சொல்வதைப் போல் 'ஒரு கையெழுத்தில்' இந்த கம்போங் புவா பாலா நிலத்தை கையகப்படுத்தினால் பினாங்கு மாநில அரசானது ஏறக்குறைய சுமார் 150 மில்லியன் ரிங்கிட்டை நட்ட ஈடாக வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். இந்த 150 மில்லியன் ரிங்கிட்டானது 1.5 மில்லியன் பினாங்கு மாநில மக்களின் வரிப்பணத்திலிருந்து எடுக்கப்பட வேண்டும் என்பதையும் சில இந்த்ராப் தலைவர்கள் உணர வேண்டும். கம்போங் புவா பாலா நிலத்தில் எந்தவொரு மேம்பாட்டையும் செய்யாமலே பெரும் இலாபத்தை நில மேம்பாட்டாளர் அடையக்கூடும். இந்த்ராப் தலைவர்கள் தொடர்ந்து ' ஒரு கையெழுத்தில் தீர்வு ' என்பதில் உறுதியாக இருந்தால், குறிப்பிட்ட நில மேம்பாட்டளரும் அதையே சாதகமாக பயன்படுத்தி பெரும் இலாபத்தை அள்ளி செல்ல தயாராகவே இருப்பார்.

ஆனால், கம்போங் புவா பாலா நில மேம்பாட்டால் பாதிக்கப்படும் மக்களுக்கு நியாயமான இழப்பீடு கிடைக்க வேண்டும் என்பதுதான் சில இந்த்ராப் தலைவர்களின் கோரிக்கையாக இருக்குமெனில், ஒரு வெளிப்படையான கலந்துரையாடலில் கலந்துக் கொள்ள மக்களுக்கு வழி ஏற்படுத்தித் தர வேண்டும். அதன் வழி அனைவரும் ஏற்றுக்கொள்ளும் படியான ஒரு தீர்வை நாம் எட்ட முடியும். கிராம மக்களும், மாநில அரசாங்கமும் தெளிவான முறையில், முன்றாம் தரப்பின் தலையீடு இன்றி, கலந்துரையாடுவதற்கு இந்த்ராப் எந்தவொரு கோரிக்கையும் விடுக்கவில்லை.

நியாயமான இழப்பீடு தரப்படவில்லை என்று கூறும் அதேவேளையில், ' ஒரு கையெழுத்தில்' நிலத்தை கையகப்படுத்த வேண்டும் என்றும் சில இந்த்ராபினர் கோரிக்கை விடுக்கின்றனர். உண்மையில் எந்த தீர்வைத்தான் இவர்கள் எதிர்ப்பர்கின்றனர் என்பது அவர்களுக்கே புரியவில்லை போலும்.

' ஒரு கையெழுத்தில் தீர்வு ' எனும் கோரிக்கையில் விடாப்பிடியாக இருந்தால், அது அந்த நில மேம்பாட்டு நிறுவனத்தை இலாபம் பெற வைப்பதற்கும், அந்த மக்கள் எந்தவொரு இழப்பீடும் பெறாமல் போவதற்கும் வழி அமைத்து விடும்.

உண்மையான இந்த்ராப் தோழர்கள் தங்கள் கருத்துகளை முன்வைக்க நேரம் வந்துள்ளது. இந்த்ராப் இயக்கம் நடத்திய நவம்பர் 25 பேரணியில், உரிமைகளை மீட்டெடுக்கும் நோக்கத்தோடு போராடிய ஒவ்வொரு தோழருக்கும் அந்த இயக்கத்தின் வளர்ச்சியில் பங்குள்ளது. தேசிய முன்னணி அரசாங்கம் செய்த தவறுக்கு மக்கள் கூட்டணி அரசாங்கத்தை குறை கூறும் சில தரப்பினரின் கூற்றுகள் எந்த அளவுக்கு சரியானது என்பது உங்களுக்கும் தெரியும்.ஆகவே, உண்மைக்காக குரல் கொடுக்க உண்மையான இந்த்ராப் தோழர்கள் முன்வர வேண்டும். நில மேம்பட்டலரை இலாபபடுத்தும் வண்ணம் கருத்துகளை வெளியிடும் சில தரப்பினரின் கருத்துகள் எந்த அளவுக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் மக்களுக்கு விளக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

லியு சின் டொங், புக்கிட் பெண்டேரா நாடாளுமன்ற உறுப்பினர், பினாங்கு.

9.6.09

இரு போராளிகளின் காதல்....


அன்றொரு நாள்,
வளர்ந்து நின்ற பனை மரத்தின் கீழ்,- நாம்
காதல் வசனம் பேசி நின்றோம்!!

இன்றைய நாள்,
அடர்ந்து கிடக்கும் வனத்திற்குள்,- நாம்
கையில் ஆயுதமேந்தி நிற்கின்றோம்!!

அன்றொரு நாள்,
இரு கரம்கூப்பி கும்பிட்டோம், - அந்த
ஊரோரம் ஆலயத்துத் தெய்வத்தை!!

இன்றைய நாள்,
இரு கைவலிக்க தூக்கி நிற்கின்றோம்,- ஏகே 47
தானியங்கி துப்பாக்கியை!!

அன்றொரு நாள்,
வானத்தை உற்று நோக்கி - சிதறிக்கிடக்கும்
நட்சத்திரம் எண்ணினோம்!!

இன்றைய நாள்,
வானத்தை உற்று நோக்குகிறோம், - விமானம்
குண்டு வீச வருதா என்று!!

அன்றொரு நாள்,
சொன்னேன் நான் உன்னிடம் - மணமுடித்தபின்
என் தாய்தான் உனக்கு எல்லாம் என்று!!

இன்றைய நாள்,
சொல்கிறேன் நான் உன்னிடம் - உயிர்விட்டாலும்
தாய் மண்ணின் விடுதலைதான் நோக்கம் என்று!!

நான் உன்னைக் காதலித்தேன்!!
நீ என்னைக் காதலித்தாய்!!
நாம் நம்மை காதலித்தோம்!!

என் காதல் தோற்று நின்றது,
உன் காதல் தோற்று நின்றது,
நம் காதல் தோற்று நின்றது,
நம் உயிர் தாய் மண்மீது கொண்ட காதல் முன்!!

உனக்காக நான் உயிர்விடவும் மாட்டேன்,
எனக்காக நீ உயிர்விடவும் வேண்டாம்!!
இருக்கும் ஒரு உயிரும், - நம்
தமிழ் தேசத்திற்கென்றே போய்விடட்டும்!!

நாம் காதலர்தாம்,
உனக்கு நானும், எனக்கு நீயும் மட்டுமல்ல!!
நாம் இந்த தேசத்தின் காதலர்கள்!!
நம் காதல் இந்த தேசத்தின் விடிவை நோக்கிய காதல்!!

30.5.09

தலைவர் பிரபாகரன் நிச்சயம் 5ஆம் கட்ட ஈழப்போரை முன்னெடுப்பார்....

தமிழீழ தேசிய போராட்டத்தின் நெடுகிலும், தலைவர் பிரபாகரன் பல இக்கட்டான சூழ்நிலைகளையெல்லாம் தமக்கு சாதகமாக பயன்படுத்தி வெற்றிகளை குவித்துள்ளார். தமிழீழ தேசிய போராட்டத்தை உற்று கவனித்து வருபவர்கள் இதனை வெகுவாக அறிவார்கள். உலகத்தில் உள்ள நாடுகள் எல்லாம், நாடில்லா தமிழினத்தை அழிக்கத்துடிக்கும் இலங்கை இனவெறி அரசூக்கு தோள்கொடுத்து உதவிய நான்காம் கட்ட ஈழப்போரில், புலிகளுக்கு ஏற்பட்டது பின்னடைவுதான் என்ற பொழுதிலும், புலி பதுங்குவது பாய்வதற்கு என்பதுதான் நமக்கு நன்றாக தெரியும்.

பிரபாகரன் மரணம் அடைந்து விட்டார் என்று அறிவிப்பதன் மூலம், உளவியல் பலவீனத்தை புலிப்போராளிகளுக்கு ஏற்படுத்தி, அவர்களை சரணடைய வைத்து விடலாம் என்று நம்புகிறது இலங்கை இனவெறி அரசு. இதற்கிடையில், புலிகளின் அனைத்துலக தொடர்பாளர் க.பத்மநாபனும் தலைவர் வீரமரணம் அடைந்து விட்டார் என்று அறிவித்திருந்தார். அவரது இந்த திடீர் அறிவிப்பிற்கும், இந்திய உளவுத்துறையான (RAW)ராவிற்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா என்ற சந்தேகமும் எழுகிறது. அனைத்துலக காவல்துறையான இண்டர்போலால் தேடப்படுபவர்களின் பட்டியலில் க.பத்மநாபன் சேர்க்கப்பட்டிருப்பதற்கும் இதற்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா என்ற சந்தேகமும் வலுக்கிறது.

எது எப்படியிருப்பினும், தலைவர் உயிரோடுதான் உள்ளார்,5ஆம் கட்ட ஈழப்போரை முன்னெடுப்பர் என்று உலகம் முழுவதும் பரந்துக்கிடக்கும் தமிழர்களும் நம்புகிறார்கள். முன்பு, தமிழீழ-இலங்கை அரசுகளுக்கான அமைதிப்பேச்சுகளில் பங்குபெற்றவரும், இன்று மலேசியாவின் பினாங்கு மாநிலத்தின் துணை முதல்வராகவும் உள்ள பேராசிரியர் இராமசாமி அவர்களும் அவ்வாறே கூறுகிறார். அவரின் அறிக்கை...(
இங்கே சொடுக்கவும்)

பேராசிரியர் அவர்களைப் போலவே, ஈழப்போராட்டத்தின் ஆதரவாளர்களான பழ.நெடுமாறன், வைகோ, தொல்.திருமாவளவன் ஆகிய தமிழ்நாட்டு தலைவர்களும் தலைவர் பிரபாகரன் ஐந்தாம் கட்ட ஈழப்போரை முன்னெடுப்பார் என்று உறுதிப்பட தெரிவித்துள்ளனர். ஆகவே,ஐந்தாம் கட்ட ஈழப்போரை தலைவர் முன்னெடுக்கப்போவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. உலகத்தமிழர்களான நாம், தலைவரின் கரத்தை பலப்படுத்தி, நான்காம் கட்ட ஈழப்போரில் ஏற்பட்ட இழப்புகளை கடந்து, ஐந்தாம் கட்ட ஈழப்போர் தமிழ் தேசியத்திற்கு வழி ஏற்படுத்த உறுதுணையாக இருப்போமாக.

தமிழரின் தாகம், தமிழீழ தாயகம்...

25.5.09

மரணத்தை வென்ற மாவீரன்......பிரபாகரன்


இன்று முற்பகல், புலிகளின் அனைத்துலக பிரிவுகளுக்கான செயலாளர் கா.பத்மநாபன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரன் அவர்கள் வீரச்சாவடைந்துள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளார்.
இந்த செய்தியானதை, நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.

உலக தமிழர்களுக்கெல்லாம், ஒரே தலைவனாக இருந்த பிரபாகரன், அவரது கடைசி நிமிடங்களில் கூட தனது தாய் மண்ணான ஈழத்தையும், மக்களையும் தனியே விட்டு செல்ல மாட்டேன் என்று மறுத்து விட்டதாக பத்மநாபனின் அறிக்கை கூறுகிறது. தனது கடைசி மூச்சு வரை தனது மக்களுக்காகவே வழ்ந்த மாமனிதன் பிரபாகரன் மட்டுமே.

நேற்றுதான், பட்டவொர்த் நகரில், பிரபாகரன் மரணச்செய்தியில் மறைந்துக்கிடக்கும் மர்ம முடிச்சுகள் என்ற கருப்பொருளில் கருத்தரங்கு நடத்தினோம். நிகழ்ச்சியை ஆரம்பிப்பதற்கு சில மணித்துளிகள் இருக்கும்பொழுது, பத்மநாபன் அவர்களின் மூலமாக தலைவரின் மரண செய்தி உறுதிப்படுத்தப்பட்டது. நெஞ்சம் வெடித்து விட்டதைப் போன்ற ஓர் உணர்வு. எந்த தலைவனின் மரண செய்தி பொய்யென்று நாம் அறிவிக்கப்போகின்றோமோ,அந்த செய்தி உண்மையென்று உறுதிப்படுத்தப்படும்பொழுது எப்படியிருக்கும்?!

நிகழ்வில் முன்னதாக பேசிய இரண்டு பேச்சாளர்களும், பிரபாகரன் மரண செய்தியில் தெரியும் முரண்பாடுகளை விவரமாக விவாதித்தனர். அடுத்து பேச வந்த பேராசிரியர் இராமசாமி அவர்களோ, பிரபாகரனின் அண்மைய தகவல்கள் எதையும் நேரடியாக கூறாமல், விடுதலைப்புலிகளின் அறிவிப்பிற்கு காத்திருக்குமாறு கேட்டுக்கொண்டார். தலைவரின் மரண செய்தியானது, பேராசிரியர் அவர்களை பெரிதும் பாதித்திருந்தது என்பதை அவரோடு நெருங்கி பழக வாய்ப்பு கிடைத்த அனைவருமே அறிவர். கண்கள் கலங்கிய பேராசிரியரை பார்ப்பது அதுவே முதல் முறை என்று பலர் என்னிடம் கூறினர்.

தோழி பவனேஸ்வரியின் எழுச்சிமிகு கவிதை, பிரபாகரன் என்ற மாவீரன் கண்ட பெண்ணியம் எப்படி இருக்கும் என்பதை உணர்த்தியது. தமிழ் பெண்களென்றாலே, சினிமா மாயையிலும், தொலைகாட்சி தொடர்களிலும் மூழ்கிக்கிடப்பவர்கள் என்ற கூற்றையெல்லாம், அறவே பொய்ப்பித்தது தோழி பவனேஸ்வரியின் தைரியம். கூட்டத்திற்கு வந்திருந்தவர்களில் நிறைய பெண்களும் அடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. பிரபாகரனின் கனவான, கௌரவமான தமிழின உணர்ச்சி இன்னும் மறையவில்லை என்ற ஆறுதல் எனக்குள் ஏற்பட்டது.

எனக்கு வாய்ப்பு கிடைத்த பொழுது, எனது நெஞ்சம் எவ்வாறு விம்மிக்கொண்டிருந்தது என்பது எனக்கு மட்டுமே தெரியும். கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி தமிழினத்தின் கேவலமான சாபக்கேடு, கொலைஞன் கருணாநிதியை கண்டித்தேன். கலைஞர் கருணாநிதியை நான் "கொலைஞர்" என்று கூறியதில் சிலருக்கு வருத்தம். யார் என்ன சொன்ன போதிலும், என்னுடைய கருத்தில் நான் உறுதியாகவே உள்ளேன். கருணாநிதி என்ற கொலைஞன், தமிழினத்தின் துரோகி; எட்டப்பனின் வாரிசு!!!

எனது எண்ணக்குமுறல்களில் நான் கூறியவற்றில் மிக முக்கியமான கருத்து.
பிரபாகரன் மரணத்தை வென்ற மாவீரன் என்பதுதான்.

இந்த பூமிப்பந்தில் கடைசித்தமிழன் உள்ள வரை, ஒவ்வொரு தமிழனின் நெஞ்சிலும் பிரபாகரன் வாழ்ந்துக்கொண்டிருப்பாரே அன்றி, ஒரு பொழுதும் அவருக்கு மறைவு கிடையாது. மரணத்தையெல்லாம் வென்று, மக்கள் மனதில் என்றும் வாழும் காவல் தெய்வமாக பிரபாகரன் இருப்பார் என்பதே உண்மை.

ஆகவே, பிரபாகரன் மறைவு, வீரமரணம் என்ற செய்தியெல்லாம் கண்டு தமிழர்கள் கலங்கக்கூடாது. பிரபாகரன் என்ற மாவீரன் கண்ட கனவை எப்படி நனவாக்குவது என்பதே நமது ஒட்டு மொத்த குறிக்கோளாக இருக்க வேண்டும். மீண்டும் தலையெடுக்கப்போகும் ஐந்தாம் கட்ட ஈழப்போரில், நம்மால் ஆன உதவிகளையெல்லாம் செய்து, தமிழர் படையை வெற்றிக்கொள்ள செய்ய வேண்டும்.

தமிழர்தமை காக்க வந்த தமிழ்புலியே,
தமிழர் நெஞ்சமெல்லாம் நீ தந்த உரமிருக்கும்!!

கண்ட தேசம் கனவாகிப் போவதில்லை,
மலர்ந்துவிடும் வெகு விரைவில் தமிழீழம்!!

தமிழர் மனமெல்லாம் நிறைந்திருக்கும் தலைமகனே,
ஓர்பொழுதும் மரணம் என்பது உமக்கில்லை!!

பூமிதனில் கடைசி தமிழன் உள்ளவரை,- அவர்தம்
நெஞ்சில் நீ வாழ்வாய் எப்பொழுதுமிறவாமல்!!

வாழ்க தமிழினம்!! வாழ்க பிரபாகரன்!!
தமிழரின் தாகம், தமிழீழ தாயகம்!!

20.5.09

வீரவணக்கமும், விளக்கக்கூட்டமும்...

வீரவணக்கமும், விளக்கக்கூட்டமும்...

தமிழீழ விடுதலைப்போரில் உயிர்நீத்த தமிழ் மக்களுக்கும், தமிழீழ விடுதலைப்போரளிகளுக்கும் வீர வணக்க நிகழ்வோடு, தமிழீழ தேசியத்தலைவர் தளபதி வே.பிரபாகரன் மரணச்செய்தியில் மறைந்துக் கிடக்கும் மர்ம முடிச்சுகளையும் அவிழ்க்கும் விளக்கக்கூட்டம். நான்காம் கட்ட ஈழப்போரில் உயிர்நீத்த தமிழீழ விடுதலைப் போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் அதேவேளை, தளபதி பிரபாகரன் "இறப்பு" செய்தியில் உள்ள மர்மங்களையும் பற்றி நாட்டின் தலைசிறந்த பேச்சாளர்கள் விளக்கமளிப்பர்கள். நிகழ்வின் விவரம் பின்வருமாறு :

நாள் : 24-05-2009
கிழமை : ஞாயிற்றுக்கிழமை
இடம் : டேவான் ஸ்ரீ மாரியம்மன், பட்டவொர்த்.
நேரம் : மாலை 7.00 மணிக்கு மேல்

பேச்சாளர்கள் :
சமூக சேவகர் க.முருகையன்
எழுத்தாளர் சை பீர் முகம்மது
பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி

தமிழ் நெஞ்சங்களே திரண்டு வாருங்கள்!!

( மேல் விவரங்களுக்கு : சத்தீஸ் 016-4384767 / குணாளன் 013-4853128)

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பாதுகாப்பாகவும் நலமாகவும் உள்ளார் : பிரபாகரன் இன்று இரவு பேட்டி!!



இலங்கைத் தொலைக்காட்சியில் காட்டப்பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அதற்கு மேல் முதலாவதாக உள்ள படம் 2004 கார்த்திகை 26 எடுக்கப் பட்டது.

4 வருடங்களுக்கு மேலாகிய பின்பு அவர் 2009 இளமையாகத் தோற்றம் அளிப்பது எப்படி? அந்த படத்தில் 35 தொடக்கம் 40 வயதான தோற்றத்தையே அளிக்கிறது.

முகத்தில் இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லை. 2004ம் ஆண்டு புகைப்படத்தில் அவருக்கு முகத்தில் சுருக்கங்கள் இருந்திருக்கின்றன.

கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மற்றும் அந்த சூழநிலையில் இருந்து கனகச்சிதமாக முகச்சவரம் செய்தி இருப்பாரா என்று பல சந்தேகங்கள் எழுந்துள்ளன.

அம்புலன்ஸ் வண்டியில் தப்பி செல்லும் போது சூட்டுக்கு பலியாகியாத அறிவித்த இராணுவம் இன்று மதியம் 12 மணியளவில் முல்லைத்தீவு நந்திக்கடலுக்குள் இருந்து உடலை கண்டு பிடித்துள்ளதாக அறிவித்துள்ளது.

தலைவர் பற்றிய காணொளிகள்.. சில எதிரிகளால் திட்டமிட்டு மக்களைக் குழப்ப வெளியிடப்படுகின்றன. அவருடைய முகம் போன்ற ஒன்றை போலியாக பிளாஸ்ரி சேர்ஜரிக் முறையில் செய்து ஒட்டிவிட்டுக் காண்பிக்கிறார்கள். பிளாஸ்ரிக் சேர்ஜரியை மறைக்க.. யூனிபோமும்.. தலையில் துணியும்.. பாதி உடலும் என்று காணொளிக் காட்சிகள் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. தலைவரின் இருப்பிடம் தெரியாமல் தவிக்கும் தமிழ் மக்களின் உலக எதிரிகள் அதைக் கண்டறிய பல மாயாஜாலங்களைப் புரிகின்றனர். இன்னும் புரிவர்.

அதுமட்டுமன்றி நேற்று நேற்று முன் தினம் எல்லாம் இறந்ததாகச் சொல்லப்பட்ட தலைவர்.. டி என் ஏ பரிசோதனைக்கு உட்படுத்திய தலைவரின் உடலம்.. இன்றுதான் மீட்கப்பட்டதாம் என்பதும்.. நாணயக்கார நேற்று நாம் அப்படி ஒரு அறிக்கை விடவில்லை என்றதும்.. கவனத்தில் கொள்ளத்தக்கது. எதிரிகள் திட்டமிட்டு இதை செய்கின்றனர் என்பதற்கு இது நல்ல சான்று.

தலைவரின் உடல் என்று ஒரு பிளாஸ்ரிக் சேர்ஜரி செய்த உடலை சிங்கள மக்களுக்கு நேரடியாகக் காட்சிப்படுத்தினாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை.


1. தலையில சுட்டதெண்டுகினம் தலையின்ர மேல் பகுதிய காணேல..... அத மறைச்சு வைச்சிருக்கினம்.........

2. தலைவரின்ர நாடியின்ர நடுவில ஒரு வெட்டு இருக்கும்.... ஆனா இவை காட்டுற வீடியோல அப்பிடி இல்ல......

3. இவர்கள்சுடுறதுக்கு முதல் தலைவர் "பொறுங்க சவரம் செய்தா பிறகு சுடுங்கோ" எண்டு சொல்லி சவரம் செய்திட்டுதான் செத்தவரோ?

4. இவர்கள் காட்டுற படத்தில மூக்கு கூர்மையா இருக்கு.... தலைவரின்ர அப்பிடியில்ல......

5. இவர்கள் காட்டும் உருவத்தில ஒரு இடத்தில காதையே காணேல..... முதல்ல காட்டின காதும் தலைவரின்ர காதும் ஒண்டில்ல............

6. தலைவரின்ர கை கொஞ்சம் மொத்தம் கூட.... உவைன்ர உருவத்தில அப்பிடியில்ல.....

7. சிறிலங்கால காட்டுற வீடியோக்களில அது மாஸ்க் எண்டு அப்பிடியே தெரியுதெண்டு சிங்கள ஊடகவியலாளர்கள் சிலபேர் சொன்னவை....

9. உதுகள விட தலைவருக்கெண்டு சில அடையாளங்கள், புலியளுக்கெண்டு சில அடையாளங்கள் இருக்கு.... அவையொண்டும் உந்த உருவத்தில இல்ல.... அது என்னெண்டும் வெளில சொல்லேலாது..... பிறகு உவங்கள் அடுத்தமுறை ஏமாத்தேக்க.... எல்லாத்தையும் சரியா செய்துபோடுவாங்கள்...........

10.தப்பிச்செல்லும்போதும் கூடவா அடையாள அட்டையை எடுத்து செல்வார் ????


அண்மைய உறுதிப்படுத்தப் படாத தகவல் :
பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும், இன்று இரவு அவர் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு நேரடியாக பேட்டி அளிக்கவிருப்பதாகவும் ஒரு எஸ்.எஸ்.எஸ். படு வேகமாக உலா வந்து கொண்டுள்ளது.
''மகிழ்ச்சிகரமான செய்தி. நமது தமிழ் தேசிய தலைவர் பிரபாகரன் மரணமடையவில்லை. இது உண்மை. இன்று இரவு 10.30 மணிக்கு நமது தலைவர் தொலைக்காட்சிகளுக்கு சிறப்பு பேட்டி அளிக்கவுள்ளார். பழ. நெடுமாறனும் அதுகுறித்துப் பேசவுள்ளார்.ஜீ தமிழ் தொலைக்காட்சி மற்றும் ராஜ் தொலைக்காட்சியில் இதை காணத் தவறாதீர்கள். இதை அனைத்து உண்மைத் தமிழர்களுக்கும் தெரிவியுங்கள்'' என்று அந்த எஸ்.எம்.எஸ். கூறுகிறது.

நன்றி : தமிழ்வின்.காம் (tamilwin.com)
: தட்ஸ்தமிழ்.காம் (thatstamil.com)

8.5.09

இலங்கை விவகாரத்தில் மலேசிய அரசாங்கத்தின் இரட்டை வேடம்


மலேசியாவின் இரட்டை வேட அரசாங்கத்தின் தலைவர்!!

உலக அரங்கில் எங்கே மனித அவலங்கள் நடந்தாலும், உடனே அதற்கு எதிராக குரல் எழுப்ப மலேசியா அரசாங்கம் தயங்கியதில்லை. தென்னாப்பிரிக்காவில் அப்பர்தேய்ட் எனப்படும் இனவெறி தலைவிரித்தாடிய போது பொதுநலவாய(காமென்வெல்ட்) அமைப்பிலிருந்து தென்னப்பிரிக்காவை நீக்குவதற்கு அழுத்தம் கொடுத்ததே மலேசியா என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். போஸ்னியா, கொசொவோ போன்ற பிராந்தியங்களில் இன அழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோது, மலேசிய அரசு மிகக்கடுமையாக அவற்றை கண்டித்தது என்பது குறிப்பிடத்தக்கது.


பாலஸ்தீன விவகாரத்தில் இன்னும் ஒரு படி மேல் போய், இஸ்ரேல் நாட்டுடன் எந்தவொரு தூதரக உறவுகளும் இல்லை என்ற அளவுக்கு மலேசியாவின் வெளியுறவு கொள்கை மனிதாபிமானத்தை முன்னிறுத்தியுள்ளது. ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்த போது, அதனி நேரடியாகவே மலேசியா எதிர்த்தது. அதேபோல், பாலஸ்தீனம், போஸ்னியா, கொசொவோ, பிலிப்பின்ஸ், லெபனான் என்று உலகில் பல்வேறு மூலைகளிலும் நடக்கும் இனப்படுகொலைகளை கண்டிக்கிறது மலேசிய அரசாங்கம். ஐரோப்பிய் கண்டத்தில் உள்ள நாடுகளில் நடக்கும் படுகொலைகள் மலேசிய அரசாங்கத்தின் கண்களுக்கு தெரியும் போது, நமது ஆசிய கண்டத்திலேயே உள்ள ஒரு நாட்டில் நடக்கும் இனப்படுகொலைகள் மட்டும் தெரியவில்லை. இது மலேசிய தமிழர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தும் என்று தெரிந்தும், மனிதாபிமான விவகாரத்தில் மலேசிய அரசாங்கம் தனது இரட்டை வேடத்தை அரங்கேற்றுகின்றது.

இலங்கையில் நடக்கும் இனவெறிப்போரை கண்டும் காணாதது போல் இருக்கும் மலேசிய அரசாங்கத்தின் இரட்டை வேடத்தை என்னவென்று சொல்வது??

அண்மையில் காசாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்திய போது, மலேசிய நாடாளுமன்றத்தின் அவசர கூட்டம் கூட்டப்பட்டு, இஸ்ரேல் அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்ற அவசரக்கூட்டத்தின் விவாதத்தில் கலந்துக்கொண்ட பினாங்கு மாநில துணை முதல்வர், பத்து கவான் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் இராமசாமி அவர்கள், இலங்கையில் நடக்கும் இனவெறிப்போரை நிறுத்துமாறு இலங்கை அரசையும் வற்புறுத்த வேண்டும் என்று மலேசிய அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டார். அப்பொழுது வெளியுறவு அமைச்சராக இருந்த இராய்ஸ் யாத்தீம், இலங்கையில் நிலைமைகளை தாங்கள் உற்று கவனிப்பதாகவும், ஈழத்தமிழர்களின் மீது மலேசிய தமிழார்களின் கரிசணையை கருத்தில் எடுத்துக்கொள்வதாகவும் கூறியிருந்தார். இராய்ஸ் யாத்திம் வெளியுறவு அமைச்சிலிருந்து விலகும் வரை அதைப்பற்றி பேசவேயில்லை. தமிழர்கள், இன்று கேட்பார்கள் நாளை மறந்து விடுவார்கள் என்ற நினைப்புப்போல!!

மலேசிய அரசாங்கத்தில் இந்தியர்களை பிரதிநிதிப்பதாக கூறிக்கொள்ளும் மஇகாவோ, ஏதோ இவர்கள் மனு கொடுத்தால் பிரச்சனை தீர்ந்து விடும் என்பதைப்போல் மனுக்கொடுத்து, பத்திரிகைகளுக்கு போஸ் கூட கொடுத்தனர். அமைச்சரவையில் மலேசிய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்திருப்பார்களா என்ற கேள்வி எழும் வேலையில் அதனுடைய விடையும் நமக்கு தெரிந்தே உள்ளது. கடந்த காலங்களில் மலேசியாவில் உள்ள தமிழர்களின் நிலை பற்றியே இந்த "பிரதிநிதிகள்" என்ன செய்துக்கொண்டிருந்தனர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.இவர்கள் அழுத்தம் கொடுத்திருந்தால் மலேசிய அரசு கொலைவ்வெறியன் மகிந்தாவிற்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளித்திருக்குமா?? அடிக்கடி சிங்கள காடையர் அமைச்சர்கள் மலேசியாவிற்கு வந்து புலிகளின் நடவடிக்கைகள் கண்காணிப்பதாகக் கூறுவார்களா?? ம இகா மலேசியத்தமிழர்களுக்கு மட்டும் தீங்கிழைக்கவ்வில்லை, ஈழத்தமிழர்களுக்கும் துரோகம் இழைத்துள்ளது.

பாலஸ்தீனத்தில் நடக்கும் படுகொலைகளை நாடாளுமன்றத்தை அவசரமாக கூட்டி கண்டித்த மலேசிய அரசு, இலங்கையில் நடக்கும் படுகொலைகளை ஒப்புக்குக்கூட கண்டிக்கவில்லை. பாலஸ்தீனர்களின் துன்பத்தை புரிந்து ௧0 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கிய மலேசிய அரசு, ஈழத்தில் பட்டினியால் சாகும் எம் தமிழர்களை நினைத்துக்கூட பார்க்கவில்லை. (பினாங்கு மாநில அரசு மட்டுமே, 15000 ரிங்கிட்டை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. பினாங்கு மாநில அரசு இன்னும் அதிகமாக தர விரும்பிய போதும், சட்ட சிக்கல் காராணமாகவே அதிக பட்சமாக 15000 வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது)
இதுவெல்லாம் மலேசிய அரசாங்கம், மனிதாபிமான விடயத்தில் இரட்டை வேடம் ஆடுவதை புலப்படுத்துகிறது.

கொசொவோவில் செத்தால் அவன் மனிதன்; போஸ்னியாவில் செத்தால் அவன் மனிதன், பாலஸ்தீனத்தில் செத்தாலும் மனிதன்; ஈழத்தில் சாவுபவன் மட்டும் மாடா?? கொசொவோ,போஸ்னியா,பாலஸ்தீனத்தில் துன்பப்பாடுவோரோடு மத அடிப்படையிலான தொடர்பு உள்ளதனால்தானே, மலேசியாவிற்கு அவர்களின் மீது அவ்வளவு அக்கறை??!! மலேசியாவில் வாழும தமிழர்களுக்கு ஈழத்தமிழர்களோடு இரத்த உறவே உள்ளதே, அதை புரிந்துக்கொள்ள இந்த முட்டாள் அரசாங்கத்தால் முடியவில்லையா?? அல்லது அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முட்டாள் மலேசிய இந்திய காங்கிரஸ்காரனால் புரிந்துக்கொள்ள முடியவில்லையா??

காங்கிரஸ்க்காரன் எங்கிருந்தாலும் அவனை செருப்பால் அடிக்க வேண்டும்; அது இந்திய காங்கிரஸ்க்காரனாக இருக்கட்டும், அல்லது மலேசிய இந்திய காங்கிரஸ்க்காரனாக இருக்கட்டும், பொத்தம் பொதுவாக காங்கிரஸ் தமிழர்களுக்கு எதிரித்தான்!!

இரட்டை வேடம் போடும் மலேசிய அரசே, உடனடியாக இலங்கை அரசாங்கத்தை போரை நிறுத்த வற்புறுத்து. மலேசிய வெளியுறவுத்துறையின் துணையமைச்சராக இருக்கும் தமிழனே, உனது சீன முதலாளிகளை திருப்தி படுத்துவதில் மட்டும் குறியாக இருக்காதே. உன்னைப்போல் ஒரு தமிழன்தான் அங்கு ஈழத்தில் செத்துக்கொண்டிருக்கிறான், முடிந்தால் அவனுக்கு உதவப்பார்!! எதற்கும் உருப்படாத சாதியைப் பிடித்துக்கொண்டு ஆடாதே!!!

தமிழன் என்றால் அவ்வளவு கேவலமா??

தமிழனின் உயிர் அவ்வளவு மலிவா??

தமிழனின் கோபம் தெரியுமா?? அவன் பொங்கி எழுந்தால் என்ன நடக்கும் தெரியுமா??
கடந்த மார்ச்8 தேர்தல் நினைவில் உள்ளதுதானே??

எங்கள் பொறுமையை சோதிக்காதீர்கள்; எங்கள் ஈழத்தமிழர்களை உடனே காப்பாற்ற நடவடிக்கை எடுங்கள்!!

8.3.09

ஈழத்தமிழ் சகோதரர்களுக்கு ஆதரவாக அலையென திரண்ட மலேசிய தமிழ் நெஞ்சங்கள்......நன்றி.....நன்றி.....நன்றி.....

கடந்த 7-03-2009 அன்று பட்டவொர்த் ஹஜி அகமாட் படாவி மண்டப திடலில நடைபெற்ற, "இன அழிப்பின் விளிம்பில் ஈழத்தமிழர்கள்" என்ற நிகழ்வில் ஏறக்குறைய சுமார் 3000 தமிழ்ர்கள் கலந்துக்கொண்டு தமது ஈழத்தமிழ் சகோதரர்களுக்கு ஆதரவை தெரிவித்தனர். மலேசிய வரலாற்றில் முதன்முதலாக, ஒரு மாநிலத்தின் முதல்வர், துணை முதல்வர்கள், மூத்த , எதிர்கட்சி தலைவர், மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் ஒரே மேடையில் தோன்றி இலங்கை அரசாங்கத்தின் இனவெறிப் போக்கை கண்டித்து பேசினர்.


முதன்முதலாக பேசிய மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும்,தஞ்சோங் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆன ச்சோவ் கோன் இயோ (Chow Kon Yeow) , பெரும்பான்மை இனத்தவர்களின் முதலாளித்துவ போக்கால் வரும் இன சிக்கல்களே பிற்காலத்தில் இன நெருக்கடிக்கு இட்டு சென்று பின்னாளில் உள்நாட்டு போருக்கு வழியமைப்பதாக கூறினார். இலங்கையில் நடக்கும் போர் இதற்கு மிகச்சிறந்த உதாரணம் என்றார். சிங்களவர்களின் இனவெறி போக்குதான் தமிழ்ர்களை ஆயுதம் தூக்கச்செய்தது என்பதை ஈழ வரலாறு காண்பிப்பதாக கூறினார். மலேசியாவில் இந்தியர்களை பிரதிநிதிப்பதாக கூறிக்கொள்வோரால் செய்ய முடியாத ஒரு மாபெரும் காரியத்தை பினாங்கு மாநில ஜசெக செய்துள்ளது என்பதில் பெருமை கொள்கிறோம். பினாங்கு மாநில ஜசெக தலைவர் என்ற முறையில், ஜசெக - ஈழத்தமிழர் நிவாரண நிதிக்குழுவினரை இவ்வேளையில் பாராட்ட நான் கடமைப்பட்டுள்ளேன் என்றார்.


தொடர்ந்து பேசிய பாகான் டலாம் சட்டமன்ற உறுப்பினர் அ.தனசேகரன் அவர்கள் ஜசெக ஈழத்தமிழர் நிவாரண நிதிக்குழுவின் முயற்சியை பாராட்டியதோடு, தனது சட்டமன்ற சேவை மையம் சார்பாக 5,000 ரிங்கிட்டை நிதியாக வழங்கினார்.


மாநில முதல்வர் மாண்புமிகு லிம் குவான் எங் அவர்கள் பேசுகையில் இலங்கை அரசின் இனவெறி போக்கை கடுமையாக சாடினார். இனவெறி என்பதை மனித சரித்திரத்தில் இருந்து விரட்டும் வரை உலக மக்கள் ஓயக்கூடாது என்று அவர் தமதுரையில் குறிப்பிட்டார். உலக நாடுகள் காசா பிரச்சனையில் காட்டிய முனைப்பை இலங்கை விவகாரத்தில் காட்டாததை சுட்டிக்காட்டிய லிம், உலக நாடுகள் மனிதாபிமான பிரச்சனைகளில் இரட்டை வேடம் போடக்கூடாது என்பதை வலியுறுத்தினார். மலேசியா அரசாங்கமும் அதற்கு விதிவிலக்கல்ல என்பதை அவர் குறிப்பிட்டார். மாநிலத்தில் ஆட்சி அமைத்த ஒரு வருடத்தில் பினாங்கு மாநில அரசு செய்த பல சாதனைகளை பட்டியிலிட்ட லிம், அச்சாதனைகளில் மேலும் முத்தாய்ப்பு வைப்பதை போல் இந்த ஈழத்தமிழர்கள் ஆதரவு நிகழ்வு அமைகிறது என்றார். உலகின் எந்த மூலையில் மக்கள் பாதிக்கப்பட்டாலும், அது காசாவாகட்டும், ஈழமாகட்டும் பினாங்கு மாநில அரசு தயங்காமல் அம்மக்களுக்காக குரல் எழுப்பும் என்றார். அமெரிக்காவின் புதிய அதிபர் ஒபாமா உலகில் நிலவும் போர்களுக்கு, குறிப்பாக பலஸ்தின, ஈழ்ப்பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வை முன்வைப்பார் என்று தாம் எதிர்பார்ப்பதாக கூறினார். பினாங்கு மாநில அரசின் சார்பாக ஈழ்த்தமிழர் துயர்துடைப்பு நிதிக்கு 15,000 ரிங்கிட் வழங்குவதாகவும் லிம் அறிவித்தார். ஐநா சபை இப்பிரச்சனையில் தலையிட ஜசெக வலியுறுத்தும் என்றும் லிம் அறிவித்தார்.


தொடர்ந்து விதி சேகரிப்பு நிகழ்வு தொடங்கியது. அனித்தா சாரி சென்டர் உரிமையாளர் தமிழ் நெஞ்சர் திரு . அழகர்சாமி அவர்கள் 1500 ரிங்கிட் கொடுத்து நிதி சேகரிப்பை தொடக்கி வைத்தார். அதனை தொடர்ந்து பல தமிழுள்ளங்கள் ஈழத்தமிழ் உறவுகளுக்காக வாரி கொடுத்தனர். பிரபல தொழிலதிபர் ஹென்றி பெனெடிக்ட் அவர்கள் 10000 ரிங்கிட்டை இந்நிதிக்கு வழங்குவதாக அறிவித்தார்.


தொடர்ந்து மூத்த எதிர்கட்சி தலைவர் கர்ப்பால் சிங் பேருரை ஆற்றினார். தமதுரையில் இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையை கண்டிக்காத உலக நாடுகளை குறிப்பாக இந்தியாவை கடுமையாக சாடினார். தமிழக முதல்வர் மு.கருணாநிதி எங்கே போய்விட்டார்? இந்தியா பிரதமர் மன்மோகன் சிங் எங்கே போய்விட்டார்? இலங்கையில் நடக்கும் படுகொலையை தடுக்காத இவ்விருவரும் உலக தமிழிர்களிடம் பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளனர். இலங்கையில் நடக்கும் இனவெறியாட்டத்தை கண்டிக்கக்கூட தயங்கும் இந்தியாவை நினைத்து வேதனையடைவதாக குறிப்பிட்டார். மலேசிய நாடாளுமன்றத்தில் பல முறை ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை இனப்பிரச்சனை தொடர்பாக கொண்டு வந்த தீர்மானங்களை நிறைவேற்றாத மலேசிய அரசாங்கத்தையும் கர்ப்பால் சாடினார்.

மலேசிய இந்தியர்களின் மன ஓட்டத்தை மலேசிய நாடளுமன்றத்தில் பல முறை வெளியிட்டு தம்மோடு சிறைக்கு சென்ற அமரர் பி.பட்டுவையும், அமரர் வி.டேவிட்டையும் தமதுரையில் கர்ப்பால் நினைவு கூர்ந்தார். மேலும் பேசிய கர்ப்பால் இலங்கை அரசாங்கத்தின் பொய் பிரச்சாரங்களை மக்கள் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

"இலங்கையில் விடுதலைப்புலிகளை அழித்து விடலாம் என்று கனவு காணும் மகிந்த இரஜபக்ஷே அரசாங்கத்திற்கு நான் ஒன்றை கூற விரும்புகிறேன். பிரபாகரனை உங்களால் அசைக்கக்கூட முடியாது. பிரபாகரன் ஓடிவிட மாட்டார். தமிழீழம் மலரும் வரை அவர் போராடுவர். தமிழீழம் மலர்ந்தே தீரும். பிடல் காஸ்ட்ரோவை தீவிரவாதி என்று கூறிய அதே உலகம்தான் இன்று அவரை தேசியவாதி என்று போற்றுகிறது. பிரபாகரனையும் நாளைய சரித்திரம் போராட்டவாதி எனவும், தேசியவாதி எனவும் போற்றுமே தவிர தீவிரவாதி என்று ஒரு போதும் கூறாது. "


"இந்த வேளையில் மஇகா சேகரித்த ஈழத்தமிழ்ர்களின் சுனாமி நிதியில் முறைகேடு நிகழ்ந்துள்ளதாக அறிகிறோம். ஈழத்தமிழரின் மறுவாழ்வுக்காக சேகரிக்கப்பட்ட 2.5 மில்லியன் நிதியை தவறாக பயன்படுத்தியதாக சாமிவேலு மீது புதிய குற்றசாட்டு எழுந்துள்ளது. ஈழத்தமிழரின் இன்னலில் கூட குளிர்காயும் சாமிவேலையும், மஇகாவையும் மலேசிய தமிழ்ர்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள். புக்கிட் செலாம்பாவில் மஇகாவிற்கு சரியான பாடம் காத்திருக்கிறது. நண்பர்களே, இன்று ஈழத்தமிழர் இன்னல் துடைக்க ஒன்று சேர்ந்துள்ள நாம், அள்ளி கொடுக்காவிட்டாலும் கிள்ளியாவது கொடுங்கள். ஈழத்தமிழர் துயரை பற்றி நாம் அக்கறை கொள்கிறோம் என்று கூறிய வெளியுறவு அமைச்சர் இராயிஸ் யாத்திமின் வாக்குறுதி என்ன ஆனது? நிச்சயம் இந்த பிரச்சனையை ஜசெக நாடாளுமன்றத்தில் எழுப்பும் என்று கூறி தனது உரையை முடித்தார்.


தொடர்ந்து பேசிய துணை முதல்வர், பைருஸ் கைருடின், பாலஸ்தீன் பிரச்சனையைப் போல் தமிழீழ பிரச்சனையும் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என்று குறிப்பிட்டார். செஞ்சோலை சம்பவம் உட்பட இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையை தமதுரையில் சரித்திர பின்னணியோடு எடுத்துக்கூறிய, இலங்கை அதிபர் மகிந்த இரஜபக்ஷே ஒரு கொலை வெறியன் என்று தமதுரையில் குறிப்பிட்டார். காசாவில் நடந்த கொடுமைகளை கண்டித்ததைப் போல் இலங்கையில் நடக்கும் படுகொலைகளையும் மலேசியர்கள் கண்டிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.


இறுதியாக உரையாற்றிய, ஜசெக - ஈழத்தமிழர் நிவாரண நிதியின் ஆலோசகர், பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி அவர்கள், ஏற்பாட்டுக்குழுவின் முயற்சியை பெரிதும் பாராட்டியதோடு, இன்றைய நிகழ்வு மலேசிய தமிழ்ர்களின் சரித்திரத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது எனவும் குறிப்பிட்டார். நமது ஈழத்தமிழ் சகோதரர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வண்ணம் குழுமியிருக்கும் தமிழர்களுக்கு தமது நன்றியை தெரிவித்துக் கொண்டார். பிரபாகரன் என்ற தலைவன் உள்ள வரை தமிழீழ போராட்டம் ஓய்ந்து விடாது என்று குறிப்பிட்டார்.


இலங்கை அரசு, போரில் வெற்றிகளை ஈட்டிக் கொண்டிருப்பதுப்போல் பொய் பிராச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளது. உண்மையில் புலிகள் இன்னும் வலுவுடன் உள்ளனர். புலிகளுக்கெதிரான போர் என்ற போர்வையில் அப்பாவி தமிழ்ர்களை இலங்கை இராணுவம் கொன்று குவிக்கிறது. புலிகளுடன் நேருக்கு நேர் போரிட வக்கில்லாத இலங்கை இராணுவம், குழ்ந்தைகளையும், பெண்களையும் கொன்று குவிக்கிறது.


புலிகளை ஒரு வாரத்தில் அழித்து விடுவோம், ஒரு மாதத்தில் பிடித்துவிடுவோம் என்று பூச்சிக்கட்டுகிறது ஸ்ரீ லங்க. ஆகக்கடைசியாக, துரோகி கருணா சொல்லியுள்ளார் 18 மாதங்களில் புலிகளை அழித்துவிடலாம் என்று. தமிழன் இந்த பூமிப்பந்தில் உள்ள வரை புலிகளை அளிக்க முடியாது. தமிழீழம் மலர்ந்தே தீரும். அதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது. இந்தியாவே நினைத்தாலும் அதை தடுக்க முடியாது.


அண்மைய எனது இந்திய பயணத்தில் முதல்வர் கருணாநிதி, அவரது மகன் ஸ்டாலின் ஆகியோரை சந்தித்தேன், ஈழ பிரச்சனையை பற்றி பேசினேன். ஈழபிரச்சனையை விட வாரிசு பிரச்சனைதான் அவர்களுக்கு இப்பொழுது முக்கியமாக உள்ளது. இந்திய தலைவர்கள், குறிப்பாக தமிழக தலைவர்கள் பற்றி பேசி நேரத்தை வீணடிக்க் விரும்பவில்லை. அவர்களுக்கு அவரவர் பதவி, நாற்காலிதான் முக்கியம்.


அவர்களை விட மோசமான நிலையில் இருக்கிறது நமது முன்னாள் அமைச்சரின் நிலை. ஆட்டை கடித்து, மாட்டை கடித்து, மனிதனை கடித்த கதையாகி விட்டது. மலேசிய தமிழ்ர்கள் ஏற்கனவே மைக்கா ஹோல்டிங்க்ஸ், கேபிஜெ, டேலிகோம்ஸ், தேனாகா பங்குகள் என்று ஏமாந்து விட்டனர். அண்மையில் வெளிவந்த எம்ஐஇடி கதையும் அப்படித்தான். அதிலும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் செய்தி என்னவென்றால், இலங்ககையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக சேகரிக்கப்பட்ட நிதியிலும் முறைகேடாம். மலேசிய தமிழர்களைத்தான் ஏமாற்றினார்கள் என்று பார்த்தால், பாவம் ஈழத்தமிழர்கள், போரோடு தினம்,தினம் போராடிக் கொண்டிருக்கும் அவர்கள் வயிற்றிலும் அடிக்கலாமா?


இதைக்கேட்டால், இராமசாமி ஒரு ஜீரோ என்று என் மேல் பாய்கிறார். ஆம், நான் ஜீரோதான், ஊழலில் நான் ஜீரோ; நீர் எதில் ஹீரோ என்பதை மக்கள் அறிவார்கள். ஒரு வருடத்தில் என்ன சாதித்தாய் என்று கேள்வி கேட்கும் நண்பரே, என்னோடு நேரடி விவாதத்திற்கு தயாரா? நீர் தந்த சோதனையையும், நான் செய்த சாதனையையும் பட்டியலிடுகிறேன். ஈழத்தமிழரின் சுனாமி நிதி முறைகேடுக்கு பதில் சொல்லும் வரை உம்மை விடப்போவதில்லை. புக்கிட் செலம்பாவிற்கு நான் வேட்டையாட செல்கிறேன். உம்மை எங்கும சந்திக்க நான் தயார், நீர் தயாரா?? ஆப்ரிக்கா சென்றாலும் சரி, அர்ஜென்டினா சென்றாலும் சரி எமக்கு பதில் சொல்லும் வரையில் உம்மை விடப்போவதில்லை.


மலேசிய தமிழ்ர்களின் மீது, ஈழத்தமிழர்கள் பெரும் மதிப்பு வைத்துள்ளனர். தளபதி பிரபாகரனே பல முறை இதை கூறியுள்ளார். எங்களை யார் மறந்தாலும் மலேசிய தமிழர்கள் எங்களை மறக்க மாட்டார்கள் என்று அடிக்கடி அவர் கூறுவார். அந்த கூற்றை இன்று மீண்டும் நாம் நீருபித்துள்ளோம். ஈழத்தமிழரின் துயர் துடைக்க ஒன்றிணைந்த தமிழ் நெஞ்சங்களே உங்கள் அனைவருக்கும் நன்றி. இவ்வாறு அவர் பேசினார்.


இறுதியாக, "இன அழிப்பின் விளிம்பில் ஈழத்தமிழர்" கண்டன, நிதி சேகரிப்பு ஒன்று கூடலில் சேகரிக்கப்பட்ட நிதி 73,960 ரிங்கிட் 40 சென் என்ற அறிவிப்போடு நிகழ்வு முடிவடைந்தது.

மு.satees.
செயலாளர்,
ஜசெக - ஈழத்தமிழர் நிவாரண நிதி.

3.3.09

மலேசிய தமிழர்களே.... ஈழத்தமிழரை காக்க பட்டவொர்த்தில் நாம் ஒன்றிணைவோம்


எதிர்வரும் 7-03-2009 அன்று பட்டவொர்த் ஹஜி அகமாட் படாவி மண்டப திடலில் நடைபெறவுள்ள, "இன அழிப்பின் விளிம்பில் ஈழத்தமிழர்கள்" என்ற நிகழ்வில் தமிழர் என்ற அடையாளத்தில் நாம் ஒன்றிணைவோம். எமது ஈழத்தமிழ் சகோதரர்கள் சந்திக்கும் இன்னல்களை போக்க நம்மால் இயன்ற காரியத்தை செய்வோம்.

இதுவரை மலேசிய அரசாங்கமோ, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இந்திய பிரதிநிதிகளோ, செய்யாத ஒரு அரும்பெரும் காரியத்தை பினாங்கு மாநில அரசு செய்ய முன்வந்திருக்கின்றது. "இன அழிப்பின் விளிம்பில் ஈழத்தமிழர்கள்" நிதி சேகரிப்பு மற்றும் கண்டன ஒன்றுகூடலின் அன்று பினாங்கு மாநில முதல்வர் மாண்புமிகு லிம் குவான் எங் அவர்கள் ஒரு மிக முக்கிய அறிவிப்பை செய்யவுள்ளார். தென்கிழக்காசிய பிராந்தியத்தில், தமிழீழ மக்களின் துன்பங்களை துடைக்க குரல் கொடுக்கும் முதல் அரசு, பினாங்கு மாநில அரசு என்பது இவ்வேளையில் குறிப்பிடத்தக்கது.

மலேசிய தமிழர்களின் ஒட்டுமொத்த எண்ண ஓட்டத்தை பினாங்கு மாநில அரசின் இம்முயற்சி பிரதிபலிக்கிறது என்பதும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இராஜபக்சேவின் இனவெறியாட்டத்தை கண்டிக்கும் வண்ணம் நடைபெறும் இந்நிகழ்வில் தமிழர்கள் பெரும் திரளாக கலந்துக்கொண்டு, ஈழத்தமிழர் கண்ணீர் துடைக்க குரல் எழுப்ப வேண்டும் என்பதே எமது அவா. நிகழ்வின் விவரங்கள் :-

தேதி : 07-03-2009 (சனிக்கிழமை)
இடம் : ஹஜி அகமாட் படாவி மண்டப திடல்,பட்டவொர்த்
நேரம் : மாலை 7.45க்கு மேல்

மேல் விவரங்களுக்கு 016 - 438 4767 என்ற எண்ணில் எம்மை தொடர்பு கொள்ளவும்.

நன்றி,
மு.சத்தீஸ்,
செயலாளர்,
ஜசெக - ஈழத்தமிழர் நிவாரண நிதி

25.2.09

தமிழ் வலைப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்.....





எமது அன்பிற்கும், மரியாதைக்குமுரிய தமிழ் நெஞ்சங்களே.....

எதிர்வரும் மார்ச் மாதம் ஏழாம் தேதி, பட்டவொர்த் டேவான் ஹாஜி அகமட் படாவி மண்டபத்தில் நடைபெறவிருக்கும் "இன அழிப்பின் விளிம்பில் ஈழத்தமிழர்கள்" என்ற மாபெரும் பொதுக்கூட்டத்தைப் பற்றிய விவரங்களை தங்களது வலைப்பதிவுகளில் பதிவிட்டு, இந்நிகழ்வை வெற்றிப் பெற செய்திட வேண்டுகிறோம்.

மலேசிய வரலாற்றில் முதன்முதலாக, ஒரு மாநிலத்தின் முதல்வர், துணை முதல்வர், நாடாளுமன்ற எதிரணி தலைவர், மூத்த எதிர்கட்சி தலைவர் ஆகியோர் ஒரே மேடையில் தோன்றி இலங்கை அரசாங்கத்தின் இனவெறிப் போக்கை கண்டித்து பேசவுள்ளனர். மலேசிய தமிழர் வரலாற்றில், இதுநாள் வரையிலும் இலங்கை எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்ட பொழுதிலும், இம்முறை நடத்தப்படும் இந்த பொதுக்கூட்டத்தின் வழி மலேசிய மக்கள் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே எமது நோக்கம்.


இக்கூட்டமானது, வெறும் நிதி சேகரிப்பு கூட்டமாக மட்டும் முடிந்து விடாமல், இலங்கை அரசாங்கத்தின் இன்வெறி போரை வெளிப்படுத்தும் பிராச்சார கூட்டமாகவும் அமையும். இலங்கையில் நடக்கும் இன அழிப்பு போரை, தீவிரவாதத்திற்கெதிரான போர் என்ற போர்வையில் நடத்தும் இலங்கை அதிபர் இராஜபக்சேவின் போலி முகத்திரையையும் கிழிக்கும் கூட்டமாக இது அமையும். தமிழர் அல்லாத மற்ற மலேசியர்களுக்கு இலங்கையில் நடைபெறும் கொலைவெறி ஆட்டத்தை படம்பிடித்துக் காட்டி, மலேசிய மக்களிடத்தில் இலங்கை பொருட்களை புறக்கணிக்குமாறு கோரப்படும்.


இந்நிகழ்வு சம்பந்தமான விவரங்களை தத்தம் வலிப்பதிவுகளில் வெளியிட்டு, ஈழத்தமிழர் இன்னல் துடைக்க நம்மால் இயன்றதை செய்வோம். நிகழ்வு சம்பந்தமான படங்களை இவ்வலைப்பதிவில் தங்கள் உபயோகத்திற்காக பதிவிடுகிறேன். மேல் விவரங்கள், கீழ்காணும் வலைப்பதிவில் இடம்பெற்றுள்ளது. மற்ற விவரங்களுக்கு 016 - 438 4767 என்ற எண்ணில் எங்களை தொடர்பு கொள்க.

நன்றியுடன்,

மு. சத்தீஸ்,
செயலாளர்,
ஜசெக - ஈழத்தமிழர் நிவாரண நிதி.

16.2.09

ஈழத்தமிழர் உயிர் காக்க, திரண்டு வாரீர்.....


எதிர்வரும் மார்ச் மாதம் 7ஆம் தேதி அன்று, பட்டவொர்த், டேவன் ஹாஜி அஹ்மாட் படாவி (Padang Dewan Haji Ahmad Badawi) மண்டப திடலில், இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக் நிதி சேகரிக்கவும், இலங்கை அரசாங்கத்தின் தமிழின அழிப்பு போரை கண்டிக்கும் வகையிலும் மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பினாங்கு மாநில ஜனநாயக செயல் கட்சியினரின் முயற்சியில், அண்மையில் அமைக்கப்பட்ட "ஜசெக - ஈழத்தமிழர் துயர்துடைப்பு நிதி" (DAP - SRI LANKAN TAMILS RELIEF FUND) செயற்குழுவினரின் ஒழுங்கில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.
ஸ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினரான, மாண்புமிகு R.S.நேதாஜி இராயர் தலைமையில் அமையப்பெற்ற இக்குழுவானது, ஈழத்தமிழரின் இன்னலை துடைக்க வெறும் நிதியுதவி மட்டும் போதாது என்பதையும், ஈழத்தமிழரின் வாழ்வில் நிரந்தர வசந்தம் வீச தமிழீழம் மட்டுமே நிரந்தர தீர்வென்பதையும் பிராச்சர இயக்கத்தின் மூலம் மலேசியர்கள் மத்தியில் தெளிவுப்படுத்த விரும்புகிறது. இலங்கையில் முன்னர் நடைப்பெற்ற அமைதி பேச்சுகளில் நேரடி பங்காற்றிய, பினாங்கு மாநிலத்தின் துணை முதல்வர், மாண்புமிகு பேராசிரியர் முனைவர் ப.இராமசாமி அவர்களின் வழிகாட்டலோடு இந்த செயற்குழுவின் நடவடிக்கைகள் அமையும்.

பாலஸ்தீன மண்ணில் இஸ்ரேல் நடத்தும் கொலை வெறியாட்டத்தை விட, மிகக்கொடுரமான இன அழிப்புப்போரை நடத்தும் இலங்கை அரசை கண்டிக்காத சர்வதேசத்தின் இரட்டை நாடகத்தைக் கண்டு உலக தமிழர்கள் வெதும்பி போயிருக்கும் இவ்வேளையில், இலங்கை அரசாங்கத்தின் இனவெறி அட்டூழியத்தை தமிழர் அல்லாத மற்ற மலேசியர்களுக்கு விளக்கும் முயற்சியே இந்த மாபெரும் பொதுக்கூட்டமாகும். இந்த பொதுக்கூட்டத்தில், முக்கிய பேச்சாளர்களாக கலந்த்க்கொள்ளவிருப்பவர்கள்,

  1. மாண்புமிகு லிம் குவான் எங், பினாங்கு மாநில முதல்வர்;
  2. மாண்புமிகு பேராசிரியர் முனைவர் ப.இராமசாமி, பினாங்கு மாநில துணை முதல்வர்;
  3. மாண்புமிகு டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், மலேசிய நாடாளுமன்ற எதிரணி தலைவர்;
  4. மாண்புமிகு திரு.கர்ப்பால் சிங், மலேசிய நாடாளுமன்ற மூத்த எதிர்கட்சி உறுப்பினர்;
  5. மற்றும் பலர்.


இந்நிகழ்வை பற்றிய மேல் விவரங்கள், மிக விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

நன்றி,

சத்தீஸ் முனியாண்டி,
செயலாளர், ஜசெக - ஈழத்தமிழர் துயர்துடைப்பு நிதி

(மேல் விவரங்களுக்கு, 016-4384767 அல்லது 013-4853128 என்ற எண்களில் எங்களை தொடர்பு கொள்க)

5.1.09

கணைகள் வீசும் பெண்......

ஈழத்தமிழர் தினம் இனவெறி போரால் படும் இன்னல்களை இங்குள்ள தமிழர் அறியாமல், தினமொரு கனவில் திளைத்திருப்பதை கண்டு பலமுறை எனது நெஞ்சம் வெம்பியிருக்கின்றது. அதிலும் பண்பாட்டை காக்க வேண்டிய பெண்களை பற்றிதான் எனக்கு மிக அதிகக்கவலை எனலாம்.

அங்கே ஆயுதம் கையிலெடுத்து போராடும் எமது பெண் புலிகளையும், இங்கே குடி,கும்மாளம் என பொழுதை கழிக்கும் ஒரு சில தமிழ் பெண்களையும் ஒப்பிட்டு பார்த்து பல முறை வருந்தியிருக்கிறேன்.

பண்பாடு, பாரம்பரியம் என்று இன்றும் நமது பெண்கள் பலர் வாழ்கிறார்கள் என்பதிலும் ஓரளவு திருப்தி. நமது தமிழ் பெண்களின் அபரீத வளர்ச்சி, சிந்தனை முதிர்ச்சியைக் கண்டு பெரிதும் உவகைக் கொண்டதெல்லாம் உண்டு.

பாரதி கண்ட புதுமைப்பெண் வெறும் கனவு அல்ல, இன்று நிரந்தர நிஜமாகியுள்ளது. அதிலும், பாரதியின் புதுமைப்பெண் என்று கூறிக்கொண்டு, தவறான பாதையில் செல்லும் சிலரும் உண்டு. அதுவல்ல நான் சொல்ல வந்த விடயம்.

பாரதி கண்ட புதுமைப்பெண் என்ற காலக்கட்டத்தை கடந்து, இன்று பிரபாகரன் கண்ட புலிப்பெண் என்ற காலக்கட்டத்தில் நாம் இருக்கிறோம். ஈழத்தில் மட்டும்தான் "பிரபாகரன் கண்ட புலிப்பெண்கள்" இருக்கிறார்கள் என்ற எண்ணத்தில் இருந்த எனக்கு, எனது அருமை அக்காவின் மூலம் அறிமுகமானவள் இந்த கணைகள் வீசும் பெண். எனது தமக்கையின் வழி அறிமுகமான ஒரு பெண் வலைப்பதிவரைப் பற்றிதான் மேற்கூறிய நீண்ட நெடிய விளக்கம்.

கணைகள்.... என்ற வலைப்பதிவை காண நேரிட்டப்பொழுது எனக்கு மிக ஆச்சரியமாக இருந்தது. ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் தன்னை
அடைத்துக்கொள்ளாமல், இலக்கியம், அரசியல், தகவல் பரிமாற்றம் என்று புகுந்து விளையாடும் இந்த பதிவரின் ஈழத்தைப் பற்றிய கவிதைகள், உரைவீச்சுகள்தான் எனது ஆச்சரியத்திற்கு காரணம். நமது தாய் திருநாட்டில் ஈழப்போராட்டத்தை அறிந்து வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல், உரிமையைக் கேட்டு போராடும் எமது தமிழ் புலிகளை மானசீகமாக ஆதரிக்கும் இந்த பெண் பதிவரைக் கண்டதில் உண்மையிலேயே மிகுந்த ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி.

போர்... என்றாலே "நாங்கள் அதை வெறுக்கிறோம்" எனும் பெண்களுக்கு மத்தியில், தேவியில்லாப் போரையும் உரிமைப்போரையும் வித்தியாசப்படுத்தத் தெரிந்தவர் இந்த பதிவர் என்பதுதான் சிறப்பு.
இவரின் படைப்பில் ஒன்று என்னை மிகவும் ஈர்த்தது. குறிப்பிட்ட பதிவு பின்வருமாறு...

"இலங்கை இராணுவமே! மனதில் தைரியம் என்ற ஒன்று உண்டென்றால் புலிகளிடம் நேரடியாக மோது! அதைவிடுத்து அப்பாவி மக்களைச் சித்திரவதைச் செய்யாதே! மனிதாபிமானம் என்ற ஒன்று உண்டல்லவா? மன்னிக்கவும்! தவறான கேள்வி...மனிதர்களிடம் கேட்க வேண்டிய கேள்வியை வெறி நாய்களிடம் கேட்டால் பதில் எங்கே கிடைக்கப்போகிறது?!"

"என்ன பாவம் செய்தது அந்த பிஞ்சுக் குழந்தை? உனது கண்மூடித்தனமான தாக்குதலுக்கு அந்தச் சிசு தானா பலியாக வேண்டும்? இலங்கை இராணுவ மிருகங்களே, உங்களுக்கு ஈவிறக்கமே கிடையாதா? இதயமில்லா ஜந்துக்களே, கேளுங்கள்! என்னருமை தமிழீழச் சகோதரர்கள் உங்களை வெற்றிக்கொள்ளும் நாள் வெகுதூரம் இல்லை! விரைவில் தனிநாடு உருவாகும்!"


"நீங்கள் சிதைத்து சுடுகாடாய் ஆக்கிவிட்டப் போன இடங்கள் தமிழ் சுவாசம் பெற்று நந்தவனமாய் குலுங்கும்! விடிவு வெகுதூரம் இல்லை; அதனை அடைவதற்கு வெகுநாட்களும் இல்லை! புலிகள் புத்தாடை உடுத்தி புல்லாங்குழல் வாசிக்கும் நாள் விரைவில் வரும். குழலின் இசைக்கேற்ப ஆடுவதற்கு, ஓநாய்களே, நீங்கள் தயாராக இருங்கள்!!!"

இதே கோபத்தோடுதான் ஈழ்த்தில் எமது பெண்கள் கைகளில் ஆயுதம் ஏந்துகின்றார்கள். இந்த பெண் கையில் கணினியின் தட்டச்சு கிடைத்து விட்டது. கோபம் கொப்பளித்தாலும், அது நியாயமான கோபம் என்பதில் சிறிதும் மாற்றுக்கருத்து கிடையாது.

இந்த கோபமெல்லாம் இதேப்போல் படைப்புகளாக வந்தால் மிக சிறப்பாக இருக்கும் என்பது எனது கருத்து. இந்த பெண் வலைப்பதிவரின் படைப்புகளை கவனிக்க கீழ்காணும், இணைய முகவரியை சுட்டுங்கள் :-



கணைகள் என்ற வலைப்பதிவில் வெறும் பூவிலான கணைகளை மட்டும் வீசாமல், அடிக்கடி இதுபோன்ற ஏவுகணைகளையும் வீச வேண்டும் என்பது எனது ஆவல்.
வலைப்பதிவர் நண்பர்கள், இந்த் பிரபாகரன் கண்ட புலிப்பெண்ணின் கணைகளை தொடர்ந்து ஆதரிக்க வேண்டுமென்றும் முன்மொழிகிறேன்.

2.1.09

நெஞ்சே நீ கலங்காதே.....விழுவது எழுவதற்கே.....

இன்றைய தினம் தமிழ் நெஞ்சங்கள் பலருக்கு மனம் வெதும்பி போயிருக்கும்.
தனித்தமிழ் தேசம் ஒன்றை கொணர ஆயுதம் ஏந்தி போர்க்களம் புகுந்து, பத்தாண்டுகளுக்கு மேலாக, வன்னி பெருநிலத்தில் தனியொரு அரசை நிருவி தமிழர் தேசத்தை கட்டியெழுப்பிக் கொண்டிருந்த புலிகளின் தலைமையகமான கிளிநொச்சி, சிங்கள படைகளின் ஆக்கிரமிப்பிற்கு உட்பட்டதாக கொலைவெறியன் மகிந்த ராஜாபாக்சே அறிவித்துள்ளான்.

எவ்வளவுதான் வலுவோடு நெஞ்சம் இருந்தாலும், கண்ணில் பீறிட்டு வரும் கண்ணீரை அடக்க முடியவில்லை. தனித்தமிழ் தேசிய எழுச்சி இத்தோடு முடிந்து விடுமோ என்ற அச்சத்தில் வரும் கண்ணீர்தானே தவிர தோல்வி பயத்திலோ, சோகத்தினாலோ வரும் கண்ணீர் அல்ல.

புலிகள் இதைவிட மோசமான பின்னடைவுகளையெல்லாம் சந்தித்துள்ள போதிலும், அடுத்த சில மாதங்களிலேயே அசுர பலத்தோடு சிங்கள முகாம்களை தாக்கி மீண்டும் கிளர்த்தெழுந்துள்ளதை ஈழப்போர் வரலாற்று நெடுகிலும் நாம் கண்டு வந்துள்ளோம். இந்த முறை புலிகள் கடுமையான எதிர்ப்பு எதையும் முன்வைக்காமல் பின்வாங்கியுள்ளனர் என்பதை உற்று நோக்கும் போது, பாரிய இழப்புகளை தவிர்க்கும் தந்திரபோயம் என்றே கருத வேண்டியுள்ளது.

உலகின் தலைசிறந்த மரபுவழி போர்முறையை கையாளும் விடுதலை இயக்கம் என்று பெயர் பெற்றிருக்கும் புலிகளின் அடுத்த நகர்வு என்ன என்பதே இப்போதைய அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கிளிநொச்சியை கைப்பற்றி விட்டோம் என்று இலங்கை அரசு அறிவித்த அடுத்த சில மணி நேரத்திற்குள் இலங்கையின் வான்படை தளத்திற்கு அருகில் தற்கொலைத்தாக்குதல் ஒன்று நடந்திருப்பதை பார்க்கையில், புலிகள் தங்களது கொரில்லா வழிமுறை போரை தொடங்கி விட்டதையே காட்டுகிறது.

எது எப்படியிருப்பினும், உலக தமிழ் நெஞ்சங்கள் அனைத்தும் துடித்து போயிருக்கும் இவ்வேளையில், புலிகள் மிக விரைவாக படை நகர்வுகளை மேற்கொண்டு சிங்கள இராணுவத்தின் கொட்டத்தை அடக்க வேண்டுமென்பதுதான் ஒவ்வொரு தமிழனின் ஆவல்.

தமிழ் நெஞ்சமே.....
நீ கலங்காதே.....
விழுவது எழுவதெற்கே......

தமிழ் புலியே......
உனது பின்னால் உலகத்தமிழினம்.....
உயிரினும் மேலான எமது தேசத்தின் சுதந்திரத்தை மீட்டெடு!!