3.2.08

இந்தியர்களின் 7 முக்கிய அதிருப்திகள்-கூறுகிறார் சாமிவேலு.....


இந்தியர்களின் அதிருப்திகளை கலைவத்ற்கு 7 முக்கிய அம்சங்களை கோடிட்டுள்ளார் மஇகாவின் தலைவரும்,பொதுப்பணித்துறை அமைச்சருமான மாண்புமிகு டத்தோஸ்ரீ சாமிவேலு.அந்த 7 முக்கிய அம்சங்களானவை :


  • சரிசமமான சொத்துடமை(பங்குச்சந்தை உடமை) ;
  • அரசாங்க பல்கலைகழகங்களில் அதிகமான இந்திய மாணவர்களின் சேர்க்கை;
  • மேம்படுத்தப்பட்ட வேலை வாய்ப்புகள்,குறிப்பாக அரசாங்கத் துறைகளில்;
  • இந்திய மாணவர்களுக்கு அதிகமான அரசாங்க கல்வி நிதியுதவிகள்;
  • மேம்படுத்தப்பட்ட வர்த்தக வாய்ப்புகளும்,சிறு வர்த்தக கடனுதவிகளும்;
  • முறையான புறநகர் ஏழ்மை ஒழிப்புத் திட்டங்கள்;
  • பொதுசேவைத் துறைகளின் நடவடிக்கைகள் சரிசமமாகவும்,நேர்மையாகவும் நடப்பதை கண்காணிக்கவும்,மேம்படுத்தவும் முறையான செயல்திட்ட வடிவமைப்பு.


இந்த 7 முக்கிய அம்சங்களை தீர்வு காண்பதற்கு அரசாங்கம் உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென்று,துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் அவர்களிடம் சாமிவேலு இன்று கோரிக்கை விடுத்தார்.இந்த 7 அமசங்கள்தான் இந்தியர்களை மேம்படுத்தும் மஇகாவின் முயற்சிகளுக்கு பெரும் சவாலாக இருப்பதாக அவர் கூறினார்.

"மற்ற இனங்களை போலவே தங்களின் வாழ்வாந்தரமும்,சமுதாய,பொருளாதர வளர்ச்சிகளும் இருக்க வேண்டுமென்று இந்தியர்கள் விரும்புகிறார்கள்.மஇகாவின் ஆய்வுப்படி இந்தியர்களின் எதிர்பார்ப்புகளும்,கோரிக்கைகளும் மிக அதிகமாக உள்ளன,இதற்காக அவர்கள் தொடர்ந்து எங்களை நாடியும் வருகின்றனர்." என்று சாமிவேலு கூறினார்.

சமிபகாலமாக,மலேசிய இந்தியர்களின் தோல்விகளுக்கு காரணமாக தொடர்ந்து குறைக்கூறப்படும் சாமிவேலு,இந்தியர்களின் எதிர்பார்ப்பு சரிசமமான,நியாயமான அரசாங்க கொள்கைகளே என்று கூறினார்.
மேற்குறிப்பிட்ட 7 புள்ளிகளைப் பற்றி தொடர்ந்து பேசிய சாமிவேலு,பங்குச்சந்தையில் இந்தியர்கள் முதலீடு செய்வதற்கு ஏதுவாக அரசாங்கம் PNB-இன் மூலம் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்துமாறும் கோரிக்கை விடுத்தார்.இதன் மூலம் 2020க்குள் இந்தியர்கள் 3% சொத்துடமையை அடைவார்கள் என்றும் குறிப்பிட்டார்.

இதுவரை அரசாங்கம் எடுத்துள்ள முயற்சிகளுக்கு நன்றியும்,பாரட்டையும் தெரிவிக்கும் அதேவேளை,இவ்வாறான முயற்சிகள் மேலும் சிறந்த முறையில் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும்,அப்போதுதான் இந்தியர்களின் சமூக,பொருளாதார சிக்கல்களை கலைய முடியுமென சுட்டிக்காட்டினார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசாங்கத்திடம் பரிந்துரைக்கப்பட்ட இந்த 7 புள்ளி அம்சங்களுக்கு அரசாங்கம் விரைந்து தீர்வு காணும் எனவும் சாமிவேலு நம்பிக்கை தெரிவித்தார்."நான் கடந்த சில மாதங்களாக அமைச்சரவையில் இதுகுறித்து பேசி வருகிறேன்,விரைவில் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் என நம்புகிறேன்,"என்று அவர் கூறினார்.

தற்போது இந்தியர்களின் மத்தியில் நிலவும் அதிருப்தி,மஇகாவை தேர்தலின் போது பாதிக்காது எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்."மக்களின் விசுவாசமும்,நம்பிக்கையும் தேசிய முன்னணியின்பால் இருந்ததால்தான் 2004 பொதுத்தேர்தலில் நாங்கள் 100% வெற்றியடைந்தோம்.மக்களின் தேவைகளையும்,அனைத்து இனங்களுக்கும் சமூக,பொருளாதர மேம்பாட்டையும் தேசிய முன்னணியால் மட்டுமே வழங்க முடியும் என்பதை இந்தியர்கள் எப்போதும் உணர்ந்துள்ளார்கள்" என்று அவர் கூறினார்.

(நன்றி: மலேசியா கினி இணையத்தளம்)

மலேசிய அமைச்சரவையில் இந்தியர்களின் ஒரே பிரதிநிதியாக இருக்கும் சாமிவேலு,இறுதியில் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார்.அரசாங்கத்தின் கொள்கைகளால் மலேசிய இந்தியர்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள் என்பதையும்,அரசாங்கம் இத்ற்கு உடனடி தீர்வு காணவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ள சாமிவேலு,மலேசிய இந்தியர்கள் இன்னும் அம்னோ தலைமையிலான அரசாங்த்தின் மேல் நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்று கூறியுள்ளதை நினைத்து அழுவதா,சிரிப்பதா,என்று தெரியவில்லை!!பிறகு மற்றொன்றும் கூறியுள்ளார், "இதுவரை அரசாங்கம் எடுத்துள்ள முயற்சிகளுக்கு பாராட்டும்,நன்றியும் தெரிவிக்கும் அதேவேளை,"சாமிவேலு இதன்மூலம் தனது அம்னோ முதலாளிகலிடம் தனக்கிருக்கும் விசுவாசத்தை மறு உறுதி செய்துள்ளார்.

இதுவரை இந்தியர்களின் நிலையை மேம்படுத்த அரசாங்கம் என்ன செய்தது??

இதற்கு சாமிவேலுவோ,மற்ற மஇகா தலைவர்களோ நேர்மையான பதிலை சொல்வார்களா??

அரசாங்கம் எதுவுமே செய்யவில்லையென்று நான் கூறவில்லை,செய்தது;நாம் 100 கேட்டால்,அதில் 4- 5 செய்தது.அந்த 4-5க்கும் மஇகாவும் அதன் தலைவர்களும் வாழ்த்துரைகளும் நன்றியுரைகளும் கூறி ஆர்ப்பட்டங்கள் புரிவர்;ஏதோ உலக மகா காரியத்தை சாதித்ததைப் போல் தம்பட்டம் அடித்துக் கொள்வார்கள்!!சமுதாயத்தின் தலைவர்கள் என்று தங்களை பாரைச்சற்றிக்கொள்ளும் இவர்கள் முதலில் என்ன செய்திருக்க வேண்டும்,இது எங்களுக்கு போதாது,முழுமையாக கொடுங்கள்,இல்லாவிட்டால் இன்னும் அதிகமாக கொடுங்கள்;பிச்சைப்போடுவதைப் போல் கொடுக்காதீர்கள் என்று கேட்டிருக்க வேண்டும்!!அதைத்தான் மக்கள் தங்கள் தலைவனிடம் எதிர்ப்பார்ப்பார்கள்!அவர்கள் போடும் பிச்சையை எடுத்துக் கொண்டு காத்திருப்போம் என்ற வாசகங்களையல்ல!!எதுவரை காத்திருப்பது??காத்திருந்து,காத்திருந்து விரக்தியின் உச்சிக்கு சென்றதன் வெளிப்பாடுதான் கடந்த 25 நவம்பர் தேதி எற்பட்ட பேரெழுச்சி!!

அரசாங்கத்தின் ஒவ்வொரு முடிவுகளும்,அமைச்சரவையில் இந்திய சமுதாயத்தின் பிரதிநிதி என்ற் முறையில் சாமிவேலுவைத் தாண்டித்தான் வருகிறது,பிறகெப்படி இத்தனை நாளும் நம் சமுதாயம் இவ்வளவு வஞ்சிக்கப்ப்ட்டது???

இவ்வள்வு நாளும் மலேசிய இந்தியர்களுக்கு எந்த்வொரு அதிருப்தியும் இல்லை,அதெல்லாம் சும்மா என்று கூவி வந்த சாமிவேலுவுக்கு,ஏன் சமுதாயத்தின் மீது திடிர் கரிசணை??

நெருங்கிவரும் பொதுதேர்தலினாலா??

இன்று எமது அதிருப்திகளை பற்றி பேசிவிட்டதால்,மக்கள் தம்மை தொடர்ந்து ஆதரிப்பர் என்று தப்பு கணக்கு போடுகிறார் சாமிவேலு!!ஹிண்ட்ராஃபின் உதயத்திற்கு பிறகு,மலேசியத் தமிழ் மக்கள் விழித்துக் கொண்டனர் என்று சாமிவேலு இன்னும் உணரவில்லை போலும்!!ஹிண்ட்ராஃபையும் மக்கள் சக்தியையும் எதிர்க்கும் எவரையும் மக்கள் நம்பப் போவதில்லை!!சாமிவேலு பல சந்த்ர்ப்பங்களில் ததம் ஹிண்ட்ரஃபை வெறுப்பதை உறுதி செய்துள்ளார்,அகவே,மக்களின் ஆதரவை அவர் எதிர்பார்ப்பது வீண்!!!


ஹிண்ட்ராஃபின் எழுச்சியை மறுப்பதற்கு இவர் சொன்ன காரணங்களை வைத்தே நமது உரிமைகளை மறுக்கப் போகிறார்கள்,அதற்கு முதல் அச்சாணிதான் நேற்றைய மாநாட்டில் நஜீப்பின் உரை!!!(இதைப்பற்றி பிறகு விவாதிப்போம்)

மக்கள் சக்தியை தோற்கடிப்பதற்கு பலரும் பலவாறு முயன்றாலும் முடியாது!!

ஏனென்றால்,

அரசாங்கம்தான் அவங்க பக்கம்,ஆண்டவன் நம்ம பக்கம்!!

மக்கள் சக்தி வெல்லும்!!





2 comments:

Sathis Kumar said...

சகோதரரே, தாங்கள்தான் 'காந்தி போராடினார்' எனும் கவிதையை ஓலைச்சுவடிக்கு அனுப்பினீர்களா? அக்கவிதைக்கு நிறைய வாசகர்கள் பாராட்டுக் கடிதம் அனுப்புகிறார்கள்..

தமிழுக்கும் சமுதாயத்திற்கும் தொடர வேண்டும் உங்கள் பணி...
வாழ்த்துகள்..

தமிழ் பெயரில்லா தமிழன்(SATEES) said...

நான்தான் அனுப்பினேன் தோழரே,
அந்த கவிதை உரிமைப்போரில் இருப்பதை விட ஓலைச்சுவடியில் இருந்தால் பொருந்தும் என தோன்றியது,அனுப்பினேன்!!

பாராட்டுகள் எனக்கல்ல,கவிதைக்குமல்ல....
நம் இனத்தின் உரிமைக்காக குரல் கொடுத்து,இன்று அடிப்படை மனித உரிமை மீறல்களுக்கு உட்பட்டிருக்கும்,அண்ணன் உதயகுமார் மற்றும் தோழர்களையே சாரும்!!

அவர்கள் எழுப்பிய தீயில் ஒரு சிறுபொறி நான்!!

நண்பரே,இன்னுமொரு தகவல்,
தங்களது வலைப்பதிவை வாசித்த பிறகுதான் 25 நவம்பர் 2007,உரிமைப்போர் ஆகிய இரு பதிவுகளை தொடங்கினேன்!!
ஆகவே,அந்த பாராட்டுகள் உங்களையும் சாரும்!!

என்னுடைய முதல் பிரசுர கவிதையே பாராட்டுகள் பெறுவது மகிழ்ச்சி!!!
தொடர்ந்து எழுதுவேன்!!

தங்கள் அனுமதியோடு கவிதையை உரிமைப்போரில் நான் மீழ் பிரசுரம் செய்யலாமா??