9.9.08

எப்பிங்காம் தமிழ்பள்ளி நிலம் விழுங்கப்பட்டுள்ள உண்மை தெரிய வந்துள்ளது.....

எப்பிங்காம் தமிழ்பள்ளிக்கு தனியார் நிறுவனம் வழங்கிய நிலம்,சாமிவேலு பெயருக்கு மாற்றப்பட்டுள்ளதைக் காட்டும் பத்திரம்.
இதுவொரு புதிய செய்தி;ஆனாலும் அதிர்ர்ச்சியான செய்தியில்லை.....
கையும் களவுமாக பிடிபட்டுள்ளனர்;ஆனாலும் சாமிவேலுவா கொக்கா,கழுவுற நீருல,நழுவுற மாதிரி தப்பிச்சிடுவான் மனுசன்.
தமிழ்பள்ளிகளுக்கெல்லாம் தாம்தான் காவலன் என்பதைப் போல் காட்டிக்கொள்ளும் தானைத்தலைவன் செய்திருக்கும் வேலையைப் பார்த்தீர்களா??
இன்னும் கொஞ்சம் ஏமாந்தால்,இந்த சமுதாயத்தையே ஒட்டு மொத்தமாக சுருட்டி விற்றுவிடுவார்கள் மஇகாகாரர்கள்.
அங்கு கடித்து,இங்கு கடித்து,தமிழ்பள்ளிகளைக் கடித்துள்ளார் சாமி.
இப்பொழுது புதிதாக எழுந்திருக்கும் கேள்வி.....
கூலிமில் உள்ள ஒரு தமிழ்பள்ளிக்கு கத்ரி இதற்கு முன்பு ஒதுக்கிய நிலம் என்ன ஆனது என்பதுதான்.
இந்த நிலம் சாமிவேலுவின் பெயரிலோ,டத்தோ சரவணன்(முன்னாள் கெடா ஆட்சிக்குழு உறுப்பினர்) பெயரிலோ இரூந்தலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
மார்ச் 8 தேர்தலுக்கு முன்பு,பினாங்கு மாநிலத்தில்,பத்துகவான் தமிழ்பள்ளிக்கு பினாங்கு மேம்பாட்டு நிறுவனம்(PDC) வழங்கிய 3 இலட்சம் வெள்ளி நன்கொடை, தேர்தல் முடிந்து பல மதங்களுக்கு பிறகே பள்ளியின் கட்டட மேம்பாட்டுக் குழுவிடம் வழங்கப்பட்டது.வழங்கியவர் முன்னாள் அட்சிக்குழு உறுப்பினர்.ஆட்சிக்குழு உறுப்பினராக இருக்கும்போது வழங்கப்பட்ட பணம், தேர்தலில் தோற்ற பிறகு வழங்கப்பட்டது என்பதுதான் உண்மை. இம்மூன்று இலட்சம் வெள்ளியானது தேர்தலின் போது குறிப்பிட்ட தலைவரின் தேர்தல் செலவுக்காக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இதேப்போல்தான் அசாட் தமிழ்பள்ளி விவகாரமும்.நிலமே ஒதுக்காமல் நிலத்தை ஒதுக்கி விட்டோம்,மான்யத்திற்கு காத்திருக்கிறோம் என்றெல்லாம் வசனம் பேசினார்கள். பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் முனைவர் இராமசமி அவர்கள் ம இகா தலைவர்கள் கூறுவது போல அசாட் தமிழ்பள்ளிக்கு எந்த நிலமும் முன்னாள் தேசிய முன்னணி அரசால் ஒதுக்கப்படவில்லையென்ற உண்மையை வெளிபடுத்தினார்,அதோடு மட்டுமல்லாமல் மஇகா-காரர்களின் தமிழ்பள்ளி நாடகத்தை அம்பளப்படுத்தினார்.அதோடு மட்டுமில்லாமல் சாமிவேலுவை தமிழ்பள்ளி விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்ற ஒரு அழ்ந்த அறிக்கையையும் வெளியிட்டார்.
சாமிவேலுவும் அவரின் சகாக்களும் தமிழ்பள்ளியை வைத்து நடத்தும் நாடகங்களை ஒவ்வொன்றாக நமது மக்கள் கூட்டணி தலைவர்கள் தொடர்ந்து அம்பலப்படுத்துவர்.
தொடர்ந்து காத்திருப்போம்,
இந்த திருடர்களின் திருட்டுக்களை மேலும் அறிய!!!