6.5.08

பிரபல வலைப்பதிவாளர் உயர்திரு ராஜா பெட்ரா கமாருடின் கைது......


மேற்குறிப்பிட்ட செய்தியை பார்க்கும்பொழுது,நாம் இன்னும் அரசியலமைப்பு சட்டம் உள்ள நாட்டில்தான் வசிக்கின்றோமா என்ற சந்தேகம் எழுகின்றது.
கருத்து சுதந்திரம் என்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு அப்பாற்பட்ட ஒன்றா??

தனது கருத்துகளைக் கூட சுத்ந்திரமாக ஒரு மனிதனால் சொல்ல இயலவில்லை என்றால்,எதற்கு சுதந்திரம் என்ற வார்த்தை??

அதிகார வர்க்கத்தின் ஆணவம் மீண்டும் தலைத்தூக்குகிறது!!
மார்ச் 8,அரசியல் பேரலைக்கு பிறகு ஆணவம் தனிந்திருக்கும் என்று பலர் நம்பினாலும் கூட,ஆணவத்திற்கு ஏது அடைக்கும்தாழ் என்பதே தற்போதைய வாதமாக இருக்கின்றது.

தனது வலைத்தளத்தின் வழி,பல ஆக்ககரமான அரசியல் சிந்தனைகளை வெளியிட்டு வந்த உயர்திரு ராஜா பெட்ரா கமாருடின் அவர்கள் தேச நிந்தனைக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

அல்தான்தூயா கொலையாளிகளை நரகத்துக்கு அனுப்புவோம் என்று கூறியது தேச நிந்தனை குற்றமாம்!!(என்ன கொடுமை சார்,இது)
ஒரு அபலை பெண்,இரு குழந்தைகளுக்கு தாய்,அவரை கொன்றவருக்கும்,கொல்ல சொன்னவருக்கும் எந்த மத கோட்பாடுகளை எடுத்துக்கொண்டாலும் நரகம்தான் கிடைக்கும்,இதை கூறியதா தேச நிந்தனை??

துணைப்பிரதமரையும்,அவரின் துணைவியையும் மறைமுகமாக குறிப்பிட்டாராம் ராஜா பெட்ரா,இது போலிஸ் தரப்பின் வாதம்.
அப்படியே அவர் கூறியிருந்தாலும்,துணைப்பிரதமரோ,அல்லது அவரின் துணைவியோ,சிவில் வழக்கு ஒன்றை ராஜா பெட்ரா அவர்கள் மீது தொடர்ந்திருக்கலாம்,ஏன் தேச நிந்தனை குற்றத்தை போலிஸ் தரப்பு சுமத்துகின்றது??
இதுதான் இந்த நாட்டில் காலம்,காலமாக நடந்து வரும் அதிகார தவறுபயோகத்தை மீண்டும் பிரதிபலிக்கிறது இந்த கைது!!

அரசியல் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதில் முன்னோடியாக திகழும் உயர்திரு ராஜா பெட்ரா அவர்கள் விரைவில் விடுதலை அடைவார்,அவருக்கெதிரான குற்றச்சாட்டுகள் தவிடு பொடியாகும் நாள் வெகு விரைவில்!!

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்,தர்மம் மறுபடி வெல்லும்.......

No comments: